ரசிக்க பழகிவிட்டேன்..!


உன் சிரிப்புகள்
பாலைவனத்தின் மீதுவிழுந்த
பனித்துளிகளாக
என் மனதெங்கும்
ஈரப்பதம் செய்கிறது..

உன்னுடன் பேசிய
பொழுதுகளை
அழைத்துக்கொள்கிறேன்
தனிமையான
என் பயனங்களின் போது...

உன்னை
சீண்டிக்கொண்டேயிருக்கிறேன்
உன் சினுங்கல்களை
ரசிப்பதற்காய்
குழந்தை அழுவதை
ரசிக்கும்
தாய் போல...

கண்கள்
கண்ணீரைத்தந்தாலும்
மேகங்கள்
மழையைத்தந்தாலும்
இரண்டையும்
ரசிக்க பழகிவிட்டேன்
என் கவிதைகளிலுள்ள
எழுத்துப்பிழைகளை
நீ ரசிப்பது போல..


தமிழ்மனத்தில் ஓட்டளிக்க..

18 comments:

சி.பி.செந்தில்குமார் said...

விகடனில் சமீப காலமாய் கலக்கி வருவதற்கு வாழ்த்துகள்

Thava said...

அழகிய கவிதை...நன்றி சகோ.
சைக்கோ திரை விமர்சனம்

நிரூபன் said...

வணக்கம் சகோ,
நல்லதோர் கவிதை,
செல்லச் சிணுங்கல்களை ரசிக்கப் பழகிய உள்ளத்து உணர்வுகளை கவியாக்கியிருக்கிறீங்க.

விகடன் நான் பார்ப்பது குறைவு! சிபியின் தகவல் பகிர்விற்கு நன்றி.

என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

தமிழ்மண ஓட்டுப் பட்டை எல்லா நாடுகளிலும் தெளிவாக தெரிவது தொடர்பில் ப்ளாக்கர் நண்பன் ஒரு பதிவு போட்டிருக்கார்.
அதனை கொஞ்சம் ட்ரை பண்ணி பார்க்கலாமே?
இண்ட்லி ஓட்டுப் பட்டை, ஏனைய திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகள் தெரியவில்லை நண்பா.

நிரூபன் said...

இந்த இணைப்பில் ஓட்டுப்பட்டைகளின் பிரச்சினைகளை களையும் வழியினை சகோதரன் ப்ளாக்கர் நண்பன் அப்துல் பஷீத் சொல்லியிருக்கார்.

http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

Riyas said...

புரியவில்லையே.. விகடனில் முன்பு ஒருமுறை என்னுடைய பதிவொன்றை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்..

திரும்ப எப்போது?

வருகைக்கு நன்றி சி.பி

Anonymous said...

நல்ல கவிதை.வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

பாலா said...

சிறப்பான கவிதை. காதலின் ஒரு வகை வெளிப்பாடு.

K.s.s.Rajh said...

////உன்னை
சீண்டிக்கொண்டேயிருக்கிறேன்
உன் சினுங்கல்களை
ரசிப்பதற்காய்
குழந்தை அழுவதை
ரசிக்கும்
தாய் போல.////

அழகான வரிகள் பாஸ்

சசிகலா said...

உன்னை
சீண்டிக்கொண்டேயிருக்கிறேன்
உன் சினுங்கல்களை
ரசிப்பதற்காய்
குழந்தை அழுவதை
ரசிக்கும்
தாய் போல...
அழகான வரிகள்

ராஜ நடராஜன் said...

இந்தப் பின்னூட்டம் ரசனை மிக்க தலைப்பிற்காக!

Riyas said...

வாங்க சார்.

தலைப்பு மட்டும்தானா உங்களுக்கு பிடிச்சிருக்கு! ஹா ஹா

நன்றி.

Riyas said...

வாங்க நிரூபன்..

பிளாக்கர் நண்பன் சொன்னது போல் முன்பு முயற்சித்துப்பார்த்தேன்.. சரிவர இயங்கவில்லை மீண்டும் முயற்சிக்கிறேன். நன்றி

Riyas said...

நன்றி குமரன்..

Riyas said...

நன்றி.. வருகைக்கு

Riyas said...

நன்றி பாலா

Riyas said...

நன்றி பாஸ்,

Riyas said...

நன்றி சசிகலா.

ஹேமா said...

இதுதான் காதல் ரியாஸ்.எதையும் காதலிடம் ரசிக்கப் பழகிக்கொள்ளலாம் !

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...