மணந்திருந்தால். அவர் நாடு கான் பயனம் தொடங்குமுன் அவரின் மனைவி எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருப்பார் ஒரு கற்பனை. நகைச்சுவைக்காக மட்டும்.
"தமிழ் பேசுபவர்களாகிய எம்மிடத்தில்தானே நகைச்சுவை, லொள்ளு, குறும்பு.கிண்டல்,கிளரல் எல்லாம் ஊறிப்போய் கிடக்கிறதே"
வாங்க கொலம்பஸ் ஐயாவின் இந்திய மனைவி எப்படியெல்லாம் வறுத்தெடுக்கிறாண்டு பார்ப்போம்.. பாவம் கொலம்பஸ் சிக்கிட்டாரு சிறுக்கிகிட்ட..
# எங்க போக கிளம்பிட்டிங்க....?
# யாருக்கூட போக போறீங்க...?
# எதுக்கு போறீங்க...?
# எப்படி போறீங்க...?
# எத தேடிக்கிட்டு போக போறீங்க...?
# அதுக்கு நீங்களேதான் போகனுமா வேற யாரும் இல்லயா...?
# உங்ககூட பொண்னுங்க யாராவது வாறாங்களா...?
# நீங்க போனா நான் தனியே இங்க என்ன பண்றது...?
# நானும் உங்ககூட வந்திடவா...?
# திரும்பி எப்ப வருவீங்க...?
# இரவுச்சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வந்து போகேலாதா...?
# திரும்பி வரும் போது எனக்கு என்ன கொண்டு வருவீங்க...?
# எனக்கெண்டா விளங்கள்ள என்னத்த கண்டுபுடிச்சி என்னத்த் கிழிக்க போறீங்கண்டு..
# எங்கிட்டயிருந்து விலகியிருக்கிறதுக்கு நீங்க போடுற ப்லேன்தானே இது...?
# நான் என்ன பாவம் பன்னிநேன் உங்களுக்கு...?
# இன்னும் எத்தன நாடு பாக்கியிருக்கு கண்டுபிடிக்க...?
# ஒரு கிழமையில வராட்டி நான் எங்க அப்பா வீட்டிக்கு போயிடுவேன்...
# எங்க போனாலும் எனக்கு செய்தி அனுப்புவிங்களா...?
# இதேமாதிரிதான் முன்னமும் ஒரு தடவ போய் மாசத்துக்கு பிறகுதான் வீடு திரும்பினீங்க..
# வீட்டோட இருக்குற மாதிரி ஒரு வேலய தேடிக்கேலாதா...?
# நேரத்துக்கு சாப்பாடு கிடைக்குமா எனணெய் தேச்சி குளிக்க முடியுமா...?
# போறத்தோட அப்டியே நல்ல பட்டு புடவையிருந்தா வாங்கிட்டு வாங்க...?
அப்பாடா இவ்வளவுத்துக்கும் பதில் சொல்லி கிளம்புறதுக்குள்ள... பத்து நாடு கண்டுபுடிச்சிடலாம்... புதிய நாடும் வானாம் மண்னாங்கட்டியும் வானாம்..
வீட்டோடயே இருந்திடலாம்னு நினைத்திருப்பாரு கொலம்பஸ் சார்..
நகைச்சுவைக்காக மட்டுமே யார் மனதையும் புன்படுத்த அல்ல.. அப்டியே ஒரு ஓட்டு போட்டா நல்லயிருக்குமில்ல.. நாங்க காசு பணமா கேட்கிறோம்... உங்க அன்பத்தான...
Riyas
13 comments:
:)
ஹி ஹி ஹி நல்லா இருக்கு
ம்ம்ம் நல்லா புரிஞ்சி வெச்சிருக்கீங்க நம்ம பொம்பலங்கள பத்தி..
Ha!!HAA!!HAAA!!what a joke?
PPattian,Aadhitthan,jillthanni,Anonymous Thanks
Riyas
ரியாஸ், சொந்த அனுபவமா ?..ஹி..ஹி.. வீட்டுக்கு வீடு வாசப்படிதான்..
கலக்கல் பதிவு..
இந்திய பெண்கள் மட்டுமில்லைங்க.. எல்லா நாட்டு பெண்களும் இப்படித் தான்... (கணவன் மேல் இருக்கும் அக்கறைய சொன்னேன்)
ஜெய்லானி அவர்களே..
சொந்த அனுபவம் இல்லிங்கோ.. எனக்கு இன்னும் கல்யானம் ஆகல்ல... நான் இன்னும் சின்னப்புள்ளதானுங்கோ.. நான் ஏதோ மொக்க பதிவா போட்டுட்டோமென்று கவலையோடிருந்தேன். நீங்க கலக்கல் பதிவுன்னு சொல்ரீங்க நன்றி..
அனு.. சரியா சொன்னீங்க போங்க விட்டுக்கொடுக்க மாட்டிங்களே...
ரியாஸ்....
கேள்வியின் நாயகனே
நீங்கதானா ரியாஸ்?
நல்லாயிருக்கு!
வாங்க நிசாமுதீன்..
வருகைக்கும்.. பின் தொடர்ந்தமைக்கும் நன்றி..
Riyas..
நல்லா தெளிவ்வா இருக்கேங்க போல!
முக்கியமான ஒரு கேள்விய விட்டுடீங்களே ரியாஸ்?
அது என்னனா.....
"நீங்க வர வரைக்கும் வீடு செலவுக்கு a .t .m அட்டைய குடுத்துட்டு போறீங்களா?"
SUPER
Post a Comment