வாழ்தல் இனிது,சாதல் இனிது..!

வாழ்தல் இனிது, மனிதர்களும் இனிமையானவர்கள், உலகமும் இனிமையானது அதிலுள்ள ஜீவராசிகளும் இனியது, இயற்கையும் இனிது, இளமையும் இனிது.. முதுமையும் நல்லது இறுதியில் இறந்து போவதும் இனிதுதான். போராட்டம் நிறைந்த இந்த வாழ்க்கையை இவ்வாறு இனியதாகவே சிந்தித்தால் வாழ்ந்தால், வாழ்க்கை ஒன்றும் கசப்பானதாக தோன்றவில்லை. இவ்வாறு சொல்வது நானல்ல! இந்த முண்டாசு தாத்தா..


இவ்வுலகம் இனியது;
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது;
தீ இனிது;
நீர் இனிது;
நிலம் இனிது;
ஞாயிறு நன்று;
திங்களும் நன்று;
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன;
மழை இனிது;
மலை இனிது;
காடு இனிது;
ஆறுகள் இனியன;
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும் இனியன;
பறவைகள் இனியன;
ஊர்வனவும் நல்லன;
விலங்குகளெல்லாம் இனியவை;
நீர் வாழ்வனவும் நல்லன;
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று;
பெண் இனிது;
குழந்தை இன்பம்;
இளமை இனிது;
முதுமை நன்று;
உயிர் நன்று;
சாதல் இனிது.

இன்று இந்த தாத்தாவுக்கு பிறந்த நாளாம்...

8 comments:

Rathnavel Natarajan said...

அருமை.

Unknown said...

பாரதியின் பிறந்த நாளை நினைவுகூர்ந்தீர் நன்றி!

புலவர் சா இராமாநுசம்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Yaathoramani.blogspot.com said...

இந்த இனிய நாளில் பாரதியின்
இனிய படைப்பையே பதிவாகக் கொடுத்து
அசத்தியமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5

சீனுவாசன்.கு said...

பார(தீ) பாட்டுத்(தீ)!

சுதா SJ said...

ஓ.... இன்று தமிழுக்கு பிறந்த நாளா??? பாரதி தாத்தாவுக்கு இந்த பேரனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

arasan said...

முண்டாசுவின் பெருமை கூறும் கவிக்கு வாழ்த்துக்கள்

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...