கவிதை இரவு தேநீர் நீ..



சுற்றெரிக்கிறது
உன் மௌனங்கள்
நடுப்பகல் வேளை சூரியன் போல
வீசி விட்டுப்போ
சில புன்னகைகளாவது
நிழலாக
நிம்மதி தரட்டும்!

கவிதையின் அழகு
இரவின் இருள்
தேநீரீன் சுவை
எல்லாமே பிடிக்கிறது
உன் ஞாபகங்கள்
சேர்ந்தே
இருப்பதால்!

கோபம்
வெட்கம்
சினுங்கல்
வார்த்தை குழந்தைகள்
எத்தனை அழகானவை
நீ
பிரசவிக்கும் போது மட்டும்!



முகம் பார்க்கும்
கண்ணாடிகளுக்கு
மனிதர்களைப்போல்
பொய் சொல்ல
தெரிவதுமில்லை
மற்றவர்களின்
மனக்கஷ்டங்கள்
புரிவதுமில்லை..
காலையில்
கண்விழித்ததும்
கண்ணாடி முன் நின்றால்
உன்னழகு இவ்வளவுதான்
நீ இப்படித்தான் என
முகத்தில் அறைந்ததை போல்
உள்ளதை
உளளபடியே காட்டி
அதிர்ச்சியளிக்கிறது
வேதனையளிக்கிறது.. 
கொஞ்சமாவது
பொய்யாய் நடித்து
நம்பவைக்கும்
குறைந்த பட்ச
நியாயம் கூட
அதனிடமில்லை...
இனிமேலாவது
கண்ணாடிகளுக்கு
கற்றுக்கொடுக்க வேண்டும்
மனிதன்
மனசு நோகாமல்
நடந்து கொள்வதெப்படி 
என்பதை!!!


தேநீரை
உறிஞ்சும் வேளையில்
உன் ஞாபகங்களும்
உதடுகளில்
உரசி
உயிரைச்சுடுகிறது!!!


உன்னுலகத்தில்
நான் வாழ்ந்ததில்லை
என்னுலகத்தில்
நீ வாழ்ந்ததில்லை
உன்னுலகத்தை
நீ துறந்துவிடு
என்னுலகத்தை
நான் துறந்துவிடுகிறேன்
புதிதாய் பிறப்போம்
புதிய உலகத்தில்

இருவரும் ஒன்றாய்!!!






7 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அழகு.

”தளிர் சுரேஷ்” said...

அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

Unknown said...

#வீசி விட்டுப்போ
சில புன்னகைகளாவது
நிழலாக
நிம்மதி தரட்டும்!#
அழகான வரிகள்

அப்படியே இதையும் வாசித்து விடுங்கள்
உன்னைப் பிரிய மாட்டேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கவி அருமை.

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

பாலா said...

கவிதை மிகவும் அருமை நண்பரே

தனிமரம் said...

அருமையான கவிதை பகல் சூரியன் போல !ம்ம்ம் கவிச்சுவை ரசித்த வரிகள்.

ஹேமா said...

ரசனையோ ரசனை !

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...