பாட்டி வைத்தியமா ஆங்கில வைத்தியமா எது சிறந்தது?

விஜய் தொலைக்காட்சியின் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியில் அவ்வப்போது ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெறும்! அது போலவே கடந்தகிழமை இடம்பெற்ற விவாதமும் கொஞ்சம் காரசாரமாக இருந்ததுடன் சுவாரசியமாகவும் இருந்தது.. இது போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொருவரின் நடைமுறை வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டது என்பதனால் இது கொஞ்சமேனும் பயனுள்ளதாக தோன்றியது!

இன்றைய உலகில் நோய் என்பது ஏழை பணக்காரன் பாகுபாடின்றி அனைவருக்கும் வரக்கூடியது.! பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து தாக்கும் சில சிறிய நோய்கள்,வலிகளுக்கான நிவாரணங்களாக வீட்டிலே சுற்றுச்சூழலிலே கிடைக்கும் இயற்கையான பொருட்களைக்கொண்டு நிவர்த்தி செய்து கொள்வதுதான் இன்றைய அநேக கிராமபுறங்களிலும் சில நகரத்து வீடுகளிலும் தாய்மார்கள் பாட்டிமார்கள மூலம் நிகழ்ந்து வருகின்றன.. இவற்றை பாட்டிவைத்தியம், நாட்டுவைத்தியம், கைவைத்தியம் எனவும் அழைப்பர்!!

இந்த நீயா நானாவில் அலசப்பட்ட விடயம் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் அவற்றுக்கு வீட்டிலுள்ள தாய்மார்களோ பாட்டிமார்களோ எந்தவித வைத்திய ஆலோசனையுமின்றி செய்யும் வைத்தியம் சரியானதா அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப்பற்றியே.. இதிலே நாங்கள் செய்யும் நாட்டு வைத்தியம் சரியானதே அதனால் உடனடி நிவாரணம் கிடைக்கிறது என்று வாதாட தாய்மார்கள் ஒரு பக்கமாகவும்.. இல்லை வீட்டிலே செய்யப்படும் வைத்தியம் கொடுக்கப்படும் மருந்துகள் பிழையானது என்றும் எல்லா நோய்களுக்கும் ஆங்கில வைத்தியரையே நாடவேண்டும் என்றும் சில நோய்களுக்கு மருந்தோ வைத்தியமோ தேவையில்லை என்று வாதாட வைத்தியர்கள் ஒரு பக்கமாகவும் இருந்தார்கள்..

இந்த விவாதத்திலே நான் கவனித்த சில முக்கிய விடயங்கள்..  தாய்மார்கள் சொன்ன அனைத்து வைத்திய முறைகளுக்கும் அவை தேவையில்லை, கூடாது, பக்க விளைவுகள் வரும் என்ற முறையில் நிராகரித்தார்கள்.. ஒருவேளை ஒரு சில நல்ல பாட்டிவைத்தியங்களையாவது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு காரணம். அவர்களின் தொழில் தர்மமாகவும் அவர்களின் பிழைப்புக்கே ஆப்பு வைக்கும் என நினைத்திருக்கலாம்! ஆனால் அந்த வைத்தியர்களின் அநேக வாதங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருந்தது! சில பெண்மனிகளினதும் பாட்டி வைத்தியத்தின் பக்கம் உட்காந்திருந்த ஒரு வைத்தியரினது விட்டுக்கொடுக்காத சில வாதங்களினால், சில வைத்தியர்கள் ஆடித்தான் போனார்கள்.. ஆனாலும் அவர்களின் சில கூற்றையும் மறுக்கமுடியாது! சில பாட்டிவைத்தியம் உடனடி தீர்வைக்கொடுத்தாலும் அவை நீண்டகால பின்விளைவுகளை கொடுக்ககூடியவை!!  இதில் ஒரு ஆச்சர்யம், நம் எல்லா வீடுகளிலும் குழந்தைகளுக்கு நீராட்டி முடிந்தவுடன் பவுடர் போடுவது வழக்கம் அதுவும் கூடாது என்பதாகவே கூறினார்கள்!! அந்தக்கூற்றால் கோபினாத் உடபட பலரும ஆடித்தான் போனார்கள்.. இதுபோன்ற நம் வீடுகளுக்கும் சமூகத்துக்கும் உபயோகமான வாதவிவாதங்களை அவ்வப்போதாவது வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி குழுவிற்கு நன்றி!

அந்த நிகழ்ச்சியை நேரம் கிடைப்பின் பாருங்கள்..இங்கே!























Thanks.. Source  Dailymotion.com

4 comments:

தனிமரம் said...

நன்றி ரியாஸ் நல்ல ஒரு நிகழ்ச்சியையும், பதிவையும் படிக்க முடிந்தது! பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன் .. உண்மையில் இந்த விடயத்தை பேச வைத்த விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் ..

நமது பாரம்பரிய வைத்திய முறையில் நல்லது இருக்குத் தான் இல்லை என சொல்லவில்லை. ஆனால் பாட்டி வைத்தியம் முற்றிலும் தவறான நம்பிக்கையாகும். ஏனெனில் எதனையும் நாம் சரிவர ஆராய்ச்சி செய்யாமல் குழந்தைக்கு கொடுப்பது மூலம், பின்விளைவுகள் ஏற்படும். அதுவும் ஆசன வாயில் குச்சி வைப்பது எல்லாம் கொடுமை ...

படித்தவர்கள் கூட பாரம்பரிய வைத்திய முறையை முற்றிலும் நம்புவது சரியான ஒன்றல்ல ..

பாரம்பரிய முறைகளை ஆய்வு செய்து அவற்றை அறிவியல் படி பரிந்துரைக்கலாம். நல்லது கெட்டது தெரியாமல் அவற்றை பயன்படுத்துவது ஆபத்தை தரும் என்பது நிச்சயம்.

இப்பதிவை கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோ.

ஹுஸைனம்மா said...

பாட்டி வைத்தியங்கள் நல்லவைதான், சரியான வழிகாட்டுதலோடு செய்யப்படும்போது. அரைகுறையாகச் செய்யப்படும்போது அவையும் ஆபத்தையே தரும். சரியான முறையில் அறிந்து செய்யபப்டும்போது, பலன்கள் மெதுவாக இருந்தாலும், நீடித்ததாக இருக்கும்.

அதேசமயம், சில நோய்கள் முற்றும்போது, ஆங்கில மருத்துவமே உடன் பலன் தரும், சில சமயம் பின்விளைவுகளோடு.

//குழந்தைகளுக்கு நீராட்டி முடிந்தவுடன் பவுடர் போடுவது வழக்கம் அதுவும் கூடாது//
உண்மை, இது உடலிலுள்ள நுண்ணிய துவாரங்களை (வேர்வை வரும்) அடைத்துவிடும். அதிலுள்ள ரசாயனங்களும் கெடுதலே. தலையிலும் சிலர் பவுடர் போடுவார்கள், அது ‘வங்கு’ (பொடுகு வகை) உருவாக்கும்.

சில வருடம் முன்பு, புகழ்பெற்ற ஜான்ஸன் பேபி பவுடரை, “பேபி பவுடர்” என்று போடக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Easy (EZ) Editorial Calendar said...

பகிர்வுக்கு நன்றி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2