நம் சமூகத்தில் பெண்கள் என்பவர்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள். அவர்கள் மனதை புரிந்து நாம் செயற்படுகிறோமா! பெற்ற தாயை மதிக்கிறோம் அவள் நம்மை பத்துமாதம் சுமந்து பெற்றதால், சகோதரிகளை மதிக்கிறோம் நம்முடன் கூடப்பிறந்தவள் என்பதால், மனைவியை மதிக்கிறோம் நம்முடனே கூடவே வாழ்பவள் என்பதால். மற்ற பெண்கள் விடயத்தில் நம் பார்வை எவ்வாறிருக்கிறது.
பெண்களை காமப்பொருளாகவே பார்க்காதீர்கள், அதையும் தாண்டி அவர்களிடம் ஓர் புனிதம் இருக்கிறது! அதுதான் தாய்மை. அதை மதிக்காவிட்டாலும் கலங்கம் செய்யாமல் இருக்கலாமே. பெண்களின்றி இவ்வுலகில் இன்பமேது, அழகேது, நாமேது. அவர்களையும் சாதாரணமானவர்களாகவே பாருங்கள். ஆண்களை போலவே அவர்களுக்குள்ளும் உணர்வுகள் உண்டு, ஆசைகள் உண்டு குடும்பத்தை வழிநடத்தும் காப்பாற்றும் கடமையும் உண்டு. அதை மதியுங்கள் போற்றுங்கள். அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்குங்கள். ஆண்களிடத்தில் வேறொன்றும் அவர்கள் பெரிதாய் எதிர்பார்ப்பதில்லை!
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்களுடனே ஒன்றித்து வாழ்கிறோம். பிறந்ததும் தாய் மடி வளர்கையில் சகோதரிகள் அரவனைப்பு. வளர்ந்து மணந்தபின் மனைவியின் பாசம், வயதானவுடன் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் அன்பு. பெண் தொடர்பில்லாமல் நம் வாழ்கை நினைத்தும் பார்க்க முடியாதது.. எல்லோரையும் தாயாக சகோதரியாக பார்க்க வேண்டுமென்பதில்லை. அது சாத்தியமுமில்லை.. ஒரு சக மனிதராக மனுசியாக மதித்தாலே போதும்..!
அன்மையில் நான் பேஸ்புக்கில் வாசித்த வசனகவிதையொன்று இங்கே. . புல்லட் பாண்டி என்பவருக்கு சொந்தமானது.
மதிலை தாண்டி
அழகாய் பெரிதாய் வளர்ந்திருக்கும்
செம்பருத்தம் பூவின் செடி.
கிணற்றடில் இருந்து நீர் இறைத்து
இரு கையிலும் குடம் பிடித்து
எல்லா செடிகளுக்கும் நீர் இறைப்பது
எனது காலை வேலை.
இன்றும் செம்பருத்தம் பூக்கள்
அழகாய் அதிகமாய் பூத்திருக்கின்றன
வழக்கம் போல் நீர் ஊற்றும்
வேலையில் நான் இருந்தேன்.
"மாமி ........." .....ம் வந்துவிட்டாள் எதிர்வீடு ராட்சசி
"என்னம்மா........ ."
"பூ வேணும் மாமி...... "
" பறிச்சிகோ.........ஏலே...பாண்டி ...பறிச்சிகுடு "
"எத்தனை வேணும் ......".......இது நான்
"எல்லாம் பறிச்சி குடுடா ....".......அம்மா.
வெறுப்புடன் எல்லாம் பறித்து நீட்ட
அவள் தாவணியில் ஏந்தி கொண்டாள்
கோபமும் வெறுப்புமாய் இருந்தது
அப்பொழுது எனக்கு தெரியாது
" செம்பருத்தி பூ ........மாதவிலக்கிற்கு
சிறந்த மருந்து என்றோ.....அல்லது
பல மண பொடியுடன் செம்பருத்தியும்
கருவேப்பிலையும் தேங்காய் எண்ணெயில்
.சேர்த்து காய்த்து தலைக்கு தடவினால்
நன்கு முடிவளரும் என்றோ ..........."
காலம் தான் சில விசயத்திற்கு
பதில் தருகிறது..!
டிஸ்கி- இப்போது உங்கள் வசதிகருது தமிழ்மன ஓட்டுப்படடை இரு இடங்களில் கீழேயும் மேலேயும். நிறையப்பேரு தமிழ்மனத்த கானல்லன்னு சொல்லிட்டு எஸ்கேப்பாகிட்றாங்க. அதுக்குத்தான் இது. தமிழ்மன ஒட்டுப்பட்டை கீழே கொண்டு வர உதவிய அண்ணன்பன்னிக்குட்டி ராமசாமிக்கு மனமார்ந்த நன்றிகள்.
குஸ்கி- நம்ம பதிவுலக நண்பர்கள் ரொம்பப்ப்ப்ப் நல்லவர்கள் என்ன உதவி கேட்டாலும் செய்றாங்க.. அதற்காகவேண்டி கடன் எல்லாம் கேட்கப்படாது!
முஸ்கி- எல்லாம் படிச்சாச்சா பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க பிடிக்கல்லன்னாலும் ஓட்டுப்போடுங்க.
33 comments:
ஐய்யய்யோ தமிழ்மனத்தில் இனைக்க முடியாமல் இருக்கே,,
பெணகளைப் பற்றிய பார்வையும், அதனோடு அமைந்த கவிதை கருத்தும் நிறைவாக உள்ளது...
மேல ஒரு இடத்துல ஒட்டு போட்டாச்சு!
மறுபடியும் கீழ வந்து ஓட்டு போட்டா விடமாட்டீன்றாங்க கொஞ்சம் சொல்லி கள்ள ஒட்டு போடா ஏற்பாடு பண்ணுங்க!
சக மனுஷியாய் மதிப்போம்!
// ஷீ-நிசி said...
பெணகளைப் பற்றிய பார்வையும், அதனோடு அமைந்த கவிதை கருத்தும் நிறைவாக உள்ளது//
மிக்க நன்றி,,
// கோகுல் said...
மேல ஒரு இடத்துல ஒட்டு போட்டாச்சு!
மறுபடியும் கீழ வந்து ஓட்டு போட்டா விடமாட்டீன்றாங்க கொஞ்சம் சொல்லி கள்ள ஒட்டு போடா ஏற்பாடு பண்ணுங்க//
என்னது! கள்ள ஓட்டா..?
ஐய்யய்யோ
ஊழல் நடக்குதுன்னு சொல்லி அண்ணா ஹாசாரே வந்துடப்போறார்
// கோகுல் said...
சக மனுஷியாய் மதிப்போம்//
கரெக்டு
raittu
குஸ்கி ...முஸ்கி ...விஸ்கி கிடையாதா ?
பெண்கள் மீதான பார்வை குறித்த உங்கள் கருத்து உண்மைதான். மாற்ற இயலுமா?
தாய்மை, பெண்கள் பற்றிய காத்திரமான கருத்துப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.
பாண்டியின் கவிதையில் காமெடியும் கலந்திருக்கிறது.
ரசித்தேன் பாஸ்
"புல்லட் பாண்டி” கூடவெல்லாம் நட்பு வச்சிருக்கீங்க.. நீங்க பயங்கரமான ஆளு போல...
ஃபேஸ்புக் கவிதை நல்லாருக்கு
பதிவும், புல்லட் பாண்டியின் கவிதையும் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.
முதல் பத்தியில் சொல்லி இருக்கிற கருத்துக்கள் , நெகிழ வைத்தன.
அழகான கவிதையுடன் கூடிய உங்களின் ஆதங்கமான பெண்மையை மதிக்கும் பதிவு!
அழகான கவிதையுடன் கூடிய உங்களின் ஆதங்கமான பெண்மையை மதிக்கும் பதிவு!
அழகான கவிதையுடன் கூடிய உங்களின் ஆதங்கமான பெண்மையை மதிக்கும் பதிவு!
பெண்மையை போற்றுவோம்...
ஓடடு போட்டாச்சு,
பெண்மையை சிறப்பிக்கும் கவி பாஸ்
nice poem and also as nice article
மிக்க நன்றி சகோ அருமையான ஆக்கத்தினால் மனதை நெகிழ வைத்தீர்கள் .உண்மையிலேயே
தமிழ்மணம் ஓட்டுபட்டையை இங்கு காணவில்லை .மற்ற ஓட்டுகள் போட்டாச்சு .நன்றி பகிர்வுக்கு .
@சி.பி.செந்தில்குமார்
@koodal bala said...
@பாலா
@நிரூபன்.
@Mohamed Faaique
வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி
@N.H.பிரசாத்
@Chitra
@Nesan
@கவிதை வீதி # சௌந்தர்
@துஷ்யந்தன் said...
@சேகர் said...
@அம்பாளடியாள்
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றிங்க
அருமையான பதிவு சகோ.
ஃபேஸ்புக் கவிதை நல்லாருக்கு
கவிதையும் கட்டுரையும் மிக மிக அருமை
இரண்டுவோட்டு இல்லையே என்கிற
வருத்தத்துடன் எனது ஓட்டைப் பதிவு செய்கிறேன்
த.ம.12
அழகான கவிதையுடன்... பெண்மையை மதிக்கும் பதிவு...
அம்மா, மனைவி, மகள்......... பெண்களுடனான பிணைப்புகள் இனிமையானவை.
புதுக் கவிதை அதுவும் புரட்சிக் கவிதை காத்திருக்கு சகோ .
ஒரு சக மனிதராக மனுசியாக மதித்தாலே போதும்..!
உண்மைதான் நண்பா.
அஃறிணையில் தான் ஆண்கள் அழகு
உயர்திணையில் பெண்கள் தான் அழகு.
அழகு என்பதற்குத் தோற்றம் மட்டுமே அடையாளம் அல்ல..
அழகு அழிந்துபோகக் கூடியது.
அன்பு மனதில் என்றும் மாறாதது.
அன்பு என்றவுடன் ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வருவது தாய்தான்.
அன்னையைவிட அன்பில் சிறந்தவர்கள் யார் இருக்கமுடியும்..?
EID MUBARAK - பெருநாள் வாழ்த்துக்கள் நண்பா
Post a Comment