தாயே
கருவினிலே..
பல காலங்கள் சுமந்தாய்
நெஞ்சினிலே..
உன் உயிரை
என் உனவாக்கினாய்..
உன் உதிரத்தை
என் உடலாக்கினாய்...!
துடி துடித்துப்போனாய்
துயரங்கள் கண்டாய்
தூக்கம் தொலைத்தாய்
என்னை ஈன்றெடுத்தாய்..
சில நிமிடங்கள்
நீயும் இற்ந்தே பிறந்தாய்
வார்த்தைகளினால்
வரைந்திட முடியா
வேதனைகளினால்...!
உலகை கண்டேன்
உன் கண்களினால்
உனர்வுகள் கொண்டேன்
உன் ஸ்பரிசங்களால்..
பாசங்களால்
பரவசம் கொடுத்தாய்.
மழலைச்சிரிப்பால்
மனம் மகிழ்ந்தாய்...!
தாயே
உன் பார்வைகளால்
பசியாருகிறேன்..
உன் வார்த்தைகளால்
கவலை மறக்கிறேன்..
உன் அன்பினால்
நானும் அழகாகிறேன்..
தாயே
உன் பாதங்களுக்கடியில்
சொர்க்கமாம்
சொல்கின்றனர்..
நான் சொல்கிறேன்
உன் மடியில்
புரண்டு விளையாடிய
காலம்
சொர்க்கத்தில் வாழ்ந்த
பொற்காலம்..
ஆகாயம் நோக்கி
பறந்த பறவை
இரை தேடி
பூமிக்கு வருவது போல
நான்
உலகின் எங்கு சென்றாலும்
என் ஞாபங்கள்
மட்டும்
உன்னிடம் வந்து சேரும்..!
அன்னையே
உன்னைப்போற்ற
ஓர் தினம் எதற்கு
அனுதினமும்
நீ
போற்றபடவேண்டியவளே...!
ரியாஸ்..
உங்கள் ஓட்டுகளினால் என் வாழ்த்தை பரப்புங்கள் உலகிற்கு..
14 comments:
அனைத்தும் மிக அருமை
பகிர்விற்கு நன்றி
ஆதரவிற்கு நன்றி
//உன் உயிரை
என் உனவாக்கினாய்..
உன் உதிரத்தை
என் உடலாக்கினாய்...!//
real love on mother. thanks for sharing.
Thanks.. Saravanan
அருமையான வரிகள்
Thanks... Jeilani sir
ரியாஸ் வார்த்தைகளில் விளையாடி அன்னையை மகிழ்வித்திருக்கிறீகள் மிக மிக அருமை.சபாஷ்...
ஓட்டும் போட்டுட்டேன்..
Thanks,,,
Malikka...
உங்கள் தாயின் மீதுள்ள பாச உணர்வுகள் உன்னதமான எழுத்துக்களை தந்திருக்கிறது.அருமை.
அருமையான கவிதைகள். பகிர்வுக்கு நன்றி.
கவிதை மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.
கவிதை அருமை....
தாயின் பெருமை-இங்கே
தந்துளீர் அருமை
சேயும் நீரே-எடுத்துச்
செப்பினீர் சீரே
பாராட்டு, நன்றி
நானும் அன்னைக்கு என்ற தலைப்பில் என் வலை
தளத்தில் கவிதை எழுதியுள்ளேன்
படித்துப் பாருங்கள்
புலவர் சா இராமாநுசம்
உலகை கண்டேன்
உன் கண்களினால்
உனர்வுகள் கொண்டேன்
உன் ஸ்பரிசங்களால்..
பாசங்களால்
பரவசம் கொடுத்தாய்.
மழலைச்சிரிப்பால்
மனம் மகிழ்ந்தாய்...!
anaiththum arumai
vaalththukkal
Post a Comment