என்னைக்கவர்ந்த பத்து பதிவுகள்

நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பதிவுகள் படிக்கிறோம் அவற்றில் சில மிக சுவாரஷ்யமானதாகயிருக்கும் அவ்வாறான பதிவுகள் எம்மனதோடு ஒட்டிவிடும்.. அவ்வாறு என் மனதைக்கவர்ந்த எத்தனையோ பதிவுகளில் பத்து பதிவுகளைப்பற்றி இங்கே சொல்லப்போகிறேன்.




# தேவாவின்  வாய்மை  என்ற பதிவு. ஏழை விவசாயி ஒருவர் அரசாங்க அலுவலகமொன்றில் பட்ட அவமானங்களை அழகாக விபரித்த பதிவு.. அங்கே நடந்த நிகழ்வுகள் அவரின் வசனங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டவிதம் அருமை. வசனங்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பதென்பது ஒரு சிலரால் மட்டுமே முடிந்தது.அது தேவாவினால் இந்தப்பதிவில் சாத்தியமானது.
 
# கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா அக்காவின்  அவள் ஒரு "தொடர்பதிவு" என்ற பதிவு..சிரிக்கத்தெரியாதவர்களையும் சிரிக்க வைக்கும் அவரின் எழுத்துக்கள். வெட்டிப்பேச்சாத்தான் இருக்கும் என்ற மனநிலையில் படிக்க ஆரம்பித்தாலும் பதிவில் முடிவில் ஒரு Relaxation கலந்த புன்னகை தானாகவே வெளிப்படும். அதை இவரின் எல்லாப்பதிவுகளிலும் சாத்தியப்படவைப்பதே இவரின் வெற்றி.
 
# சேட்டைக்காரனின் எனக்குப்பிடித்த பத்து பெண்கள் என்ற பதிவு. பிடித்த பெண்களை வரிசைப்படுத்தும் தொடர்பதிவு ஆரம்பித்து எல்லோரும் அன்னை தெரேசாவையும் சமூகத்தில் உயர்நிலையிலுள்ள பெண்களையும் வரிசைப்படுத்திக்கொண்டிருந்த சமயம்.. சமூகத்தால் கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் நோக்கப்படும் பெண்களை (ஷகீலா,ரேஷ்மா உட்பட) வரிசைப்படுத்திய விதமும் அதற்கு அவர் கொடுத்த விளக்கங்களும் என்னை மிகவும் கவர்ந்தவை.
 
# ஹேமா அக்காவின்    ஒரு முறை ஓரே ஒரு முறை  என்ற பதிவு.இவரின் கவிதைகள் மனசின் ஆழம்வரை ஊடுருவிச்செல்லும் ஆற்றல் படைத்தது.. அவ்வாறு அப்பா அம்மா நினைவுகளளை கவிதையாக்கியிருக்கிறார் இங்கே..அவரின் வலைத்தளத்தை மேய்ந்தபோது என் கண்ணில்பட்டது என மனதிலும் ஒட்டிவிட்டது சுமார் 2 வருடங்களுக்கு முன் எழுதியது என நினைக்கிறேன்.


# லோசனின் ஆயிரத்தில் ஒருவன்  திரைப்படப்பார்வை எத்தனையோ திரைப்படவிமர்சனம் படித்தாலும் லோசனின் திரைப்பட விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவும் இந்த திரைப்பட விமர்சனத்தில் அவரின் விரிவான பார்வைக்கோணமும், சில இடங்களில் வசன நடையும், சொல்லப்பட்ட விதமும் அருமை.


# அஷீதாவின் படிச்சு பார்த்தேன் ஏறவில்லை. என்ற பதிவு இவருடைய நிறைய பதிவுகள் நகைச்சுவைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்தப்பதிவிலும் அவருடைய பாடசாலை வாழ்க்கையை மிக சுவாரஷ்யமாக சொல்லியிருக்கிறார் அது பொய்யோ மெய்யோ நானறியேன் ஆனாலும் இந்தப்பதிவை படிக்கும்போது சிரிக்காமல் மட்டும் இருக்கமுடியவில்லை. இப்போதெல்லாம் அதிகமாக எழுதக்கானோம்.


# கருந்தேள் கண்ணாயிரத்தின்  கிஷோர் குமார்- சல்தே சல்தேஎன்ற பதிவு. ஹிந்திப்பாடகர் கிஷோர் குமார் பற்றிய ஒரு அருமையான பதிவு.கிஷோர் குமார் பாடிய சில பாடல்கள் எனக்குப்பிடிக்கும் என்பதாலும் இந்தப்பதிவுக்காக வேண்டி அவரின் தேடல்கள் அபாரம் எல்லா தரவுகளுக்கும் லிங்க் கொடுத்து வாசிப்பாளனின் தேவையை பூர்த்தி செய்கிறது இந்தப்பதிவு.




# ஜெய்லானியின்  சுடு தண்ணி வைப்பது எப்படி என்ற பதிவு.. இவருடைய பதிவெங்கிலும் கொட்டிக்கிடக்கிறது நகைச்சுவை இனிப்புகள். படிக்க படிக்க இனித்துக்கொண்டேயிருக்கும். இந்தப்பதிவை படித்துவிட்டு நிறையவே சிரித்தேன்.. இவரையும் ரொம்ப நாளா கானோம்.


# ஹுஸைனம்மாவின்  ரீ-ஸைக்கிளிங்கும் பழைய இரும்புச்சாமானும் என்ற பதிவு. அபுதாபியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பகுதி நேர வேலையாக காலி டின் கள் சேகரிப்பதில் ஈடுபடுவதை தனது கதையில் அழகாக கூறியிருப்பார் இவரின் எழுத்து நடையும் அழகு


வேலன் அவர்களின் ஈத் பெருநாள் பரிசு  என்ற பதிவு.. மதங்கள் தாண்டியும் மனிதநேயம் வளரவேண்டும் என உணர்த்தியது இந்தப்பதிவு..


இன்னும் எத்தனையோ பதிவுகள் பிடித்திருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே எழுதமுடியவில்லை.. இதை விரும்புபவர்கள் தொடர்பதிவாக எழுதுங்கள் அப்போது தவறவிடப்பட்ட நல்ல பதிவுகளை படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா...

29 comments:

ARV Loshan said...

நன்றி சகோதரா.. நல்ல ரசிகன் நல்ல படைப்பாளி :)
வாழ்த்துக்கள்.
வாசிக்கிறேன் :)

Chitra said...

தீபாவளி ஸ்வீட் கொடுத்து இருக்கீங்க!!!! ரொம்ப நன்றிங்க.... பதிவர்களை உற்சாபடுத்தும் பதிவு, இது!

கருந்தேள் கண்ணாயிரம் said...

உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது :-)

கருந்தேள் கண்ணாயிரம் said...

கிஷோர் குமார் என் ஆதர்சம் .. அவரால் நான் அடைந்தது ஏராளம்.. [அவை என்னன்னு சொல்ல மாட்டேனே :-) ).. ] .. பதிவைப் பற்றிப் போட்டதற்கு நன்றிகள் நண்பா ..

கருந்தேள் கண்ணாயிரம் said...

ஆ.. பதிவின் லின்க் தப்பா சுட்டுது :-) check மாடி :-)

ஹுஸைனம்மா said...

ஹை, என் பதிவும் இங்கே!! ரொம்ப நன்றி. அந்தக் கதை எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மத்தவங்க பதிவுகளும் பாக்கிறேன்.

Riyas said...

கருந்தேள் கண்ணாயிரம்

//ஆ.. பதிவின் லின்க் தப்பா சுட்டுது :-) check//

இப்போது சரி செய்துவிட்டேன் நன்றி.

ஜெய்லானி said...

அட நம்ம பேரும் இருக்கா ..!! நன்றி சகோ..!!
//இவரையும் ரொம்ப நாளா கானோம்.//

மவுனம் கலைகிறது ..விரைவில் ..!! :-))))

dheva said...

ரசனைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் தம்பி....

சித்ரா பதிவு படிச்சு இருக்கேன்..செமயா இருக்கும்

..ஜெய்லானி சுடுதண்ணி படிச்சு....வயிறு வலிக்க சிரிக்க வைக்கிற காமெடி பீஸ்
(மெளனத்த கலைங்க..ஜெய்...அரிவாளோட காத்து கிடக்கிறோம்...)

மத்த பதிவுகள் எல்லாம் படிக்கிறேன்... தம்பி....!

Diwali wishes.........!!!!!!

மதுரை சரவணன் said...

நல்லப் பகிர்வு. வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாவ், அருமையான செலக்சன், வாழ்த்துகள், மற்றும் நன்றி!

Unknown said...

சிலரின் பதிவுகளை படித்திருக்கேன்.. அருமையான தேர்வுகள்.. மற்றவர்களின் பதிவுகளையும் பார்க்கிறேன்...

தாராபுரத்தான் said...

நல்ல பகிர்தல்ங்க

வேலன். said...

தீபாவளி ஸ்வீட்டில் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள். நன்றி நண்பரே....
வாழ்கவளமுடன்.
வேலன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தேர்வுகள் நண்பரே.. சில பதிவுகள் படித்திருக்கிறேன்... மற்றவற்றை படிக்க போகிறேன்...

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா...

Ravi kumar Karunanithi said...

neenga padaippali.. naan eluthali

செல்வா said...

அருமையான தேர்வுகள்ங்க ..!!
நல்லா இருக்கு..!!

Kousalya Raj said...

சிறந்த பதிவுகளை வரிசை படுத்தி இருக்கீங்க....! படிக்காத பதிவுகளை படித்து விடுகிறேன் இப்பவே...நன்றி ...வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

நல்லபகிர்வு. வாழ்த்துக்கள்

Riyas said...

@ லோசன்

@ சித்ரா

@ கருந்தேள் கண்ணாயிரம்

@ ஹுஸைனம்மா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Riyas said...

@ தேவா

@ ஜெய்லானி

@ மதுரை சரவனன்

@ சிநேகிதி

@ பன்னிக்குட்டி ராமசாமி

@ தாராபுரத்தான் ஐயா

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Riyas said...

@ வேலன்

@ வெறும்பய

@ தோசை

@ செல்வகுமார்

@ கௌசல்யா

@ சே.குமார்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பழைய பதிவுகளையும் குறிப்பிட்டிருப்பது,
அவற்றை படிக்க வாய்ப்பாய் அமைந்துள்ளது.
அருமை!

a said...

சிறந்த பதிவுகளை வரிசை படுத்தியதார்க்கு வாழ்த்துக்கள்............

settaikkaran said...

கொஞ்ச நாளாக இட மாற்றம் காரணமாக வலைப் பக்கமே வர முடியாமல் இருந்தேன். தீபாவளியும் அதுவுமா, சூப்பரா இனிப்பு கொடுத்து உற்சாகப் படுத்தியிருக்கீங்க...! ரொம்ப ரொம்ப நன்றிங்க...! ஆனா, மற்ற ஒன்பது பதிவர்களோட பேரைப் பார்த்ததும், எனக்கு கொஞ்சம் கூச்சமா இருந்திச்சு! அவ்வளவு பெரியவங்க பேரோட என்னையும் குறிப்பிட்டது மகிழ்ச்சியா இருக்கு. மீண்டும் நன்றிகள்.

Jaleela Kamal said...

அட எனக்கும் தெரிந்த பதிவர்கள் நிறை யா பேர் இருகங் மீதியும் பார்க்க வேண்டியது தான்

'பரிவை' சே.குமார் said...

பதிவர்களை உற்சாபடுத்தும் பதிவு.

shortfilmindia.com said...

நல்ல முயற்சி
கேபிள் சங்கர்

ஹேமா said...

நன்றி நன்றி ரியாஸ்.நான் விடுமுறையில் இருந்த நேரம் வந்த பதிவு,தவறவிட்டிருக்கிறேன்.நீங்கள் என்னைத் தவறவிடவில்லை.அன்புக்கும் ரசனைக்கும் நன்றி.உண்மையில் எல்லோருமே ரசனையான உபயோகமான பதிவர்கள்.வாழ்த்துகள் !

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...