உங்கள் தேசத்தில்
எப்படியோ தெரியவில்லை
எங்கள் தேசத்தில்
பகலிலும் நிலவு வரும்
ஜன்னலோரங்களில்
எட்டிப்பார்த்தவாறே...
வெட்கங்கள்
உடுத்திக்கொண்டவாறே
அவ்வப்போது
வந்து மறையும் நிலவது..
பட்டப்பகலில்
பலர் முன்னிலையில்
மனசு
கொள்ளையடிக்கும்
தேவதை நிலவு..
திருவிழா
முட்டாய்களுக்காய்
பெற்றோரை விட்டுச்சென்று
தொலைந்து போன
குழந்தை போல்
பார்வைகளில் விழுந்து
கண்களுக்குள்
தொலைந்து போனவர்களுமுண்டு..
எங்கள் வயல்கள்
மழையில்லாமல்
வறண்டு போனாலும்
எங்கள் மனசுகள்
பசுமையிழப்பதேயில்லை
அவ்வப்போது
பொழிந்து செல்லும்
புன்னகை மழைகளால்...
16 comments:
ரசிக்கவைக்கின்றது கவிதை.சில மின்னல்கள் பசுமைகள் ஜன்னல் ஓரம் ம்ம்ம் வார்த்தைகள் நல்லாக இருக்கு ரியாஸ்!
இருக்கும் தேச மாந்தர்களின் மங்கைகள் பார்வையையும் தொட்டுச் செல்கின்றது கவிதை!பாய்க்கு நிக்கா ஆசை வந்திடுச்சு !ஹீ ஹீ
வெரி நைஸ்... என்ன பெயர் வச்சிருக்கீங்க?
'தேவதை நிலவு'
ம்.
எங்கள் வயல்கள்
மழையில்லாமல்
வறண்டு போனாலும்
எங்கள் மனசுகள்
பசுமையிழப்பதேயில்லை//
கனவிலே மிதப்பதாலோ ?
அருமை .
றியாஸ்....!
நீங்கள் எழுதியிருப்பது கவிதையா இல்லையா என்றேல்லாம் தெரியாது. ஆனால், மனதுக்கு மகிழ்வைத் தருகின்றது. இப்படியான வார்த்தை விளையாட்டின் மீது எனக்கும் ஆர்வமுண்டு.
மற்றவனுக்கு புரியாத முறையில் எழுதப்படுவதுதான் கவிதை என்றால், அப்படிப்பட்ட வரையறைக்குள் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை.
நீங்கள் இப்படியான வார்த்தை- மன விளையாட்டுக்களைத் தொடருங்கள். நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்!
உள்ளதை கட்டிப்போடும் கவிதை இது நண்பா ..
பசுமையோடு நினைவுகளும் சிறக்க வாழ்த்துக்கிறேன் ...
செமையா இருக்கு பாஸ்!
சில வார்த்தைகளில் 'றே' க்குப் பதிலாக 'ரே' வந்துவிட்டது! அதைமட்டும் மாற்றிவிடுங்கள்!
இளமையான, ரகளையான கவிதை!
கலக்குங்க ரியாஸ்! :-)
வார்த்தை பிரயோகம் பலே...ரியாஸ்...
காதல் பொழிகிறது...
//எங்கள் மனசுகள்
பசுமையிழப்பதேயில்லை
அவ்வப்போது
பொழிந்து செல்லும்
புன்னகை மழைகளால்.//
புன்னகை மழைகளுக்கே மனசுகள் பசுமையிழப்பதில்லை என்றால்.....காதல் பெருவெள்ளத்தின் முன் உங்கள் மனமெல்லாம் என்னாகுமோ தெரியலையே...நல்ல வார்த்தை பிரயோகம். இனிமையான கவிதை...
வானத்திற்கு தான் ஒரு நிலவு
நாம் மண்ணில் அல்லவா இருக்கிறோம்.. நமக்கு ஏது கணக்கு...
கவிதை சுவையாக உள்ளது
புலவர் சா இராமாநுசம்
இலகு தமிழில் அழகான வார்த்தை பிரயோகத்தில் மனவுணர்வுகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறியள் ரியாஸ்
ithuvum super
நல்லதொரு கவிதை ... தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !
Post a Comment