பாலைவன மோகங்கள்!


வார்த்தைகள்
சண்டையிட்டுக்கொள்கின்றன
உன்னைப்பற்றி எழுதும்
கவிதைகளில்
இடம்பிடித்துக்கொள்ள.
நகரப்பேரூந்தில்
இடம்பிடிக்கும்
பயணிகள் போல...!

பாலைவனத்தில்
பருவபெயர்ச்சி மழையாய்
புன்னகைகளை
பொழிந்து செல்கிறாய்.
துள்ளிக்குதிக்கிறது மனசு
நீண்ட கோடைக்குப்பின்
மழை கண்ட
விவசாயி போல்...!

சாலையில் நீ நடந்தால்
வேடிக்கை பார்க்கிறது
என் கண்கள்
காட்சி மறையும் வரை.
பேரூந்தின் ஜன்னல் வழி
வேடிக்கை பார்க்கும்
சிறுவன் போல..!

உங்கள் சாலைகள்
எப்படியோ தெரியவில்லை
எங்கள் சாலைகள்
விபத்துகள் நேரலாம்
சற்றுமுன்னும்
ஒரு சிலர்
சற்றெண்டு விழுந்து
எழுந்து செல்கின்றனர்..


உன்னை பருக வேண்டும்
உன்னில் படர வேண்டும்
உன்னில் உறைய வேண்டும்
உன்னில் கரைய வேண்டும்
உன்னில் மிதக்க வேண்டும்
உன்னில் மூழ்க வேண்டும்
உன் முத்தத்தில்
நனைய வேண்டும்
உனக்குள்ளே
தொலைய வேண்டும்
உனக்குள்ளே
இறந்திட வேண்டும்
என் காதல்
மழையே!!!
ஓராண்டாய்
உன்னைப்பார்த்ததில்லை
நான்
ஓர வஞ்சனையெதற்கு
ஓடி மறைவதெதற்கு
கடக்கட்டும்
கார் மேகங்கள்
நனையட்டும்
பாலைவன மோகங்கள்
சிரிக்கட்டும்
மனசின் தாகங்கள்!!


எல்லோருக்கும் ஹஜ்ஜுப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்.. ஈத் முபாரக்!!!




8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நினைத்ததெல்லாம் நடக்கவும் வேண்டும்... வாழ்த்துக்கள்...

Seeni said...

arumai sako!

ungalukkum-
vaazhthukkal!

Thava said...

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் பதிவுலகம் வருகிறேன்..நான் படிக்கும் முதல் கவிதை..ரசித்தேன்..நன்றி.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

good

சுதா SJ said...

கவிதை சூப்பர் தான்.... ஆனால் காதல் கவிதையோ என்ற ஜயம் வந்துவிட்டது... ஆவ்வ்......

தனிமரம் said...

பாலை வன தேசத்துக்கும் மழையை வேண்டும் கவிதை அருமை சகோ !இனிய ஈர்த்முபாரக் வாழ்த்துக்கள்!

தமிழினம் ஆளும் said...

அருமை.. வாழ்த்துக்கள்...

அகல் said...

உணர்வுகள் அடை மழையாய்க் கொட்டியது அருமை வாழ்த்துக்கள்..

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...