மௌனங்கள் மொழியாக...!

நாகரீகம்

வெள்ளையனை
வெளியேற்றிய பின்னும்
வெளியேறாமல்
ஒட்டிக்கொண்டது
அவன் நாகரீகம்
மட்டும்...!

விவசாயி

வற்றிய குளம்
வற்றாத வறுமை
ஒட்டிய வயிறு
புதிய உலகின்
பழைய மனிதன்...!

இயற்கை

இறைவனின் கைவண்ணம்
மாற்றம்கானும் உலகில்
மாறாதது..
குழந்தை மனசு
குதூகலிக்கும் போதெல்லாம்
சீற்றம்கொண்டால்
ராட்சசன்...

மழை

பூமிக்காதலியின்
காதலன்
தாகம் தீர்க்கும்
தாய்
பச்சைத்தாவரங்களின்
உணவு
ஏழை விவசாயியின்
உயிர்...!

மௌனம்

கருத்தரித்து
பிறக்காத
வார்த்தை குழந்தை...!

12 comments:

ஜில்தண்ணி said...

////கருத்தரித்து
பிறக்காத
வார்த்தை குழந்தை...! ///

நான் மிகவும் ரசித்த கவிதை :)

அருமை நண்பா அருமை

Raghu said...

மெள‌ன‌ம் சூப்ப‌ர் ரியாஸ்

நாடோடி said...

எல்லா க‌விதைக‌ளும் ந‌ல்லா இருக்கு ரியாஸ்...

Mohamed Faaique said...

2ND ONE GUD...

Chitra said...

மௌனம்

கருத்தரித்து
பிறக்காத
வார்த்தை குழந்தை...!


.....எல்லாமே அருமை. ஆனால், "மௌனம்" சான்சே இல்லை. சூப்பர்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

கருத்தரித்து
பிறக்காத
வார்த்தை குழந்தை...!

அருமை நண்பா...

செல்வா said...

///வெள்ளையனை
வெளியேற்றிய பின்னும்
வெளியேறாமல்
ஒட்டிக்கொண்டது
அவன் நாகரீகம்
மட்டும்...!///
கலக்கல் ..!!
மற்றவையும் அருமை ..

தூயவனின் அடிமை said...

வெள்ளையனை
வெளியேற்றிய பின்னும்
வெளியேறாமல்
ஒட்டிக்கொண்டது
அவன் நாகரீகம்
மட்டும்...!

சரியான வார்த்தைகள்.

Aathira mullai said...

//மௌனம்

கருத்தரித்து
பிறக்காத
வார்த்தை குழந்தை...!’’

அத்தனையும் முத்துக்கள்.. இது பொன்னில் வைத்து கோத்த முத்து..

ம.தி.சுதா said...

///...வற்றிய குளம்
வற்றாத வறுமை
ஒட்டிய வயிறு
புதிய உலகின்
பழைய மனிதன்...!//
இன்று தான் தங்கள் தளம் முதல் முதல் வருகிறேன் என்ன அரமையான கவிதைகள். வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

அருமையான ஹைகூஊஊஊ...சூப்பர் நச் என்று உள்ளது.

Jaleela Kamal said...

நாகரீகம்

வெள்ளையனை
வெளியேற்றிய பின்னும்
வெளியேறாமல்
ஒட்டிக்கொண்டது
அவன் நாகரீகம்
மட்டும்...


சரி தான்

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...