நீ ஒரு தாஜமஹால்
நித்தம் ரசிக்கிறது மனசு
தூரத்து நிலவை ரசிக்கும்
குழந்தையாய்..!
உன்னைப்பார்க்கும் பொழுதுகள்
என் விழிகளுக்கு
பண்டிகை...!
பாலைவனத்தில்
பருவபெயர்ச்சி மழையாய்
உன் புன்னகைகள்
துள்ளிக்குதிக்கிறது மனசு
நீண்ட கோடைக்குப்பின்
மழை கண்ட
விவசாயியாய்...!
பார்வைகளாலே பரிமாறுகிறாய்
புசிக்காமலே பசியாறுகிறேன்
கோடி வார்த்தைகள்
கோர்க்கிறேன் தினமும்
உன்னோடு பேச.
உன்னருகில் வந்ததும்
தவிக்கிறேன் வார்த்தைகளுக்காய்
வார்த்தை தேடும்
இந்த கவிதையாய்...!
8 comments:
//பாலைவனத்தில்
பருவபெயர்ச்சி மழையாய்
உன் புன்னகைகள்
துள்ளிக்குதிக்கிறது//
மிகவும் ரசித்த கவி வரி.
nallaayirukku nanpaa..
good one...
கவிதைக்கு வார்த்தைகள் அழகாகவே கோர்த்திருக்கிறீர்கள் ரியாஸ் !
ரொம்ப நல்லா இருக்கு!
ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் சகோ!
//நீண்ட கோடைக்குப்பின்
மழை கண்ட
விவசாயியாய்...!
//
நல்லா இருக்குங்க ., அதிலும் இந்த வரிகள் கலக்கல் .. ஏன்னா கோபில இப்ப செம மழை ..!
Nice Poetry..
http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html
//நீண்ட கோடைக்குப்பின்
மழை கண்ட
விவசாயியாய்...!
பார்வைகளாலே பரிமாறுகிறாய்
புசிக்காமலே பசியாறுகிறேன்/// nice lines riyas.. superb..
Post a Comment