கைக்கு கை...!


தினமும் மலர்வதும்

உதிர்வதும்
கண்ணீர் பூக்கள்..!

ஒவ்வொரு பொழுதுகளும்
நரகங்களாக
சொர்க்கம்
தேடி வந்தவர்களிடம்...!

உணர்வுகள் சாகடிக்கப்பட்டு
உயிர்வாழ
ஒரு போராட்டம்...!

எதிர்காலம்
எண்ணும் போதே வலிக்கிறது
என்னாகுமோ நாளை..!

கைக்கு கை மாறும்
நுகர்வுப்பொருளாய்
விலைமாந்தர்கள்....!

13 comments:

நாடோடி said...

வ‌லியான‌ க‌விதைக‌ள் ....

Riyas said...

வாங்க நாடோடி சார்.. உங்க முதல் வருகைகும் கருத்துக்கும் நன்றி.. வடையும் உங்களுக்குதான்.

ஹேமா said...

எல்லாமே வலித்த வார்த்தைகள்.நம்பிக்கையோடு சந்தோஷ வார்த்தைகளையும் கொண்டு வரப் பாருங்கள் ரியாஸ்.

Riyas said...

வாங்க ஹேமா அக்கா..

//எல்லாமே வலித்த வார்த்தைகள்.நம்பிக்கையோடு சந்தோஷ வார்த்தைகளையும் கொண்டு வரப் பாருங்கள் ரியாஸ்//

அவ்வப்போது வரும் சந்தோஷங்களும் சுழற்சி முறையில் வாழ்க்கையிலும் அப்படித்தானே..

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..

ஜீவன்பென்னி said...

நல்லாயிருக்கு.

Kousalya Raj said...

ஆழமான உணர்வுகள்....

Chitra said...

உணர்வுகள் சாகடிக்கப்பட்டு
உயிர்வாழ
ஒரு போராட்டம்...!



..... வாவ்! ஆழ்ந்த அர்த்தம் கொண்ட வரிகள்....... பாராட்டுக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

//கைக்கு கை மாறும்
நுகர்வுப்பொருளாய்
விலைமாந்தர்கள்....!//

வலி..

elamthenral said...

பெண்களின் உண்மையை உணர்ந்தவர் ரியாஸ் நீங்க... மிகவும் அருமை.. அவர்களின் நிலையை கண்டு நானும் சிலநேரங்களில் யோசிப்பேன்.. ஆனால் ????

தூயவனின் அடிமை said...

கவி.... வலி கொஞ்சம் தைலமும் கொஞ்சம் போட முயற்சி செய்யுங்கள் ரியாஸ்.

அன்புடன் மலிக்கா said...

விசித்திரப்பூக்களென்றபோதும்
இது விஷமான பூக்கள்.

Riyas said...

அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

அன்புடன் நான் said...

எல்லாவற்றிலும் எதிர்மறை... தாங்கியோ, தாக்கியோ இருக்கத்தான் செய்கிறது,.கவிதை நல்லாயிருக்குங்க.

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...