என் பாசத்திற்குரிய தமிழ் மக்களே உங்கள் பாரதிராஜா பேசுகிறேன் சாரி உங்கள் ரியாஸ் பேசுகிறேன். முன்னொரு காலத்தில் ஒரு தனித்தீவில் தனியொரு மனிதன் வாழ்ந்துவந்தான்.. அந்ததீவில் அவன்மட்டுமே தனிமனிதனாக இருந்தான். அவ்வாறு தனிமையில் வாழ்வது அவனுக்கு அலுத்துப்போய்விட்டது. நீண்ட நேர சிந்தனையின் பின் அவனுக்குள் ஒரு எண்ணம் தோன்றியது.. காட்டிலுள்ள மரக்கட்டைகளை பயன்படுத்தி ஒரு படகு செய்து அதைப்பயன்படுத்தி கடலில் பயணம் செய்து உலகில் வேறு திசைகளுக்கு பயணித்து புதிய நாடுகளை கண்டறிந்து அங்குள்ள மனிதர்களோடு சமூகமாக வாழலாம் என அவன் எண்ணவோட்டங்கள் பரந்துவிரிந்தது.. படகு செய்து அதில் பயணம்செய்வதுபோல் அவன் மனக்கண்ணிலும் தென்பட்டது.படத்தில் உள்ளதுபோன்று.
அவன் நினைத்தபடியே படகுகட்டும் வேலையை தொடங்கினான் அப்போது தூரத்தில் ஒரு பெண் தீவை நோக்கி வருவதை அவதானித்தான். படகு கரையொதுங்கியதும் அவனருகில் வந்தாள் அந்தப்பெண்.. அவள் அழகானவளாகவும் இருந்தாள். அருகில் வந்து என்ன செய்கிறாய் எனக்கேட்டாள் அப்போது அவன் நான் படகு கட்டிக்கொண்டிருக்கிறேன் என்றான் அதற்கவள் எதற்காக.. என திருப்பிக்கேட்டாள் அதற்கவன் இந்த தீவில் நான் மட்டும்தான் இருக்கிறேன் என்னால் தனிமையில் வாழமுடியவில்லை அதனால் மனிதர்கள் எங்காவது இருக்கின்றார்களா என தேடிப்போக போகிறேன் என்றான்.
அதற்கவள் நான் அவ்வாறு மனிதர்கள் உள்ள இடத்திலுருந்துதான் வருகிறேன்.. நீ நினைப்பதை போன்று மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது அவ்வளவு சுலபமானதல்ல அவ்வாறு வாழ்ந்து அலுத்துப்போய்த்தான் தனிமையை தேடி இங்கே வந்தேன் என்றாள். அவள் பேச்சைக்கேட்டதும் சிந்திக்க தொடங்கினான் அவள் சொல்வது சரியாக இருக்குமோ.. பிறகவள் நாம் இருவரும் இந்த தனித்தீவில் சேர்ந்து வாழ்ந்தால் என்ன.. யாருடைய தொந்தரவும் இல்லை உன்னைப்பாதித்த தனிமையும் என்னால் இல்லாமல் போய்விடும்.. உன் அபிப்ராயம் என்ன எனக்கேட்டாள். அவள் சொல்வது அவனுக்கு சரியாகவே தோன்றியது யாருமறியா புதிய உலகம் தேடிச்செல்வதைவிட இங்கேயே அவளுடன் இருந்துவிடலாம் என முடிவுசெய்தான்.
பிறகு படகுசெய்ய வெட்டிய மரக்கட்டைகளை பயன்படுத்தி வீடு வாசல் கட்டில் செய்து சந்தோஷமாக குடும்பவாழ்க்கையை தொடங்கினர் இருவரும் அந்ததனித்தீவில்(படம் பார்க்க)
இதன் ஒன் லைன் ஸ்டோரி என்னன்னா.. எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆனால் ஒரு பெண்ணால் உங்கள் எண்ணங்களை மாற்றமுடியும்.. An idea can change your life, but a girl can change your idea...
கதை
திரைக்கதை
வசனம்
டைரக்சன்
ரியாஸ்..
9 comments:
கலக்கல்தான்
.. எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆனால் ஒரு பெண்ணால் உங்கள் எண்ணங்களை மாற்றமுடியும்..
//
உண்மை தான் நண்பரே...
Wow Super :)
Nice!
நல்லாயிருக்கு..
உண்மை தான் ரியாஸ்...
ஐடியா ரியாஸ்....
//எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆனால் ஒரு பெண்ணால் உங்கள் எண்ணங்களை மாற்றமுடியும்.. An idea can change your life, but a girl can change your idea...//
அனுபவம்களா ...?
அருமை!!!!
Post a Comment