பராக்கிரமபாகு - The Great King Of Srilanka..


ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் பொருளாதாரத்திலேயே தங்கியுள்ளது. குறித்த நாட்டின் உற்பத்தித்துறை,கைத்தொழில்,விவசாயம் மற்றும் ஏனைய சேவைகளில் ஏற்படும் அதிகரிப்பை வளர்ர்ச்சி அல்லது அபிவிருத்தி எனக்கூறலாம்

அதிலும் விவசாயத்துறையின் வளர்ர்ச்சி என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமானது. அதாவது மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்றான உணவுத்தேவை இதன்மூலமே பூர்த்திசெய்யப்படுகிறது. ஒரு நாட்டு மக்கள் அவர்களுக்கு தேவையான உணவை அவர்களே உற்பத்தி செய்வதன் மூலம், உணவுத்தேவையை பூர்த்தி செய்து,அதில் தன்னிறைவு பெறுகிறார்கள் எனில் அவர்கள் வேறு நாடுகளில் தங்கியிருக்கவேண்டிய தேவை மிகக்குறைவே. அதையே தன்னிறைவுப்பொருளாதாரம் எனவும் அழைப்பர்.

இன்றைய கணினியுகத்தில் விவசாயம் என்பது மிகவும் குறைந்துகொண்டு வரும் ஒரு தொழிலாகவே கானப்படுகிறது. கிராமப்புறங்களில் கூட இன்று அதிகளவானோர் விவசாயத்தை விட்டுவிட்டு ஏனைய தொழில்களை நாடிச்செல்கின்றனர். இதற்கு பல காரணங்களை கூறலாம். பொதுவாக நமது தெற்காசிய நாடுகளை பொருத்தமட்டில் விவசாயிகள் முன்னேற முடியாத ஒரு நிலையே கானப்படும். அதாவது ஏனைய தொழில் துறைகளில் உள்ளவர்கள் படிப்படியாக தம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளும் போது, விவசாயிகள் மட்டும் எப்போதும் ஏழைகளாகவும் வறுமையில் வாடுபவர்களாகவுமே நம் சமூகத்தில் வாழ்கிறார்கள். விவசாயத்தை வெறுப்படைய செய்யும் மற்றுமொரு பிரதான காரணி விவசாய உற்பத்திகள் மீதான சுரண்டல், இங்கே மழை வெயில் பாராது கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயிகள் ஈட்டும் இலாபத்தை விட அதனை சந்தைப்படுத்துவோர்,விநியோகிப்போர் அதிக லாபம் ஈட்டுகின்றனர்.

விவசாயத்தை தற்காலத்தில் தொடர முடியாமைக்கு இன்னுமொரு காரணம் போதியளவு நீர்ப்பாசண திட்டங்கள் இல்லாமையே. இலங்கையின் நிறைய பிரதேசங்களில் வானத்து மழையை நம்பியே அதிகளவானோர் இன்று விவசாயம் செய்கின்றனர். இலங்கையில் இப்போது கானப்படுகின்ற நீர்ப்பாசண திட்டங்களில் அதிகமானவை பழைய மன்னர் காலத்திலே கட்டமைக்கப்பட்டதாகும். இலங்கையை ஆண்ட மன்னர்களில் என்னைக்கவர்ந்த ஒரு விடயம் அவர்கள் கட்டிய ஆயிரக்கணக்கான குளங்களும் நீர்ப்பாசண திட்டங்களுமாகும். அதன் பயன்பாடு இன்றுவரை தொடர்கிறது. அதன்மூலம் இலட்சக்கணக்கான மக்கள் இன்னமும் தன் ஜீவாதாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் முக்கியமானவர் பராக்கிரமபாகு என்ற மன்னராகும். 12ம் நூற்றாண்டில் (1153–1186)  இலங்கையின் பொலன்னறுவைவை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தவர். இவரின் ஆட்சிக்காலமே "இலங்கையின் பொற்காலம்" என இன்றுவரை வர்ணிக்கப்படுகிறது. அன்றைய காலத்தில் உணவுற்பத்தியில் தன்னிறைவு கனடது மட்டும்ல்லாமல் வெளிநாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யும் நிலையில் விவசாயம் வளர்ச்சியடைந்து கானப்பட்டதே இவரின் புகழுக்கு காரணம்.

இவருதாங்க அவரு "பராக்கிரமபாகு"

பராக்கிரமபாகு மன்னனின் இன்னுமொரு சிறப்பம்சம் ஏராளமான குளங்களையும் நீர்ப்பாசண திட்டங்களையும் ஏற்படுத்திக்கொடுத்ததாகும். மேலும் அவற்றிலே மிகவும் உறுதியாகவும் இருந்திருக்கிறான். ஒரு பிரதான இன்றுவரை போற்றப்படுகின்ற கொள்கை மூலம். "வானிலிருந்து விழுகின்ற ஒரு துளி நீரேனும் விவசாயத்திற்கு பயன்படாமல் கடலை சென்றடைய விடக்கூடாது -"not even a little water that comes from the rain must flow into the ocean without being made useful to man" -இதுவே அந்த கொள்கையாகும். பராக்கிரமபாகுவால் அமைக்கப்பட்ட திட்டங்களுள் மிக முக்கியமான பராக்கிரம சமுத்திரமாகும். இதன் பரப்பளவு 22 சதுரKM ஆகும். இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய குளமும் இதுவே. அதன் புகைப்படங்கள் கீழே.


தொழிநுட்ப வசதிகளோ நவீன இயந்திர வசதிகளோ இல்லாத அந்தக்காலத்திலேயே இவ்வாரான பெரிய திட்டங்களை மனித வளத்தை மட்டுமே பயன்படுத்தி ஏற்படுத்தியதற்காகவும். மக்கள் நலனை மட்டுமே கருத்திற்கொண்டதற்காகவும், அன்றைய கால இவ்வாறான மன்னர்களை இன்றைய சந்ததிகள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.

15 comments:

Admin said...

பராக்கிரம பாகுவை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவியது..வாசித்தேன்..வாக்கிட்டேன்..வாழ்த்துகள்..
வாழ்க்கைத் துணை நலம்

காட்டான் said...

பராகிரம பாகுவை பற்றி சிறுவயதில் படித்த ஞாபகம்.. பழைய இலங்க ரூபா நோட்டில் அவர் படம் இருந்தது இப்போதும் இருக்கின்றதா..? நல்லதோர் பதிவு வாழ்த்துக்கள் ரியாஸ்!!

Riyas said...

@மதுமதி

முதல் வருகைக்கும் ஓட்டுக்கும் ரொம்ப நன்றி,

Riyas said...

@காட்டான்

வாங்க காட்டான் அண்னே..

பழைய ரூபா நோட்டுகளில் பராக்கிரமபாகுவின் உருவச்சிலை இருந்ததுதான் இப்போது புதிதாக வருபவற்றில் அவை இல்லை,,

உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி,

Mohamed Faaique said...

பற்பொடி பக்கட்;ல இவர் போட்டோ இருக்குமே.. ஹி..ஹி... பராக்கிரம சமுத்திரம் போய் இருக்கிறேன்..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
This comment has been removed by the author.
~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ரியாஸ்,
எனக்கு இவை புதிய வரலாற்றுத்தகவல்கள்...
மிக்க நன்றி சகோ.

அந்தக்காலத்தில் இது போன்ற, தன்னலம் இன்றி மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு ஆண்ட நல்ல உள்ளம் பெற்ற மன்னர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்து இறந்த மக்கள் கொடுத்து வைத்தவர்கள்..!

நமக்கும் வந்து வாய்த்து இருக்கிறார்களே... ஆளுங்கட்சி பேய்களும்.. எதிர்க்கட்சி பிசாசுகளும்...
ஒழுங்கா இருக்கிற அணையை உடைக்க...

ச்சே..

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

ஹேமா said...

அருமையான சரித்திரப் பதிவு.இதுபோல இன்னும் எதிர்பார்க்கிறோம் ரியாஸ் !

அன்புடன் நான் said...

வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

நல்ல பதிவுங்க. நிறைய விவரங்கள் தெரிஞ்சுகிட்டேன்.

விவசாயம் பெருகணும். இப்ப இலங்கையில் விவசாயம் எப்படி நடக்கிறது?

இந்தியாவுல் தண்ணீர்ப் பிரச்னையைவிட, வேலைக்கு ஆள் கிடைக்கறதுதான் பெரிய பிரச்னை.

baleno said...

பராக்கிரமபாகுவின் திட்டங்கள் பற்றிய பதிவு சிறப்பானது.
பராக்கிரம சமுத்திரம் பார்க்க சிறுவயதில் கொடுத்துவைக்கவில்லை. எதிர்காலத்தில் பார்ப்பேன்.
ஹுஸைனம்மா@
இப்ப இலங்கையில் விவசாயம் எப்படி நடக்கிறது?
இரண்டு வருடங்களாக இலங்கையில் விவசாயம் மிக சிறப்பாக இருப்பதாக எனது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

Riyas said...

வாங்க baleno உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி,

நீங்கள் சொன்னது போல் இலங்கையில் தற்பொழுது விவசாயம் ஓரளவு சிறப்பாக இருக்கிறது..

மகாவலி அபிவிருத்தி திட்டங்கள்(ஆறுகள்) இருக்கும் பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக விவசாயத்தில் ஈடுபட முடிகிறதது,ஆனால் இந்த வசதி இல்லாத பிரதேசங்களில் மழைநீரை நம்பியோ அல்லது சிறு குளங்களை மட்டும் நம்பியே விவசாயம் நட்க்கிறது இது பெரும் குறையே..

Riyas said...

வாங்க ஹுசைனம்மா.. நீங்க சொல்வது சரிதான் இப்ப வேலைக்கு ஆள் எடுப்பது கடினம்தான்.. அதனால் ஒரு நாளைக்கான கூலியும் ரொம்ப அதிகரித்துவிட்டது..

மேலும் இப்ப எல்லாத்துக்கும் நிறைய இயந்திரங்கள் வந்திருப்பதால் ஆட்கள் அதிகம் தேவைப்படுவதுமில்லை..

asljhk said...

நீண்ட வரலாறாக இருப்பினும் சுறுக்கமாக தந்தமைக்கு நன்றி சகோ.
பராக்கிரமபாகு சமுத்திரத்தில் இன்றளவும் பொலன்னருவை மாவட்ட மக்கள் பயனடையும் அதே வேளை, சில போது ஏறாளமான இழப்புக்களைத்தான் நாளுக்கு நாள் சந்திக்கிறார்கள். ஒரு காலத்தில், பொலன்னருவை மாவட்டம் அதிக நெல் உட்பத்தி செய்யும் மாவட்டங்களில் முதன்மையாக விளங்கியமையும் இன்று அது தலைகீழாக மாறி இருப்பதும், கவலைக்கிடமான ஒன்றாகும். அதர்க்கான காரணங்களை சகோ. றியாஸ் அவர்கள் தனது மூன்றாவது பந்தியில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் உணர்த்தி நிற்கின்றது.

நன்றி
அன்ஸார். (இலங்கை, பொலன்னருவை)

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...