வாழ்க்கை வாழ்வதற்கே......!!!

பிறந்து விட்டோம்

வாழ்வதற்காகவே
வந்த பாதைகள் எல்லாம்
வேதனை முற்களால்
நிரம்பியிருக்கலாம்.
வலிகள் தொடரலாம்
வழி நெடுகே...!

வழியில்
இடருகள் வந்தால்
முட்டிமோதி தள்ளிவிட்டு
பயணத்தை தொடரும்
தொடரூந்து போல
தொடரலாம்
நாம் போகும்
இடத்தை நோக்கி
மனதில் உறுதியாய்.....!

கண்னீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்னீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்
ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!

இப்பயனம்
எத்தனை போராட்டமானது
இவ்வழியால் போனவர்கள்
சொல்லலாம்...
போய்ச்சேர்ந்தவர்கள்
யாவரும்
இவ்வழியை கடந்தவர்களே
இவ்வலியை கடந்தவர்களே...!

இரவும் பகலும்
எம்மைத்தொடர்வது போல
இன்பமும்
துன்பமும்
எம்மைத்தொடரலாம்
செல்லும் இடம் வரை.
புன்னகை
ஒளியை வீசியவாரு
துன்ப இருளை
கடந்து செல்லலாம்
மழலை மனதோடு............!

நிழலுக்காய் ஏங்கும்
பாலைவன பயணியாய்
நிம்மதிக்காய்
தவிக்கிறது எமதுள்ளங்கள்.
கிடைத்தவறறை
பெற்றுக்கொள்ளுங்கள்.
நிச்சயம் ஓர்நாள்
நிழலும் வரலாம்
நிம்மதியும் வரலாம்
பாலைவனம்
பசுமையாகவும் மாறலாம்...!

வெற்றியின் சுவை
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை
வாழ்வதற்கே......!


 
நான் பதிவெழுத தொடங்கிய காலத்தில் எழுதியது அப்போது நிறையபேரிடம் சென்றடையவில்லை அதனால் இப்போது இங்கே....
 
பிடித்திருந்தால் ஏதாவது சொல்லுங்கள்.... மனதை திறந்து

24 comments:

சௌந்தர் said...

வெற்றியின் சுவை
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை
வாழ்ந்தவனுக்கே தெரியும்.//

ரொம்ப சூப்பர் அண்ணா

Unknown said...

மிக சிறப்பான கவிதை.. பாராட்டுக்கள்

Thomas Ruban said...

பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பரே, மிக மிக அருமை.
(கவிபேரரசு பட்டமே கொடுக்கலாம்)
பகிர்வுக்கு நன்றி.

Riyas said...

சௌந்தர்
கே.ஆர்.பி.செந்தில்

மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

Thomas Ruban said...

http://deviyar-illam.blogspot.com/2010/06/blog-post_29.html#comment-form

தயவுசெய்து படியுங்கள் உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.

நன்றி.

Riyas said...

Thomas Ruban said..

//பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பரே, மிக மிக அருமை//

மிக்க நன்றி.. நண்பரே..
//கவிபேரரசு பட்டமே கொடுக்கலாம்)//

ஐய்யய்யோ அதெல்லாம் வேண்டாம் உங்கள் ஆதரவு இருந்தாலே போதும்..

Thomas Ruban said...

நண்பா உங்கள் தமிழிஸ் ஓட்டு பட்டையில் ஏதோ கோளறு உள்ளது சரிபடுத்தவும்.(பிரசுரிக்க வேண்டாம்)

தமிழ் மீரான் said...

கவிதை அருமை..
வாழ்த்துக்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை நன்றாக இருக்கிறது, நண்பரே!!!!

க ரா said...

நல்ல கவிதை.

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ரியாஸ்..

Chitra said...

வாழ்க்கையின் சுவை
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை
வாழ்வதற்கே......!

..... nice! :-)

ஹேமா said...

நம்பிக்கை தரும் உயர்வான கவிதை ரியாஸ்.பாராட்டுக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கவிதை.

பாராட்டுக்கள்..

மங்குனி அமைச்சர் said...

நாம் போகும்
இடத்தை நோக்கி
மனதில் உறுதியாய்.....!
///

சரியான எண்ணங்கள்

முனியாண்டி பெ. said...

கவிதை அருமை..

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

முனியாண்டி பெ. said...

கவிதை அருமை..

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

கவிதா said...

உங்களுக்காக ஒன்று
"நீயும் என்னை பார்த்ததில்லை
நானும் உன்னை பார்த்ததில்லை
எனக்காக துடிக்கிறாயே!
என் இதயமே!!!!!!"

Unknown said...

நிழலுக்காய் ஏங்கும்
பாலைவன பயணியாய்
நிம்மதிக்காய்
தவிக்கிறது எமதுள்ளங்கள்.
கிடைத்தவறறை
பெற்றுக்கொள்ளுங்கள்.
நிச்சயம் ஓர்நாள்
நிழலும் வரலாம்
நிம்மதியும் வரலாம்
பாலைவனம்
பசுமையாகவும் மாறலாம்...!

நம்பிக்கைதான் வாழ்க்கை.
நிச்சயம் ஒரு நாள் நடக்கும்.
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.

pinkyrose said...

inniku thaan (naanae bloguku ippa than intro aahiran)unga blog vanthan !
edutha edupla pilinthu podra mathiri kavithaiku mattum thaanpa intha sakthi manasa pakkathula poi pakrathu.....


super solli mudika virumbala

eluthukkalai nesikum enaku oru alahana eluthukkorvai ...
proceed....
riyas intha name alaha iruku en pera vida ponnukku intha name vaitha innum nallarkum illa?!

tamil blog said...

வாழ்த்துக்கள்

Allinone said...

தங்களது ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது.
தங்கள் பதிவுகள் யதார்த்தை உணர்த்துவதாய், அழகிய நடையில் அமைத்துள்ளது.
கவிதைகளை நேசிக்கும் எனக்கு தங்கள் கவிதைகள் நல்ல தீனி.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்குறேன், வாழ்த்துக்கள்.

செல்வா said...

///நிச்சயம் ஓர்நாள்
நிழலும் வரலாம்
நிம்மதியும் வரலாம்
பாலைவனம்
பசுமையாகவும் மாறலாம்...!///

உண்மையான வரிகள் ..!!

Jey said...

னல்லருக்கு சார். எனக்கு கவிதை எழுத வரமாட்டேங்து சார், ஏதும் குறுக்கு வழி இருக்கு?.:)

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...