வடைக்கதையும் வைரமுத்துவும்...!

காக்கா வடைக்கதை கவிஞர் வைரமுத்து தன் கவிதை நடையில் சொன்னால் எப்பிடியிருக்கும் ஓர் உல்டா கற்பனை,,, படித்ததில் பிடித்தது..



புழுதி படிந்த ஒரு கிராமத்தில், யௌவனக் கிழவி ஒருத்தி, வடை சுட்டு விற்று வந்தாள். அந்த மோக வடைக்காகத் தாகம் கொண்டு வந்தது ஒரு கார்மேகக் காகம்! ‘சில்லறை கொடுக்காமல் வடை கேட்டால், உன்னைக் கல்லறைக்கே அனுப்பி விடுவேன்’ எனச் சினந்தாள் அந்தச் சிங்காரக் கிழவி. ஆனால், பாட்டி பாராத சமயம், அந்த அந்தகக் காகம் சந்தன மின்னல் போல் பாய்ந்து, அந்தக் கந்தக வடையைக் கவர்ந்து சென்றது.

எங்கே சென்றது? அது ஒரு தாவணி மேகங்கள் சூழ்ந்த காடு; பொன்மாலைப் பொழுது. பச்சைப் புல்வெளி ஓரம், பன்னீர்க் குடங்களின் சாரம்! ஒரு ரோஜாப்பூ ஆளான நேரம். அங்கே சென்றது காகம்!

விதைக்குள் இருந்து வந்த விருட்சம், அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம். அதன் கிளைகளில் சென்று அமர்ந்தது அந்தச் சொப்பனக் காகம்!

அந்தக் கனவு வடையைத் தன் வீரிய விரல்களுக்கு இடையே வைத்து, நேரிய நயனத்தால் சுற்றுமுற்றும் பார்த்தது; கூரிய அலகால் கொத்திச் சாப்பிட முனைந்தது. அப்போது...

பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது ஒரு நரி! அந்த நரி, நர்த்தக நரி! நாலடியார் நரி! நீதியறிந்து சேதி சொல்லும் போதிமரத்துச் சாதி!

நர்த்தக நரி கார்மேக காகத்தைப் பார்த்தது; உடல் வியர்த்தது. நரியின் மனத்தில் ஒரு வெறி வேர் விட்டது! அந்த ராஜ வடையை அபகரிக்க, அதன் நந்தவனத்து மூளை நாச வேலை செய்தது. நரி அதுவாகக் காகம் அருகே மெதுவாக... ஒரு இதுவாகச் சென்றது!

“ஓ, உலக அழகியே! உள்ளூர் மோனலிஸாவே! கறுப்பு முந்திரியே! கந்தர்வ சுந்தரியே! நீ பார்க்கவே எவ்வளவு அழகு! நீ மட்டும் கானம் இசைத்தால், எருதுக்கும் விருது கிடைக்கும். சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்!” என்றது.

இந்த இடத்தில்தான் சரித்திரம் பிறக்கிறது; பூகோளம் புரள்கிறது. நரியின் தேவ எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது. கார்மேகக் காகம் நரியை வெறுத்தது; பாட்டை ஒறுத்தது; அது பின்வருமாறு பதிலிறுத்தது...

“நான் வைரமுத்துவின் வீட்டு வாசலில் வளர்ந்த காகம். மெட்டிருந்தால்தான் பாடுவேன்; இல்லையேல் இல்லை!” என்று சொல்லிப் பறந்தது; நரியின் சூது இறந்தது!

கதை முடிவில், பாரதிராஜாவின் குரலில் வைரமுத்துவின் வாசகங்கள்...

‘ஓ, புழுதியின் புத்திரர்களே! இது ஒரு யுகப் புரட்சி! இன்னும் இருநூறு வருஷங்களுக்கு இந்த வாடகை வடை கதை வைரமுத்துவின் வாசலுக்கு விலாசம் சொல்லிக்கொண்டே இருக்கும். அங்கு ஆனந்தங்கள் பரவசம்! அனுமதி இலவசம்!’

எழுதியவர்- ‘ஹ்யூவேக்’


மறக்காமல் ஓட்டுப்போடவும்,, நன்றி

12 comments:

தமிழ் செல்வன் இரா said...

super..

தடம் மாறிய யாத்ரீகன் said...

நல்ல இருக்கு.... வைரமுத்து சொல்லி இருந்தா இப்படித்தான் இருக்கும்

Unknown said...

என்னாது ???ஹிஹி நல்லா இருக்கு..

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப சூப்பரா இருக்கு பாஸ் :)

Jana said...

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விவேக் வைரமுத்துப்போல உடை வேடமணிந்து இதை படித்துக்காட்டுவார். இரசித்து பார்த்த ஒரு நிகழ்வு. அதை எழுத்தாக தந்துள்ளீர்கள்
மீண்டும் அந்த நினைவுகளுக்கு கொண்டு சென்றது.

Balu Homoeo Physician said...

good attempt

Unknown said...

ஹ ஹா ஹி ஹி super

Unknown said...

tamil manam 4

Unknown said...

இதேபோலவே நான் செய்த கற்பனை ஒன்று

http://tamilyaz.blogspot.com/2011/06/blog-post_15.html

Mohamed Faaique said...

நாம ரூம் போட்டா கூட இப்படி யோசிக்க முடியாதுப்பா.....

http://faaique.blogspot.com/2011/06/normal-0-false-false-false-en-us-x-none.html

கிருபா said...

அருமை அருமை சகோ

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல

Muruganandan M.K. said...

சூப்பரோ சூப்பர்.

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...