சின்னப்புள்ளத்தனமா இருக்கே...!

பாடசாலை காலங்களில் நாம் எழுதிய கட்டுரைகளாகட்டும் கவிதைகளாகட்டும் பின்னாட்களில் படிக்கும் போது சிலது சிரிப்பை வரவழைக்கும், சிலது அடப்பாவி எப்படியெல்லாம் எழுதியிருக்கே, சிலது ஆஹா நல்லாருக்கே என சொல்ல வைக்கும் எவ்வாறாகயிருந்தாலும் அது ஒரு தனி ரசனை ஓர் அழகான அனுபவம். நாம் கடந்துவந்த காலங்களின் சுவடுகள்..


எனக்கும் அவ்வாறன அனுபவம் நிறைய ஏற்பட்டிருக்கு அதில் ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துக்க போறேன். அன்மையில் பழைய புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்த போது பாடசாலை காலத்தில் கிறுக்கிய டயரி ஒன்னு கிட்டியது அதை புரட்டிப்பார்க்கும்போது அட இதெல்லாம் எழுதியது நாந்தானா என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது.. படிக்கும் காலத்தில் கவிதைன்னா எப்படியிருக்கும் என்று அறியாமலேயே கவிதை எழுதுறோம்ன்னு நினைத்துக்கொண்டு கிறுக்கிய சில கவிதைகள். சிலது சிலேடை, மோனை, உருவகம் உவமையுடன் அழகாகயிருந்தாலும். பல கவிதைகள் சின்னப்புள்ளத்தனமாகவே இருந்தது.


அவ்வாறு சின்னப்புள்ளத்தனமா இருந்த கவிதைகளில் பிரபலம் மகாகவிபாரதி பற்றி எழுதியது. இதை ரொம்பநாளா பிளாக்ல எழுதனும்ன்னு தோன்றினாலும் அந்த முண்டாசுக்கவிஞ்சனை அவமதித்தது போலாகிடும் என்ற காரணத்துக்காக எழுதவில்லை.. இப்போது வெறும் நகைச்சுவைக்காக மட்டும்
தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்களே மன்னிச்சிடுங்கப்பா..


மகாகவி பாரதியே
நல்ல வேளை
நீ அன்று பிறந்துவிட்டாய்.
இன்று பிறந்திருந்தால்
சிம்ரனின் இடையிலும்
மனிஷா கொய்ராலாவின்
மார்புக்கு மத்தியிலும்
தேடவேண்டிய நிலை
ஏற்பட்டிருக்கலாம்
உன் தமிழை...!




அந்த நாட்களில் எழுதிய இன்னுமொரு காதல் கவிதையொன்று. இதுக்கெல்லாம் கவிதைன்னு சொன்னா அப்போ கவிதைக்கு என்னன்னு சொல்றது அப்புடியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா கேள்வியெல்லாம் கேட்கப்படாது ஏன்னா இதெல்லாம் சின்னப்புள்ளயா இருக்கும்போது எழுதினது (இப்பமட்டும் என்ன பெரிய்ய்ய்ய்ய்ய இலக்கியவாதி ரேஞ்சுக்கா எழுதுற அப்புடி யாரோ சொல்றிங்க போல) இதெல்லாம் நமக்குள்ள சகஜமுங்கோ..

புன்னகை என்ற தலைப்பில் எழுதியது..

வின்னில் மின்னிடும்
வின்மீன் போல
உன்னில் மின்னிடும்
புன்னகைப்பூக்களை
பறிக்க நினைக்கிறேன்
ஆனால்
தோன்றி மறையும்
மினனலைப்போல்
என்னை
கடந்து செல்கின்றாய்

எப்படியிருக்கென்று சும்மா சொல்லிட்டுப்போங்க அப்புறம் என் வலைப்பூவின் பெயரை மாற்றலாம் என நினைக்கிறேன் ஏதாவதொரு நல்ல பெயரா சொல்லுங்களே ப்ளீஸ்,,,,,,,,,,

7 comments:

Chitra said...

அவ்வாறு சின்னப்புள்ளத்தனமா இருந்த கவிதைகளில் பிரபலம் மகாகவிபாரதி பற்றிய எழுதியது.

.....இப்படியெல்லாம் சொன்ன பிறகு, நாங்க என்னத்த சொல்ல.... ஹா,ஹா,ஹா,ஹா...

ஹேமா said...

சரி தப்பு சொல்லமுடியாது ரியாஸ்.இரண்டு கவிதைகளும் உங்க உணர்வோட நல்லாவே இருக்கு !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சின்னப்புள்ளையா இருக்கும் போது கவிதை எழுதுறது தப்பு இல்லை பாஸ்!
சின்னப்புள்ளைத்தனமா கவிதை எழுதுறதுதான் தப்பு!
உங்க கவிதைகள் ரெண்டும் நல்லா இருக்கு!
வாழ்த்துக்கள்!
நீங்கள் தொடர்ந்து என்னிடம் வந்தால் நானும் தொடர்ந்து உங்களிடம் வருவேன்!
டீலா நோ டீலா?

Philosophy Prabhakaran said...

// அப்புறம் என் வலைப்பூவின் பெயரை மாற்றலாம் என நினைக்கிறேன் ஏதாவதொரு நல்ல பெயரா சொல்லுங்களே ப்ளீஸ்,,,,,,,,,, //

ஐடியாவுக்கா பஞ்சம்... எனிடம் நிறைய இருக்கு... எந்தமாதிரி தலைப்பு வேணும்னு சொல்லுங்க... மற்றதை நான் பாத்துக்குறேன்...

Riyas said...

@ சித்ரா அக்கா

@ ஹேமா அக்கா

தொடர்ச்சியான உங்கள் ஆதரவிற்கு நன்றி..

Riyas said...

//Philosophy Prabhakaran said...


ஐடியாவுக்கா பஞ்சம்... எனிடம் நிறைய இருக்கு... எந்தமாதிரி தலைப்பு வேணும்னு சொல்லுங்க... மற்றதை நான் பாத்துக்குறேன்.// நன்றி நண்பா ஏதாவது கவிதைத்தனமாக அழகான தமிழ் அல்லது ஆங்கில சொல்லாக அல்லது வாசகமாக இருந்தால் நல்லது..

Anonymous said...

உண்மையிலே பாரதி கவிதை சிந்திக்க தூண்டுகிறது ;-)

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2