ஓர் நாள் இரவு
ஓர் பயணம்
ஓராயிரம் மைல்கள்
ஓடியிருக்கலாம்...!
அது ஐரோப்பா என
அடையாளம்
கண்டேன்
நாகரீக
வாசனையினால்...!
பல தேசங்கள்
கடந்து
பவனிவரும் போது
மரண ஓலங்கள்
காதில் விழவே
கால் வைத்தேன்
பாரினில்...
அது ஜேர்மனிய தேசம்
அறிந்து கொண்டேன்
உயிரிழந்தவர்கள்
யூதர்கள்
ஆனபடியால்...!
மொத்தமாகவும்
சில்லறையாகவும்
வாங்கப்பட்டன
அங்கே
அவர்கள் உயிர்....!
உயிர் கொடுத்தவன்
எங்கோயிருக்க.
இங்கே
உயிர் எடுப்பவன்
எவன்
எனக்கேட்டேன்...!
'நான் தான்'
தூரத்திலிருந்து
ஓர் குரல்.
அது ஹிட்லர்தான்,
அறியத்தந்தது எனக்கு
அவ்வார்த்தையில் வந்த
ஆணவமும்
அகங்காரமும்....!
உயிரெடுக்க
உனக்கென்ன
உரிமையிருக்கு
உரத்துக்கேட்டேன்....!
ஹிட்லரின்
பதிலுக்கு முன்னே
அம்மாவின் குரல்
"ஏழு மணியாச்சு
எழுந்திரு"
ஹிடலரின் பதில்
இன்னும் ஓர் இரவில்
(மீள்பதிவு)
11 comments:
வடை தின்ன போறேன்
மீண்டும் தூங்கி பதில் கேட்டு சொல்லுங்கள் ....
ஹிட்லரிடம் மட்டுமல்ல அவன் உருவில் நடமாடும் அனைவரிடமும்
துஷ்யந்தன் பக்கங்கள்,
அசத்தல் பதிவு பாஸ்,
உங்கள் பதிவுக்கு கமெண்ட்ஸ் போட முடியாமல் இருக்குறது கவனியுங்கள் நண்பா
நல்லாருக்கு
மிகவும் ரசித்தேன்...
//மொத்தமாகவும்
சில்லறையாகவும்
வாங்கப்பட்டன
அங்கே
அவர்கள் உயிர்....!//
ம்ம்ம் கொடுமை
ரியாஸ்...அப்பிடியே நம்ம நாட்டுப் பக்கமும் போய் வந்திருக்கலாம்.நல்ல கற்பனை !
நல்ல கற்பனை
அசத்தல் பதிவு
ஹிட்லரின் கொலைப் பசிக்கு ஆளான யூதர்கள் பற்றிய நினைவு மீட்டற் கவிதை, மீண்டும் அந்த நினைவுகளைக் கண் முன்னே கொண்டு வருகிறது.
What a twist?
Post a Comment