பெண்ணே...!

உன் கொலுசுகளும்
வளையல்களும்
சிரிக்கின்றன அழகாய்
உன்னைப்போலவே....!

நாணங்களால்
குடைபிடிக்கிறாய்
என் பார்வை மழையினை
தடுக்கிறாய்...!

உலக இலக்கியங்கள்
கற்றவன் நான்
புரியவேயில்லை என்னவென்று
உன் கண்கள் பேசுவது மட்டும்...!

ஊரே உன்னை
வாய்காரி என்கிறது
என்னிடம் மட்டும் ஊமையாய்
மெளனங்களாலே பேசுகிறாய்...!

எங்கு பார்த்தாலும்
நீயாகவே
இருள்கூட அழகாகவே
உன் ஞாபகங்களோடு...!

18 comments:

ஆர்வா said...

//ஊரே உன்னை
வாய்காரி என்கிறது
என்னிடம் மட்டும் ஊமையாய்
மெளனங்களாலே பேசுகிறாய்...!//


அழகு வரிகள்....

வினோ said...

/ நாணங்களால்
குடைபிடிக்கிறாய்
என் பார்வை மழையினை
தடுக்கிறாய்...! /

வரிகள் அருமை

செல்வா said...

//உலக இலக்கியங்கள்
கற்றவன் நான்
புரியவேயில்லை என்னவென்று
உன் கண்கள் பேசுவது மட்டும்...!//

அடடா , அது இன்னும் என் இலக்கியத்திலும் வரலையா ..?

செல்வா said...

//ஊரே உன்னை
வாய்காரி என்கிறது
என்னிடம் மட்டும் ஊமையாய்
மெளனங்களாலே பேசுகிறாய்...!//

கலக்கல்ங்க .!!

Riyas said...

@ கவிதைக்காதலன்
@ வினோ
@ ப.செல்வகுமார்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றிங்க..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்தல் வரிகள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அழகான காதலை சொல்லும் வரிகள்...

ஜெய்லானி said...

நல்ல கவிதை வரிகள்..!!

ம.தி.சுதா said...

/////உலக இலக்கியங்கள்
கற்றவன் நான்
புரியவேயில்லை என்னவென்று
உன் கண்கள் பேசுவது மட்டும்...!////
அது தானே பெண் என்பது
கவிதை அருமை சகோதரா..

Riyas said...

@ புதிய மனிதா
@ வெறும்பய
@ ஜெய்லானி
@ ம.தி.சுதா

வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப மகிழ்ச்சி..

Asiya Omar said...

இருள்கூட அழகாகவே
உன் ஞாபகங்களோடு...!
-அருமையான வரிகள்.நல்லாயிருக்கு.

http://rkguru.blogspot.com/ said...

அருமையான கவிதை வரிகள்.........வாழ்த்துகள்

ஸாதிகா said...

//
ஊரே உன்னை
வாய்காரி என்கிறது
என்னிடம் மட்டும் ஊமையாய்
மெளனங்களாலே பேசுகிறாய்...!
//அருமையான வார்த்தைக்கோர்வை.

ஹேமா said...

காதல் குவிந்த வரிகள் அத்தனையும்.
நானே மயங்கிப்போனேன் ரியாஸ் !

elamthenral said...

//நாணங்களால்
குடைபிடிக்கிறாய்
என் பார்வை மழையினை
தடுக்கிறாய்...!//
such a wonderful line riyas... vaazhthukkal

எஸ்.கே said...

இனிமையான கவிதைகள்! வாழ்த்துக்கள்!

VELU.G said...

நல்ல கவிதை

சொற்கள் அழகு

Jaleela Kamal said...

வரிகள் அருமை

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...