கடவுளுக்கோர் கடிதம்...!

முன்னொரு காலத்தில் கொஞ்சம் வயதுபோன கிராமவாசியும் அவரது மனைவியும் தனிமையாக வாழ்ந்து வந்தனர்.. இந்த வயதானவர் அளவுக்கதிகமான கடவுள் பக்தி கொண்டவர்.. தினமும் கடவுளை வணங்குவார், இவரின் பிரச்சினைகளை கடவுளிடம் முறையிடுவார், கடவுள் பக்தனாகவே வாழ்ந்து வந்தார்.. (எந்த கடவுள் அப்பிடின்னு கேட்கப்படாது)



இவர்கள் மிகவும் ஏழையாக கஷ்டப்பட்டே வாழ்ந்து வந்தனர்.. சிரிதாக விவசாயம் செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர். இவ்வாறு காலம் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு வறண்ட கோடை காலம் வரவே இவர்களின் விவசாய நிலங்களும் வாடியே போனது வறட்சியால்..
அத்தோடு சேர்த்து இவர்களின் வாழ்க்கையும் நீரில்லாமல் வறண்ட நிலம் போல ஆனது. வயிற்றுப்பசிக்கே என்ன செய்வதென்று புரியாமல்.. தவித்தனர் இருவரும்.


அப்போது அவரின் மனைவிக்கு ஒரு யோசனை தோன்றியது... அதை தன் கனவனிடம் கூறத்தொடங்கினார்.. " ஏங்க நீங்கதான் கடவுள் பகதனாச்சே.. எல்லாத்தையும் கடவுளிடம் முறையிடுவிங்க இந்த பிரச்சினையையும் கடவுளிடம் சொல்லி கொஞ்சம் காசு கேளுங்க.. ஒரு 80 ரூபாய் இருந்தால் மழை வரும் மட்டுக்கும் சமாளிச்சிடலாம்.. என்றார்.. இதன் படியே வழக்கம் போலவே கனவரும் கடவுளிடம் வேண்டினார் தன் தேவைகளை... இவவாறு சில நாட்கள் கழிந்தது காசும் வரவில்லை கடவுளிடமிருந்து எந்த பதிலுமில்லை..


சில நாட்கள் கழியவே.. மனைவியின் முணுமுனுப்பு தாங்கமுடியாமலும் கொஞ்சம் ஏமாற்றம், கோபத்துடன் கடவுளுக்கு கடிதம் எழுதலாமென் முடிவெடுத்து. கடிதம் எழுத தொடங்கினார்..

"கடவுளுக்கு.. இந்த ஏழை பக்தன் எழுதிக்கொள்வது என்னவென்றால். நானும் என் மனைவியும் கடும் பஞ்சத்தால் பாதிக்க்பட்டுள்ளோம் உண்பதற்கே ஒன்னுமில்லாமல் இருக்கிறது. இதைப்பற்றி உன்னிடம் பலமுறை முறையிட்டுள்ளேன்.. உன்னிடமிருந்து எந்த உதவியும் வரவில்லை.. அதனாலதான் இக்கடிதத்தை எழுதுகிறேன். எனக்கு எப்படியாவது ஒரு 80 ரூபாய் காசு அனுப்பி வை எனது முகவரிக்கு அதன் மூலம் எங்கள் கஷ்டத்தை போக்க முடியும் என நம்புகிறேன்
இப்படிக்கு ஏழை பக்தன்"..


இவ்வாறு எழுதிய கடதாசியை ஒரு கடித உறைக்குள் இட்டு.. ஒரு பக்கத்தில் இவரின் முகவரியையும் மறுபக்கத்தில் கடவுள், மேல் உலகம்
என முகவரியிட்டு தபால் பெட்டியில் போட்டுவிட்டார்.. அடுத்தநாள் தபால் அலுவலக ஊழியர்கள் தபால்களை ஊர்வாரியாக பிரித்துக்கொண்டிருக்கும் போது இந்த கடிதமும் அவர்கள் கண்ணில் பட்டது.. என்னடா இது கடவுளுக்கா..? மேல் உலகமா..? இது யாருக்கு எந்த ஊருக்கு அனுப்புவதென்று குழம்பி போனார்கள்.. இது யாராவது விளையாட்டாக செய்திருக்கலாம் என நினைத்து கடிதத்தை உடைத்து பார்ப்பதென முடுவெடுத்து அதை வாசிக்க தொடங்கினர்..


வாசித்து முடிந்ததும் அந்த ஏழை விவசாயியின் மீது ஒரு அனுதாபம் ஏற்பட்டது அவரின் அறியாமை, இயலாமை,வறுமை போன்றவற்றை நினைத்து.. இறுதியில் அவர்கள் எல்லோரும் முடிவெடுத்தனர் அங்குள்ளவர்கள் எல்லோரும் குறிப்பிட்ட தொகை காசு சேர்த்து அந்த தொகையை அவருக்கு அனுப்பி வைப்பதென... அவ்வாறு எல்லாரிடமிருந்தும் மொத்தமாக 70 ரூபாய் மட்டுமே சேர்க்க முடிந்தது..
அத்தொகையை அவரின் முகவரிக்கு அனுப்பி வைத்தனர்.. மறுநாளே.


வெகு சீக்கிரமாகவே பதில் கடிதத்தை கண்டதும் பூரிப்படைந்த கனவனும்
மனைவியும் உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கத்தொடங்கினர் காசு 70 ரூபாய்தான் இருந்ததை அறிந்தவர் 80 ரூபாய்தானே கேட்டோம் மிச்சம் 10 ரூபாய்க்கு என்ன நடந்திச்சி.. என யோசித்து மீண்டுமொரு கடிதம் எழுதினார் கடவுளுக்கு. அது இவ்வாறிருந்தது...

"நாங்கள் கேட்டதுமே எங்களுக்கு பண உதவி செய்ததற்கு மிக்க நன்றி. ஆனால் 70 ரூபாய் மட்டும்தான் அதில் இருந்தது.. எங்களுக்கு தெரியும் நீ.. 80 ரூபாய் அனுப்பிருப்பாய் ஆனால் தபால் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்தான் 10 ரூபாயை திருடிருக்க கூடும் அவர்களைத்தான் நம்ப முடியாது. எனக்கு அந்த 10 ரூபாயை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்"

மறுநாள் இந்தக்கடிதம் தபால் ஊழியர்களிடத்தில் சிக்கவே.. மறுபடியும் கடவுளுக்கா..? என வியப்புடன் அதை பிரித்துப்பார்த்தனர்.. அடப்பாவி 10 ரூபா காசு குறையிதுன்னு சொல்லி உதவி செய்த எங்களையும் திருடன்னு சொல்லி கடவுளுக்கு மறு பரிசீலனைக்கடிதம் அனுப்பியிருக்காருடோ.. என சொல்லி அங்குள்ள எல்லோரும் சிரித்துக்கொண்டனர்.. அவரின் கடவுள் நம்பிக்கை வீனாக்ககூடாது தாங்களும் திருடர்கள் இல்லை என்பதை நிருபிப்பதற்காக அவர் கேட்ட படியே 10 ரூபாயை அனுப்பி வைத்தனர்.. அதனோடு சேர்த்து இவ்வாறு எழுதியும் அனுப்பினர்..

"நான் கடவுள் எழுதிக்கொள்வது.. நீங்கள் கேட்டபடியே 80 ரூபாய் அனுப்ப நினைத்தும் சில தவறுதலால் 70 ரூபாயே அனுப்பியிருந்தேன்.. தபால் அலுவலக ஊழியர்கள் யாரும் அதை திருடவில்லை அவர்கள் நல்லவர்கள்.. அனுப்ப முடியாமல் போன 10 ரூபாயை இப்போது அனுப்பியிருக்கிறேன்.." என்றிருந்தது..


இக்கடிதத்தை பார்த்த ஏழை விவசாயிக்கு தபால் அலுவலக ஊழியர்கள் மீது வீனாக பழி சுமத்திட்டோமே என்ற குற்ற எண்ணமும் கடவுள் மீது இன்னும் அளவுக்கடந்த பக்தியும் பிறந்தது.. அன்றிலிருந்து அவர் மனைவியும் தீவிர கடவுள் பக்தன் ஆனாள்.. இருவரும் சந்தோஷமாக தொடர்ந்தனர் வாழ்க்கையை...

19 comments:

Unknown said...

இப்படிதான் ஏமாற்றுவதும்.. ஏமாறுவதும்..
மேலோட்டமாக பார்த்தல் கடவுள் நம்பிக்கை சிறந்தது என்றாலும்..
இது போன்ற கதைகள் சிந்திக்க வைக்ககூடியவை..

Chitra said...

nice story. :-)

இராகவன் நைஜிரியா said...

கதையின் சாராம்சம்..

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய்.

நம்பிக்கை என்றுமே வெற்றி பெறும்..

Swengnr said...

ரீமேக் சூப்பர்! என்னை விட நல்லா எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!

மதுரை சரவணன் said...

கதை அருமை. வாழ்த்துக்கள்

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு ரியாஸ்..

ஜீவன்பென்னி said...

கடவுள் யார்னு தெரிஞ்சுடுச்சு.

பனித்துளி சங்கர் said...

சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் . கதை அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி said...

கதை சூப்பர்..!!

ஹேமா said...

கடவுள் எனபவர் இப்படியான நல்ல மனம் கொண்டவர்கள்தான்.அவர்களுக்கு
நம்பிக்கையே கடவுள் !

ஷர்புதீன் said...

:)

சுரேகா.. said...

தெரிந்த கதை! தெரியாத ட்விஸ்டு!

வாழ்த்துக்கள்!

அட... கொய்யால said...

well done. Riyas

//எந்த கடவுள் அப்பிடின்னு கேட்கப்படாது)//

who are they gods.? the best solution is
do try and try its is only god. that is your story

ஸாதிகா said...

கதை அருமை.

செல்வா said...

இது நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது படிச்ச ஒரு கதை மாதிரி தெரியுதுங்களே ...!!
ரீமேக்கா ... நடத்துங்க ... !!! ஆனா நல்லா இருக்கு ...!!

சாந்தி மாரியப்பன் said...

கதை நல்லாருக்கு.

கவிதா said...

தங்களின் கதை மிக அருமை

ஹுஸைனம்மா said...

கேள்விப்பட்ட கதை, சிறுமாறுதலோடு!! ஒருவனின் கடவுள் நம்பிக்கை, சக மனிதர்களின் மனதிலும் கருணை பொங்க வைத்தது மகிழ்ச்சி.

kumar said...

நண்பர் ரியாசுக்கு (அப்படி அலைக்கலாமல்லவா?) தங்களின் எதிர்வினையை ஆல் இன் ஆலில் படித்தேன்.இதற்க்கு விளக்கம் கேட்க pj online
தளத்தை நாடினேன் .என்ன கொடுமை ? அங்கே என் கேள்வி அல்லது கருத்து செவிமடுக்கப்படவேயில்லை.எனக்கும் மார்க்க அறிவு போதாது.
நான் என்னதான் செய்ய? என் மின்னஞ்சல் omegabasheer@hotmail.com முடிந்தால் தொடர்பு கொள்ளவும்.
நன்றி.வேணும் துஆ சலாம்.

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...