உனக்காக...!

வார்த்தைகள்
சண்டையிட்டுக்கொள்கின்றன
உன்னைப்பற்றி எழுதும்
கவிதைகளில்
இடம்பிடித்துக்கொள்ள.
நகரப்பேரூந்தில்
இடம்பிடிக்கும்
பயணிகள் போல...!
வார்த்தைகள்
ஓடி ஒளிந்துகொள்கின்றன
உன்னோடு
பேசும் நேரங்களில்
பூச்சாண்டி பயத்தில்
ஓடி ஒளியும்
குழந்தைகள் போல....!

உலகம்
எவ்வளவு அழகானது
உன்னை கானும் பொழுதுகளில்
உலகம்
எவ்வளவு கொடுமையானது
உன்னை கானாத பொழுதுகளில்...!

இரவுகளில்
கனவாய் வருகிறாய்
பகல்களில்
நினைவாய் வருகிறாய்
எப்போதுதான் வருவாய்
நேரில்...!

பாலைவனத்திலும்
பனித்துளிகளாய்
உன் ஞாபகங்கள்
குளிரச்செய்கிறது
மனதை...!

17 comments:

செல்வா said...

//வார்த்தைகள்
சண்டையிட்டுக்கொள்கின்றன
உன்னைப்பற்றி எழுதும்
கவிதைகளில்
இடம்பிடித்துக்கொள்ள.
நகரப்பேரூந்தில்
இடம்பிடிக்கும்
பயணிகள் போல...!///
ரொம்ப அருமை ..அப்புறம் சண்டை போட்டா விளக்கி விடுங்க ..
//எப்போதுதான் வருவாய்
நேரில்...!//
பட்டைய கிளப்பிருக்கீங்க ..! வாழ்த்துக்கள் ..!!

நாடோடி said...

//எப்போதுதான் வருவாய்
நேரில்...!///

தேட‌னும்... கிடைக்கிற‌து வ‌ரைக்கும் தேட‌னும் ரியாஸ்.. :)))

ஜெயந்த் கிருஷ்ணா said...

இரவுகளில்
கனவாய் வருகிறாய்
பகல்களில்
நினைவாய் வருகிறாய்
எப்போதுதான் வருவாய்
நேரில்...!

//

நண்பா.. இந்த பொண்ணுங்களே இப்படி தான்...

நம்ம படுற கஷ்டம் அவங்களுக்கு எங்க தெரிய போகுது....

Thomas Ruban said...

அருமை...

நிலாமதி said...

உங்கள் அன்புக்குரியவர்களின் ஞாபகங்கள் உங்களை ..அவர்களுகாக் வாழ் வைக்கிறது.
வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

கவிதை நல்ல இருக்கு . கவலையைவிடுங்கள் உங்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் . வாழ்த்துக்கள் . தொடருங்கள் மீண்டும் வருவேன் .

ஸாதிகா said...

//பாலைவனத்திலும்
பனித்துளிகளாய்
உன் ஞாபகங்கள்
குளிரச்செய்கிறது
மனதை...!// அட..அருமை அருமை..

தூயவனின் அடிமை said...

கவிதை நன்றாக உள்ளது.

Kousalya Raj said...

கவிதை இனிமை.....

kavisiva said...

கவிதை நல்லா இருக்கு

Mohamed Faaique said...

உங்களுக்குள்ள இப்படி ஒரு சோகமா?

ஜில்தண்ணி said...

///பூச்சாண்டி பயத்துல ஓடும் குழந்தைய போல //

எப்டிப்பா இப்டி யோசிக்கிற :) செம செம

///எப்போதுதான் வருவாய்
நேரில்...! ////

தோ வந்துகினே இருக்காங்க :)

கலக்கல் கவிதை

Aathira mullai said...

//இரவுகளில்
கனவாய் வருகிறாய்
பகல்களில்
நினைவாய் வருகிறாய்
எப்போதுதான் வருவாய்
நேரில்...!//
கனவும் நினைவும் கனிந்து கையில் வர வாழ்த்துக்கள், அழகிய கவிதைக்கும்...

அன்புடன் நான் said...

கச்சிதமாய் இருக்கு கவிதை பாராட்டுக்கள்.

கமலேஷ் said...

நல்லா இருக்கு ரியாஸ்.

சீமான்கனி said...

அழகான கவிதை ரியாஸ் ரெம்ப ரசித்தேன் இன்னும் வார்த்தைகளை புதுசாய் தேடி சேருங்கள்...வாழ்த்துகள்..

Raghu said...

ஆர‌ம்ப‌ வ‌ரிக‌ளே அச‌த்த‌ல் ரியாஸ்!

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...