மழை வரும்
பொழுதுகளிலெல்லாம்
மனசும்
சேர்ந்தே நனைகிறது..
பூமியைத்தொடும் வரைக்கும்தான்
மழைத்துளிகள்
பூமியை தொட்டுவிட்டால்
நீர்த்துளிகள்..
பூமிக்காதலியை முத்தமிடும்
பூரிப்போடு
வானிலிருந்து விழுகிறான்
மழைக்காதலன்..
தாகம் தீர்த்து
மோகம் தீர்க்க வரும் காதலனுக்காய்
காத்திருக்கிறாள், வானம்
பார்த்தவளாய் பூமிக்காதலி..
உடல் நனையாமல்
குடைபிடித்துச்சென்றாலும்
மனசு மட்டும் நனைந்தே விடுகிறது
பரவசங்களால்..
11 comments:
Arumai Sago.
Tamilmanam 2.
@துரைடேனியல்
நன்றிங்க
@நண்டு @நொரண்டு -ஈரோடு said...
//அருமை.
வாழ்த்துக்கள்.//
நன்றி சார்!
காதல் மழை இந்தப்பக்கம் அதிகமாகவே பெய்யுது பாஸ்.... ஹா ஹா.... அழகு. :(
.உடல் நனையாமல்
குடைபிடித்துச்சென்றாலும்
மனசு மட்டும் நனைந்தே விடுகிறது
பரவசங்களால்..<<<<<<<<<<<<<<<<
மழை போல் அழகு கொட்டும் வரிகள்.... சூப்பர்
உடல் நனையாமல் குடை பிடித்துச் செல்வதா? மிகப் பெரிய பேய் மழை தவிர மற்ற மழை நேரங்களில் குடையே பிடிக்காமல் நனைபவன் நான். அவ்வளவு தூரம் மழைக்காதலன் நான். எனக்கு இந்தக் கவிதை பிடிக்காமல் போனால்தானே வியப்பு! மிகமிகமிக ரசித்தேன் ரியாஸ்! பிரமாதம்!
நல்லாயிருக்கு நண்பா கவிதை வாழ்த்துகள்
அழகான வரிகள்
படித்தேன். ரசித்தேன்.
அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."
உடல் நனையாமல்
குடைபிடித்துச்சென்றாலும்
மனசு மட்டும் நனைந்தே விடுகிறது
பரவசங்களால்.
முடிவு அருமை..
அருமையான வரிகள்
Post a Comment