உங்களில் யார் கவுண்டமனி...


சுரேஷ்: டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா....
நரேஷ்: அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா....


இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார். பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்

கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?"
"கோழியினால்தான் முட்டை வந்தது"
"எப்படி?"
"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை

 'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?'
'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு
சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'


நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். 
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். 
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், 
ஐயா.



ஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது.... 
தலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்? 
ஆசிரியர் : கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டயிருந்து கடன் வாங்கணும்னு சொன்னா.. நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான். 
தலைமை ஆசிரியர் : ?!?!

"ஐயா, எனக்கு ஏழு குழந்தைகள்... உற்பத்திக்கேத்தபடி சம்பளம் கூட்டிக் கொடுங்க." "அந்த உற்பத்திக்கெல்லாம் சம்பளம் கூட்டித் தரமுடியாது... பேக்டரியிலேயே உற்பத்தியைக் கூட்டினவங்களுக்குத்தான் சம்பளம் கூட்ட முடியும்."

"ஏங்க டூ வீலர இவ்ளோ வேகமா ஓட்டிக்கிட்டு வர்றீங்க.. அந்த தெரு திருப்பத்துல உங்க மனைவி விழுந்துட்டாங்க பாருங்க.." "ஓ.. அப்படியா? நான் தான் என் காது செவிடாகி விட்டதுன்னு நெனச்சிக்கிட்டேன்."

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்? 
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்பவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.

கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் முதல்லேயிருந்தே ஒத்து வரல்லேன்னு எப்படிச் சொல்றீங்க?" "தேனிலவுக்கே ரெண்டு பேரும் தனித்தனியா போனாங்கன்னா பாத்துக்கயேன்."

"என் மருமகக்கிட்டே கோயில் மாதிரி வீட்டை வெச்சிக்கணும்னு சென்னது தப்பாப் போச்சு." "ஏன்? என்னாச்சு...?" "வாசல்லே ஒரு உண்டியலை வெச்சிட்டா."

நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க? 
டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு. நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம். 
டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்? 
நர்ஸ்: ???

"என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?" "தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலாபாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!"

டிஸ்கி- தலைப்பு ஏன் அப்பிடியிருக்குன்னு கேட்கிறிங்களா..? "உங்களில் யார் பிரபுதேவா" வரும் போது ,இப்பிடி நாங்க உல்டா பண்ணக்கூடாதாக்கும்.. ஆனா என்ன! எப்பிடித்தான் தலைப்பு வெச்சாலும் கூட்டம்தான் வரமாட்டேங்குது.. எப்பிடித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ? 




14 comments:

bandhu said...

All the jokes were gems!

காட்டான் said...

வணக்கம் ரியாஸ்..!
ஜோக் எல்லாமே அருமை..

  தேவையே இல்லாமல் சர்சையா எழுதினால் அல்லது நடிகைகள் பற்றி கிசு கிசு எழுதினால்கூட்டம் வரும்.. அதெல்லாம் உங்களுக்கு வராது.?(விரும்பாதவர்) இதில வேற கூட்டம் இல்லைன்னு புலம்பல் வேறா.?  ;-))

Anonymous said...

கோழி..முட்டை..எது முதலில் வந்தது? பல நாள் குழப்பம். தீர்த்து வச்சிட்டீங்க!!

Anonymous said...

super comedyyyyyyyyy

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

டிஸ்கி செம டாப்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்தும் கலகல...

தனிமரம் said...

கடிக்கின்றது என்று முடிவோடதான் பதிவு போட்டீங்களா ? அமலாபாலுக்குத்தான் இப்ப சீ சீ லோக்பாலுக்குத்தான் ஆதரவு கூட என்று சென்னையில் கேள்விப்பட்டேன்!

தனிமரம் said...

ஒரே புடவையில் அழகுதானே மனைவி அவருக்கு பொருளாதார கஸ்ரம் புரிந்திருக்கு போல ஹீ ஹீ!

தனிமரம் said...

கூட்டம் வரல என்று புலம்பாதீங்க பிறகு உங்க செயல்பாட்டை எல்லாம் மாத்த வேண்டி வரும் கட்சியில் சேர்ந்தால் கொள்கையை இழப்பது போல சுயேட்சையாகவே இருங்க சுதந்திரமா சிந்திக்கலாம்.

தனிமரம் said...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இரண்டு இடத்தில் இருப்பதால் ஓட்டுப் போடும்போது வாக்கு குறைய வழி இருக்கும் என நினைக்கின்றேன் கொஞ்சம் கவனியுங்க பாய்!

ஹாலிவுட்ரசிகன் said...

Blood Test ஜோக் அருமை. நன்றி பாஸ்.

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கல் !

சேகர் said...

sema comedy...

revathisanthoshkumar said...

paartha romba vedhanaiya iruku sir

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...