புதிய உலகம்...!

விடியல் வந்து
விளக்கேற்றிய பொழுதொன்றில்
சாலைகளில் எங்கும் மனிதர்கள்
போவதும் வருவதுமாய்
நடையும் ஓட்டமுமாய்
நகர்ந்துகொண்டிருந்தார்கள்
நாலாபுறமும்....
குதூகலத்தை சுமந்த
குழந்தைகளும்
வாலிபத்தை தொலைத்த
வயோதிபர்களும்
வாழ்க்கையோடு போராடும்
மத்திய வர்க்கத்தினரும்
நகர்தலில் உள்ளடக்கம்...
கனவை சுமந்து சிலர்
கண்ணீர் சுமந்து சிலர்
புன்னகை சுமந்து சிலர்
புன்னகை தொலைத்து சிலர்
எதுவும் புரியாமல் சிலர்
அங்கும் இங்குமாய்....
விடிந்தும் விடியாத உணர்வுகளோடு
ஏக்கங்களுடனும்
எதிர்பார்ப்புகளுடனும்
கிராமத்து மனிதர்கள்....
இருந்தும் இல்லாத உணர்வுகளோடு
ஆசைகளுடனும்
அவஸ்தைகளுடனும்
நகரத்து மனிதர்கள்....
உலகம் மட்டும் தினம் தினம்
புதுசு புதுசாய்
அலங்கரித்துக்கொள்கிறது
மனிதன் மட்டும்
இன்னும் பழையவனாகவே
அதே பழைய மனதுடன்....

4 comments:

எஸ்.கே said...

//உலகம் மட்டும் தினம் தினம்
புதுசு புதுசாய்
அலங்கரித்துக்கொள்கிறது
மனிதன் மட்டும்
இன்னும் பழையவனாகவே
அதே பழைய மனதுடன்.... //
அருமையான யதார்த்த வரிகள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

உண்மையை சொல்லும் அற்புதமான வரிகள்..

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

செல்வா said...

//உலகம் மட்டும் தினம் தினம்
புதுசு புதுசாய்
அலங்கரித்துக்கொள்கிறது
மனிதன் மட்டும்
இன்னும் பழையவனாகவே
அதே பழைய மனதுடன்....
//

இந்த வரிகள் கலக்கலா இருக்குங்க ..!!!

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...