விடியலுக்கு முன்னால்
விழித்தெழுந்து
கடவுளை வணங்கி
உள்ளதை உண்டுவிட்டு
கையில் மண்வெட்டியுடன்
மனதில் நம்பிக்கையுடன்
நகர்கிறார்கள்
இவர்கள்தான்
பூமியின் பழைய மனிதர்கள்
விவசாயிகள்...!
வெயில் மழையிரண்டும்
இவர்கள் தோழர்கள்.
சிலவேளை
பகைத்துக்கொள்வதுண்டு
தாயின் மீது வரும்
பிள்ளையின் கோபம் போல...!
ஒவ்வொரு விவசாயியும்
ஒவ்வொரு போராளியே
மழையோடும்
வெயிலோடும்
போராடிக்கொண்டுதானிருக்கிறான்
இறக்கும் வரையில்...!
வெயில் சுடும்
வெயிலுக்கு பயந்தவர்களுக்கு
வெயிலையே புசிப்பவர்கள் இவர்கள்
எங்கே சுடப்போகிறது
சூரியனே கீழிறங்கி
வந்தாலும் உருகிவிடும்
இவர்களின்
வறண்ட மேனியில் மோதி...!
தூக்கத்திலும்
விழித்துக்கொண்டிருக்கும்
குடில் காவலாளர்கள் இவர்கள்.
காட்டு மிருகங்களோடும்
போராடி ஏன்
யானையோடும் போராடவேண்டி
வரலாம்...!
உலகுக்கு உணவு தருபவர்கள்
அவர்கள் உண்பதென்னவோ
அரைவயிறுதான்
என்று தனியும் இந்த வறுமை
என்று செழிக்கும்
இவர்கள் வாழ்க்கை...!
11 comments:
உலகுக்கு உணவு தருபவர்கள்
அவர்கள் உண்பதென்னவோ
அரைவயிறுதான்
என்று தனியும் இந்த வறுமை
என்று செழிக்கும்
இவர்கள் வாழ்க்கை...!//
ஒவ்வோர் வெற்றியின் பின்னுமுள்ள கடின உழைப்புக்களை நாங்கள் கண்டு கொள்ளத் தவறி விடுகிறோம் என்பது போலத் தான் இந்த விவசாயிகள் வாழ்க்கையும். கவிதை வறுமையின் பிடியில் வாடும் விவசாயிகளின் அனுதாபக் குரலாய் ஒலித்திருக்கிறது.
வெயில் சுடும்
வெயிலுக்கு பயந்தவர்களுக்கு
வெயிலையே புசிப்பவர்கள் இவர்கள்
எங்கே சுடப்போகிறது
சூரியனே கீழிறங்கி
வந்தாலும் உருகிவிடும்
இவர்களின்
வறண்ட மேனியில் மோதி...!
.....மனதை கனக்க செய்த வரிகள். அவர்களின் சோகங்களின் நிஜங்களும் சுடுகிறதே.
பூமியின் பழைய மனிதர்கள்
வித்தியாசமான சிந்தனை
புதுமையான சொற்பிரயோகம்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல எழுத்து நடை நண்பரே ,..
மிக ரசித்தேன் வரிகளை கையாண்ட விதம்
சிறப்பு ... வாழ்த்துக்கள் .///
என்ன ரியாஸ், திடீர்னு, விவசாய காத்தே வீசுது...... அன்று பைத்தங்காய்.....
உலகுக்கு உணவு தருபவர்கள் விவசாயிகள் தான் உண்மையிலேயே போராளிகள். நல்ல கவிதை.
போராளிகள் என்று அவர்களை விமர்சித்ததே பெருமை !
///////////ஒவ்வொரு விவசாயியும்
ஒவ்வொரு போராளியே
மழையோடும்
வெயிலோடும்
போராடிக்கொண்டுதானிருக்கிறான்
இறக்கும் வரையில்...!
/////////////
உண்மைதான் . கவிதை சிறப்பு
ஒவ்வொரு விவசாயியும்
ஒவ்வொரு போராளியே
மறுக்க்முடியாத உண்மை.
ஃஃஃஃவெயில் மழையிரண்டும்
இவர்கள் தோழர்கள்.ஃஃஃஃ
ஆமாங்க... வலியோடு நடாமடும் சந்தோச தென்றல்கள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
>>உலகுக்கு உணவு தருபவர்கள்
அவர்கள் உண்பதென்னவோ
அரைவயிறுதான்
வலி தரும் வரிகள்
Post a Comment