உலக வரலாற்றின்
உள்ளடக்கம்
வியப்புகளாலும்
விசித்திரங்களாலும் மட்டும்
ஆனதல்ல
வியர்வை துளிகளாலும்
ஆனதே!
ஆதிமனிதனுக்கும்
அதனைத்தொடர்ந்தவனுக்கும்
உயிர் நிலைக்க
உணவு
உணவு கிடைக்க
உழைப்பு
உலகின் நியதி
இதுவே!
எதுவுமேயில்லை
என்றால்
எதுவும் உனதில்லை
எல்லாமே
எனதென்றால்
உலகமும் உனதே!
பூமி
வளங்கள் நிறைந்தது
வாங்கிக்கொள்வோம்
வியர்வைத்துளிகளை
விற்று!
அனைவருக்கும்
அனுமதி இலவசம்!
உலகம்
செழித்துக்கொண்டேயிருக்கும்
உழைக்கும் வர்க்கம்
உயிர் வாழும் வரை!
மழைத்துளிகள்
பொழிந்துகொண்டேயிருக்கும்
வியர்வைத்துளிகள்
காயும் வரை!
16 comments:
பின்னி எடுத்திருக்கீங்க...
எதுவுமேயில்லை
என்றால்
எதுவும் உனதில்லை
எல்லாமே
எனதென்றால்
உலகமும் உனதே!
அருமையான அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் கொண்ட கவிதை .
முதல் பந்தியிலும் கடைசி பந்தியிலும் சூப்பர் பன்ச் குடுத்திரிக்கீங்க...
அருமையான கவிதை...
வணக்கம் பாஸ்,
நலமா?
உழைப்பாளிகள் வாழும் வரை இந்த உலகம் செழிப்பாக இருக்கும் என்பதனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது இக் கவிதை.
உழைப்பின் உயர்வை அருமையாகச் சொல்லி நிற்கும் கவிதை பாஸ்.
உழைப்பே உயர்வு என்பதை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
உழைப்பின் உயர்வை சொல்லும் கவிஅருமை
ஸலாம் சகோ.ரியாஸ்.,
//பூமி
வளங்கள் நிறைந்தது
வாங்கிக்கொள்வோம்
வியர்வைத்துளிகளை
விற்று!
அனைவருக்கும்
அனுமதி இலவசம்!//
சூப்பர் கருத்து,
உழைப்பே சிறப்பு.
ஆக்கத்திற்கு நன்றி சகோ.
நல்ல வரிகள் ரியாஸ்.
அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .....
உலகம்
செழித்துக்கொண்டேயிருக்கும்
உழைக்கும் வர்க்கம்
உயிர் வாழும் வரை!
மழைத்துளிகள்
பொழிந்துகொண்டேயிருக்கும்
வியர்வைத்துளிகள்
காயும் வரை!
சத்தியமான வரிகள்!
உலகம்
செழித்துக்கொண்டேயிருக்கும்
உழைக்கும் வர்க்கம்
உயிர் வாழும் வரை!
மழைத்துளிகள்
பொழிந்துகொண்டேயிருக்கும்
வியர்வைத்துளிகள்
காயும் வரை!
சத்தியமான வரிகள்!
அருமையான கவிதை , மேலும் தொடரட்டும் . அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
அருமை ரியாஸ்.
மிக மிக அர்த்தமுள்ள கவிதை !
hhgaphhhihifohoihf
அன்பின் ரியாஸ் - கவிதை அருமை - உழைப்பின் பெருமையை பறை சாற்றும் கவிதை - வியர்வை முதலிலும் இறுதியிலும் நச்சென்றிருக்கிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment