தொலைகிறது வாழ்க்கை...!

கணினியோடு
கடந்துசெல்கிறது
காலங்கள்
இதுதான் இயந்திரவுலகமோ
இதுதான் நவீனமோ
உலகமே காலடியில்
உருண்டோடி வருகிறது
பணச்சக்கரம் பூட்டி....
விடிகிறது காலை
கணிப்பொறியோடு வேலை
மீண்டும் மாலைப் பொழுதுபோக்கு
அதுவும் தேடவேண்டியிருக்கு
கணினிக்குள்..
பரந்தவுலகம்
கைகளுக்குள் அடங்கி
கைத்தொலைபேசியாயும்
கணினியாயும்
மனிதனுக்கு
தேவையில்லை மூளை
மென்பொருளே
செய்கிறது வேளை...
சுறுங்கிவிட்டது உலகம்
மாறிவிட்டான் மனிதன்
ஓடிக்கொண்டேயிருக்கிறான்
எப்பொழுது தொலையும்
வாழ்க்கை
என்றறியாமல்...
இருள் தொலைதத தேசமிது
எல்லா இரவுகளும்
பகலாகவே
ரசிக்க முடியவில்லை
இருளைக்கூட
மறைந்து போகிறது
இங்கே
செயற்கை ஒளியால்
பௌனர்மி கூட....
சுவாசித்த
கிராமத்துக்காற்றும்
அலைந்து திரிந்த
வயல் வெளிகளும்
நீராடிய குளங்களும்
இன்றும் குளிரச்செய்கிறது
மனதை
இவையனைத்தும்
கிடைக்கவேயில்லை
எவ்வளவு தேடியும்
இன்றைய
இனையத்தளங்களில்...
மீண்டும் தொலைகிறது
வாழ்க்கை
கணிப்பொறிக்குள்....

11 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு

ம.தி.சுதா said...

/////மாறிவிட்டான் மனிதன்
ஓடிக்கொண்டேயிருக்கிறான்///
உண்மைதான் சகோதரா ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்...

Chitra said...

இருள் தொலைதத தேசமிது
எல்லா இரவுகளும்
பகலாகவே


....நூறு அர்த்தங்கள் சொல்லும் வரிகள்... சூப்பர்!

வினோ said...

/ மீண்டும் தொலைகிறது
வாழ்க்கை
கணிப்பொறிக்குள்... /

உண்மை தான் ரியாஸ்...

சைவகொத்துப்பரோட்டா said...

ஏக்கம் புரிகிறது நண்பா.

செல்வா said...

//உருண்டோடி வருகிறது
பணச்சக்கரம் பூட்டி....//

உண்மைலேயே இந்த வரிகள் கலக்கல்ங்க..!

செல்வா said...

//இருள் தொலைதத தேசமிது
எல்லா இரவுகளும்
பகலாகவே
ரசிக்க முடியவில்லை
இருளைக்கூட
மறைந்து போகிறது
இங்கே
செயற்கை ஒளியால்
பௌனர்மி கூட....//

வாய்ப்பே இல்லைங்க .. உண்மைலேயே படிக்கும்போது செமயா இருக்கு ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

உண்மை நண்பரே..

செந்தில்குமார் said...

இருள் தொலைதத தேசமிது
எல்லா இரவுகளும்
பகலாகவே
ரசிக்க முடியவில்லை

இங்கே
செயற்கை ஒளியால்
பௌனர்மி கூட....


நவீன (ம்)மாற்றத்தின் சாபக்கேடு

உங்களின் விம்மல் வரிகள் ம்ம்ம்ம்ம்.....

நாடோடி said...

நானும் அனுப‌விப்ப‌து தான் ரியாஸ்.. க‌விதையில் அழ‌கா சொல்லியிருக்கீங்க‌..

எஸ்.கே said...

உண்மை பல பேரின் வாழ்க்கை அந்த பெட்டிக்குள்ளேயே முடிகிறது!

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...