தொடர்கிறது...!

அழுகிறது குழந்தை
யுத்தமில்லா
உலகம்
வேண்டுமாம்..
கிடைக்குமா...?
உங்கள் பகுதியில்...!



பிறந்ததிலிருந்தே
பின் தொடர்கிறது
வறுமையும்
வயிற்றுப்பசியும்.
மடிவதற்குள்
முற்றுப்பெருமோ
இந்த தொடர்தல்....!



மழை பெய்யாவிட்டாலும்
மனித இரத்தம்
பாய்ச்ச வேண்டாம்.
பூமி
தொடர்ந்தும்
புன்னகைக்கும்...!



மனிதர்களை
நேசியுங்கள்
புன்னகைகளை
பரிமாருங்கள்
தூக்கிலிடுங்கள்
துயரங்களை
வசந்தங்கள்
வாசல்
வரலாம்...!



சில
நொடிகளாவது
குழந்தைகளாய் மாறி
குதூகலியுங்கள்
கொள்ளை
ஆசைகள் மறந்து...!



தாய்மையை போற்றுங்கள்
பெண்மையை மதியுங்கள்
தள்ளாடும் கிழவியின்
தளர்ந்த மார்பில்
காமம் தேடும்
உலகம் இது...!


பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டு.. ஏதாவது சொல்லிட்டு போங்க நண்பர்களே..

11 comments:

Ahamed irshad said...

நல்லாருக்கே கவிதை... அதிலும் கடைசி வரி அதிர்ச்சி+உண்மை....

யய்யாடி...

போட்டாச்சு ஓட்டு...

ஜெய்லானி said...

கவிதை ....சூப்பர்...

jillthanni said...

//தளர்ந்த மார்பில்
காமம் தேடும்
உலகம் இது...!//

உங்க கோபம் எனக்கு புரிகிறது நண்பா

ஹுஸைனம்மா said...

//கிடைக்குமா...?
உங்கள் பகுதியில்...!//

எங்க..?!! இந்தியாவில இப்படி வெளிப்படையா போர் இல்லியே தவிர, நிறைய எதிர்பார்த்துதான் வெளியே போணும். சாதி, மதம், அரசியல், லஞ்சம், ஊழல், திருட்டு, விபத்து....

எல்லா ஊரிலும் அளவில்லாத நிம்மதி கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்!!

Riyas said...

நன்றி உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்..

இர்சாத்
ஜெய்லானி
ஜில்தண்ணி
ஹுஸைனம்மா.

Raghu said...

//கிடைக்குமா...?
உங்கள் பகுதியில்...!//

இல‌வ‌ச‌மாக‌ வ‌ண்ண‌த்தொலைக்காட்சி பெட்டி, கேஸ் ஆகிய‌வையோடு த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏமாற்ற‌மும் கிடைக்கும்

எல்லாமே அச‌த்த‌ல், ஓரிரு கவிதைக‌ள் கொஞ்ச‌ம் வலியும் த‌ருகிற‌து

Riyas said...

Thanks Ragu..

சௌந்தர் said...

அருமை அருமை கவிதைகள் அனைத்தும் அருமை...

பனித்துளி சங்கர் said...

/////மனிதர்களை
நேசியுங்கள்
புன்னகைகளை
பரிமாருங்கள்
தூக்கிலிடுங்கள்
துயரங்களை
வசந்தங்கள்
வாசல்
வரலாம்...!//////


அனைத்திற்கும் கட்டளை விதிக்கும் தகுதி கவிஞன் ஒருவனுக்குத்தான் உண்டு . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்

yasar said...

கவிதைகள் மிகவும் அருமை.

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...