வருந்திக்கொண்டிருக்கிறேன்
சில நிமிட தாமதத்தால்
தவறவிட்ட
பேரூந்துக்காய் அல்ல!
இன்னுமொரு பேரூந்து
வரும் வரைக்கான
காத்திருப்பு
மணித்துளிகளுக்காய்...!!
என்னை
வெறித்துப்பார்த்தபடியே
ஆங்காங்கே
அலைகிறது
ஆண் எனும் கொடிய மிருகங்கள்..
சிலவேளை
அடுத்து பேரூந்து
வருவதற்கிடையில்
மிருகங்களின் பசிக்கு ஆளாகலாம்..
இல்லை
என்னை கொன்றேனும்
பசியை தீர்த்துக்கொள்ளலாம்...
இல்லை
நானே என்னை
மாய்த்துக்கொள்ளலாம்....
எதுவும் நேரலாம் எனக்கிங்கே
பெண்கள் மிருக
வேட்டையாடப்படும்
தேசம் இது..
இப்படிக்கு
இன்னுமொரு பேரூந்து
வரும் வரையிலும்
காத்திருப்பவள்..
10 comments:
ulaka avalam..
நிலைமை வேதனைக்குரியது....
சோகமே..
உண்மையான நிலைமகள் அழகான வரிகளில் வடித்துள்ளீர்கள் நண்பா
வருந்த தக்க உண்மை.
ஒரு பெண்ணின் மனநிலையில்....அருமையாக வந்திருக்கிறது ரியாஸ் !
அருமையாக வந்திருக்கிறது,,
அருமையான சாட்டையடி கவிதை!
இன்று என் தளத்தில்
கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html
அருமையாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே.
அன்பின் ரியாஸ் - அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் பேருந்து நிறுத்தக் கொடுமைகள் விரைவினில் தடுக்கப்பட நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment