ஆங்காங்கே திருடிய சில பதிவர்களின் வார்த்தைஜாலங்கள் சிறிய சிறிய ட்விட்ஸ்களாக..
உடன்பாடில்லையெனின் எளிதாய் ஒதுங்கிக்கொள்ளும், துண்டித்துக் கொள்ளும் வாய்ப்பிருப்பதையறிந்தும் அடித்துக்கொ’ல்’கிறோம் இணைய(வெட்டி)வாதங்களில்- ஈரோடு கதிர்
'சிலர் அறிவுரைகளை கேட்கும் போது திருந்திவிட தோன்றுகிறது, அப்படியாவது அவர்கள் அறிவுரைகளை நிறுத்தி தொலைப்பார்களா என்று''- யாரோ
அப்பா(ம்மா) ஆவதில் இளமை(!) தொலைவதில்லை. இளைய சகோதர உறவுகளுக்கு குழந்தை பிறந்து பெரியப்பா(ம்மா) ஆகும் போது இளமை புட்டுக்கிட்டுப் போய்டுது- ஈரோடு கதிர்
மாண்புமிகு புரட்சிதலைவி அவர்கள் விரைவில் மதுவிலக்கை அமல்படுத்த இருப்பதாக வதந்தி உலவிவருவதால் அதற்கு முன் ஒரு முறையாவது இந்த பீர் என்று சொல்லபடுகிற உற்சாக பானத்தை குடித்துப்பார்த்துவிட நினைத்திருக்கிறேன்- அதிஷா
காந்தி பிறந்ததற்கு வெள்ளைக்காரன் கவலைப்பட்டானானு தெரியல, ஆனால் இந்தியக்குடிமகன்கள் இப்போது பெருங்கவலையில் #oct 2 -ஈரோடு கதிர்
அதென்னமோ தெரியல! பரட்டைத் தலையும், தாடியும்தான் இப்போதெல்லாம் ஹீரோக்களின் அடையாளம் என்பதை எம்ஜிஆர், சிவாஜி படம்பார்த்து வளர்ந்த அம்மாக்கள் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள்.- ஜீ
சிம்கார்டுபோல் அவ்வப்போது மனதை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பிருந்தால் எப்படியிருக்கும்-ஈரோடு கதிர்
மேக்கப்பு என்கிறதே மானவாரியா மூஞ்சில அப்புறதுதானே? என அப்புராணியாக் கேக்கிற பொண்ணுங்க நம்ம நாட்டில ஏராளம்! அதுங்களைச் சொல்லிக் குற்றமில்லை.- ஜீ
உடல் நிலை சரியில்லாத போது கிடைக்கும் அட்வைஸ்களின் இம்சையை விட உடல் நிலையால் கிடைக்கும் இம்சை எவ்வளவோ மேல்.- கேபிள் சங்கர்
எல்லாக் காதல் கவிதைகளிலும் யாரோ ஒருத்தியின் வாசம் படிந்துதான் கிடக்கிறது சிலசமயம் அவள் அறிந்து பலசமயம் அறியாமல்- ஈரோடு கதிர்
எந்த திரைப்படம் உங்கள் இயல்பு வாழ்க்கையில் இரண்டு நாட்களுக்கு உங்கள் பணிகளின் ஊடே திரைப்படத்தின் காட்சிகள் உங்கள் மனக்கண்ணில் வந்து போனால் அந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்பேன்- ஜாக்கிசேகர்
கடவுளே உனக்கு கருணையே இல்லையா.. மொக்கை மசாலா படங்களிடமிருந்து எங்களை காப்பாற்று யதார்த்த படமொக்கைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்!- அதிஷா
“இந்த நாள் உன் கேலண்டர்லகுறிச்சு வச்சிக்கோ…” என்று தலைவர் பேசும் வசனம் (இந்த வசனத்தைப் பேசி தான் விஜய் தனது அப்பாவிடம் தனக்கும் நடிக்க வரும் என்று ப்ரூவ் செய்தாராம். ஐய்யோ ராமா!)- Babyஆனந்தன்
பார்த்து ரசித்த குறும்படமொன்று,,
5 comments:
எல்லாக் காதல் கவிதைகளிலும் யாரோ ஒருத்தியின் வாசம் படிந்துதான் கிடக்கிறது சிலசமயம் அவள் அறிந்து பலசமயம் அறியாமல்- ஈரோடு கதிர்ஃஃஃஃஃஃவணக்கம் சகோ...பதிவு அருமை.அதிலும்இப்பகிர்வு சூப்பர்.வாழ்த்துக்கள்.
எல்லாக் காதல் கவிதைகளிலும் யாரோ ஒருத்தியின் வாசம் படிந்துதான் கிடக்கிறது சிலசமயம் அவள் அறிந்து பலசமயம் அறியாமல்- ஈரோடு கதிர்ஃஃஃஃஃஃவணக்கம் சகோ...பதிவு அருமை.அதிலும்இப்பகிர்வு சூப்பர்.வாழ்த்துக்கள்.
நல்ல தொகுப்பு... ரசித்தேன்...
பகிர்வுக்கு நன்றி… தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
ரசிக்க வைத்த தொகுப்புகள்.
சிறப்பான தொகுப்பு! நன்றி!
இன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in
Post a Comment