ஜோக்ஸ் டாக்டர்..

ஏன்யா விஷத்தை சாப்பிட்டே?”
வயித்துவலி தாங்கமுடியலே டாக்டர். சாகதான் சாப்பிட்டேன்.”
நீ ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுக்கறே… நாங்க எதுக்கு இருக்கோம். இங்க வந்து அட்மிட் ஆனா நாங்களே அதைப் பார்த்துக்குவோமில்லே!

டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு
மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி
இருக்கு?
நோயாளி…- பரவாயில்லை குணமாயிட்டுது
டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லை
ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு
வந்தடறேன்….

 டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.

ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் ஒரு வாரம் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : !!!




 நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"

உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?

நர்ஸை டாவடிக்க ஏதாவது ஒரு நோய் பெயரைச் சொல்லிட்டு இந்தாளு அடிக்கடி வர்றான்!”

“டாக்டர் தான் போலின்னா பேஷண்ட்டுமா?”

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !




டாக்டர் : நூறு பர்சன்ட் கரெக்டான நேரத்துக்குத்தான் உங்க தாத்தாவைக் கூட்டி வந்திருக்கீங்க!

அவன் : என்ன டாக்டர், அவ்வளவு மோசமான பண நெருக்கடியா உங்களுக்கு?

”ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'

'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'
உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க !'


டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது.....

காட்டுங்க உங்க பர்ஸை !'

25 comments:

Jaleela Kamal said...

///டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்//


ஹாஹா சரியான ஜோக்ஸ்

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹா ஹா ஹா...சூப்பர் காமெடி பிரதர்.

ஒரு ஜோக் இரண்டு தடவை ரிபீட் ஆகி இருக்கு (நெஞ்சுல் என்று தொடங்கும் ஜோக்)

வஸ்ஸலாம்..

Kumaran said...

நல்ல விமர்சனம்..நன்றி.வாழ்த்துக்கள்.

சைக்கோ திரை விமர்சனம்..

Kumaran said...

Heeeee..hEEEEE .என்ன விமர்சனமுன்னு சொல்றேன்னு பார்க்குறீங்களா..இதுவும் ஜோக்ஸ் தான்.
கல..கல..கல..கல..நல்ல காமெடி..நன்றி.

ஆமினா said...

// டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்///


செம செம...

ஆமினா said...

//நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !//

ஹி...ஹி...ஹி...


சூப்பர் கலெக்‌ஷன்...

தாமரைக்குட்டி said...

நறுக் ஜோக்ஸ், அடுத்தவாட்டி நாற்றுல நீங்களே லிங் tag பண்ணிடுங்க!

Riyas said...

வாங்க ஜலிலா அக்கா.. ரொம்ப நாளைக்குப்பிறகு வந்திருக்கிங்க..

நன்றி அக்கா..

Riyas said...

வா அலைக்கும் வஸ்ஸலாம்

வாங்க சகோ.. உங்கள் வருகைக்கு ரொம்ப மகிழ்ச்சி..

Riyas said...

என்னது விமர்சனமா..?

Riyas said...

அடப்பாவிகளா.. இப்புடியுமா ஜோக் அடிக்கிறது,, அவ்வ்வ்வ்வ்

Riyas said...

நன்றி..

Admin said...

ம்..அனைத்தும் சிரிக்க வைத்தது தோழர்..

Riyas said...

நன்றி நன்றி..

Riyas said...

வருகைக்கு நன்றி ஆமினா அக்கா..

Riyas said...

ஓக்கே பிரதர்.. உங்கள் முதல் வருகைக்கு நன்றி..

Riyas said...

நன்றிங்க உங்க வருகைக்கு..

நிரூபன் said...

வணக்கம் ரியாஸ்,
எல்லாமே செம சோக்குகள்.

டாக்டர் ஆப்பரேசன் செஞ்சது தான் இன்னமும் காமெடியாக இருக்கு.

துரைடேனியல் said...

அனைத்தும் அருமை. ஜோக்சை விட தங்களது கவிதைகள் அருமை.

அம்பலத்தார் said...

கல கல துணுக்குத்தோரணம் அசத்தல்

Mohamed Faaique said...

எங்க புடிச்சீங்க பாஸ் இவ்வளவு ஜோக் ,,, எல்லாம் செமையா இருக்கு...

பாலா said...

ஹா ஹா ஹா வெகு நாட்களுக்கு அப்புறம், நிறைய டாக்டர் ஜோக்குகளை ஒருங்கே கேட்ட மாதிரி இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா ஹா ! நல்ல தொகுப்பு சார் ! நன்றி !

சமுத்ரா said...

ஹாஹா சரியான ஜோக்ஸ்

rajamelaiyur said...

இதை படிச்சா கண்டிப்பா டாக்டர் கிட்ட தான் போகனும்

Sugar Baby Song Lyrics Thug Life

 Sugar Baby Song Lyrics In Tamil   பெண் : என்ன வேணும் உனக்கு கொட்டி கொட்டி கிடக்குது இன்னும் என்ன வேணும் உனக்கு சொர்க்கம் இங்கு இருக்கு பெண்...