மனசு...!

கனவுகள்
வருவதில்லை எனக்கு
வந்தாலும்
வாசல் தாண்டுவதில்லை...
வந்தவைகளும்
நினைவிலில்லை
கண் விழித்ததும்....
கண்கள் மட்டும்
என் பேச்சு கேட்க
மனசு மட்டும்
அலைகிறது
ஊர் உலகமெங்கும்
அளவு கடந்த
ஆசைகளோடு...
பசியினால்
பதறும் வயிறு
ஒரு புறம்.
தங்கத்தட்டில்
உணவுன்னும் மனசு
மறு புறம்....
மேக மெத்தைவிரித்து
வானவெளியில்
உறங்கிட ஆசையாம்
டைட்டானிக் பட
நாயகி மீது
காதலாம்
யாரிடம் போய் சொல்ல
இந்த மனசின்
அராஜகத்தை....
நினைப்பவை
கிடைப்பதில்லை
கிடைப்பவை
நினைப்பவையாக
இருப்பதுமில்லை....!
இருந்தும்
இன்னும் திருந்தவில்லை
இந்த மனசு...!

23 comments:

Chitra said...

நினைப்பவை
கிடைப்பதில்லை
கிடைப்பவை
நினைப்பவையாக
இருப்பதுமில்லை....!
இருந்தும்
இன்னும் திருந்தவில்லை
இந்த மனசு...!


.....அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்றார்களோ?

ம.தி.சுதா said...

//...பசியினால்
பதறும் வயிறு
ஒரு புறம்.
தங்கத்தட்டில்
உண்வுன்னும் மனசு
மறு புறம்....//
மனம் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஹேமா said...

அதுதான் மனசு ரியாஸ்.
திருப்தியே அடையாத மனசு !

ஸாதிகா said...

//மேக மெத்தைவிரித்து
வானவெளியில்
உறங்கிட ஆசையாம்
டைட்டானிக் பட
நாயகி மீது
காதலாம்
யாரிடம் போய் சொல்ல
இந்த மனசின்
அராஜகத்தை...// கருத்தாழமிக்க கவிதை படைத்த தம்பி ரியாஸுக்கு வாழ்த்துக்கள்.

http://rkguru.blogspot.com/ said...

மிக அருமை.....வாழ்த்துகள்

சைவகொத்துப்பரோட்டா said...

மிக பொல்லாததுதான், இந்த மனசு.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

மனசின் அலைபாய்தலை அருமையா சொல்லிட்டீங்க.. :-))

'பரிவை' சே.குமார் said...

மனம் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்லாயிருக்கு நண்பா...

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு பாஸ்.. அனுபவித்து எழுதி இருக்கிஈங்க...

அஷீதா said...

டைட்டானிக் பட
நாயகி மீது
காதலாம்
யாரிடம் போய் சொல்ல
இந்த மனசின்
அராஜகத்தை....//

இன்னும் டைட்டானிக் பட நாயகியெ நினைச்சுட்டா இருந்தா எப்புடி. புதுசா வந்தவஙளையும் கண்டுக்குங்க :)))

நாடோடி said...

அருமையாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள் ரியாஸ்... வாழ்த்துக்க‌ள்.

Aathira mullai said...

மனது என்று நாம் கட்டளைக்கு இணங்கி ஆசை பட்டுள்ளது? எல்லைகளற்ற வாமணமான மனதைப் பற்றி அருமையான கவிதை ரியாஸ்..

சுஜா செல்லப்பன் said...

அருமையான கவிதை
“கண்கள் மட்டும்
என் பேச்சு கேட்க
மனசு மட்டும்
அலைகிறது
ஊர் உலகமெங்கும்”

--நான் மிகவும் ரசித்த வரிகள் ..வாழ்த்துக்கள் !

செல்வா said...

//வந்தவைகளும்
நினைவிலில்லை
கண் விழித்ததும்....//
எனக்கும் அப்படித்தாங்க .. நானும் எப்படிஎலாமோ யோசித்துப் பார்ப்பதுண்டு. ஆனா நினைவுக்கு வரமாட்டேங்குது.

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. மனம் மாறும் முன் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

இது பகல் கனவா..!!!

Riyas said...

வருகைதந்து கருத்துச்சொன்ன வாழ்த்துச்சொன்ன

சித்ரா அக்கா,ம.தி.சுதா,ஹேமா அக்கா,ஸாதிகா அக்கா,rk.guru,சைவகொத்துபரோட்டா,Ananthi,சே.குமார்,வெறும்பய,mohamed faaique,அஷீதா,நாடோடி,ஆதிரா,சுடர்விழி,ப.செல்வகுமார்,மதுரை சரவணன்.ஜெய்லானி மற்றும் ஓட்டுபபோட்டவர்களுக்கும் வருகைதந்த அனைவருக்கும் நன்றிகள் கோடி...

dheva said...

தம்பி.. உங்கள் தளத்திற்கு இப்போதுதான் வருகிறேன்...

ரொம்ப அருமையா எழுதுறீங்க... எல்லாவற்றையும் வாசித்தேன்....இனி தொடர்ச்சியாய் வருகிறேன்.

வாழ்த்துக்கள் பா!

Anonymous said...

நல்ல கவிதை...வாழ்த்துகள்.

சௌந்தர் said...

மனம் மாறுகிறது

pinkyrose said...

ஹாய் ரியாஸ்!
பசியினால்
பதறும் வயிறு
ஒரு புறம்.
தங்கத்தட்டில்
உணவுன்னும் மனசு
மறு புறம்....

//
ம்ம் நானும் அப்டி தான்!

thiyaa said...

அருமையாக இருக்கிறது ரசித்து படித்தேன்

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...