வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே..ஜோக்ஸ்!

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?" "சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

"எந்த ஐட்டம் கேட்டாலும் இல்லைன்னு சொல்றே, அப்புறம் என்ன எழவுக்கு மெனுகார்டை கொடுத்தே?" "ஒவ்வொரு ஐட்டத்தோட பேரையும் சொல்லி, இல்லைன்னு சொன்னா எனக்கு வாய் வலிக்குமே சார்."

நீதிபதி: ஏம்பா. இவ்வளவு பெரிய திருட்ட நீ மட்டும் தனியாவா செஞ்ச? குற்றவாளி: ஆமா ஐயா. இப்ப காலம் கெட்டுக் கிடக்குது. யாரையும் நம்ப முடியல...

மனைவி: என்னங்க பட்டாசு வாங்கப் போறேன்னு சொல்லிட்டு.. வெடிச்ச பட்டாசை எல்லாம் பொறுக்கிட்டு வர்றீங்க? கணவன்: அந்தக் கடைக்காரன் பழைய பட்டாசைக் கொடுத்து ஏமாற்றிவிடுவான்னு சொன்னாங்க. அதனால்தான் ஒவ்வொரு பட்டாசையும் வெடிக்குதான்னு வெடிச்சுப் பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன், எப்படி என் சாமர்த்தியம்!

ஸ்கூல் வாத்தியார நம்ம கிரிக்கெட் டீம் கோச்சா போட்டது தப்பாப்போச்சு!" "ஏன்?" "பிளேயர் சரியா விளையாடலைன்னா 'போய் உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வா'ன்னு சொல்றாரு!"

"இவர்தான் நம்ம புதிய சி.இ.ஓ. முதன்முதலா நம்ம ஆஃபீசுக்கு வந்துருக்காரு! ஸ்ரீநிவாசன் இவரை அழைச்சுட்டு போய் உட்கார வையுங்க!" "என்ன சார் இது? இவ்வளவு வயசு ஆனவருக்கு இன்னும் உட்கார கூடவா தெரியாது?"

"என்னடா ரொம்ப கவலையா இருக்கே?" "பின்ன என்னடா? அந்த பேங்க்ல லட்சக்கணக்கில் பணம் இருக்கு.. ஆனா அவசரத்திற்கு எடுக்க முடியலையே?" "ஏன் ஏடிஎம் கார்ட் தொலைஞ்சு போச்சா.. இல்ல செக் புக் இல்லையா?" "நீ வேற எனக்கு அந்த பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லடா"

மனைவி: புது டெலிபோன் டைரக்டரி எடுத்துக் கொண்டு ஒருவன் வந்துள்ளான்! கணவன்: அவனிடம் வேண்டாம்னு சொல்லு, நான் இன்னும் பழசையே படித்து முடிக்கவில்லை!

"ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?" "பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்."

கணவன்: குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா...? மனைவி: இல்லே... அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார்....

"சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துக்கிட்டது தப்பாப் போச்சு.. "ஏன்? "படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..

"ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?" "பிறர் சிரிக்கும்படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க."

"போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு...." "அதுக்கென்ன....?" "குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டுவேன்னு ஒரே தகராறு பண்றாரு..."

ஒருவர்: நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன் மற்றவர்: அப்புறம்? ஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்..

 

10 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

செம ஜோக்ஸ் மச்சி. கன்டினியு...

Unknown said...

சரவெடி!
பகிர்ந்தமைக்கு நன்றி!

அம்பலத்தார் said...

சுவாரசியமான துணுக்கு தோரணம் ஒன்றை தந்து மனந்திறந்து சிரிக்கவச்சிட்டிங்க

கடம்பவன குயில் said...

//ஒருவர்: நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன் மற்றவர்: அப்புறம்? ஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்..//

நிறையபேர் வீட்டு அனுபவம் போல இது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசித்து சிரிக்கும் படி இருந்தது..

கடம்பவன குயில் said...

//மனைவி: என்னங்க பட்டாசு வாங்கப் போறேன்னு சொல்லிட்டு.. வெடிச்ச பட்டாசை எல்லாம் பொறுக்கிட்டு வர்றீங்க? கணவன்: அந்தக் கடைக்காரன் பழைய பட்டாசைக் கொடுத்து ஏமாற்றிவிடுவான்னு சொன்னாங்க. அதனால்தான் ஒவ்வொரு பட்டாசையும் வெடிக்குதான்னு வெடிச்சுப் பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன், எப்படி என் சாமர்த்தியம்!//

இதுதான் எனக்கு பிடிச்சுருக்கு.

முத்தரசு said...

கொஞ்ச நேரம் சிரிக்கவைத்தமிக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

காமெடி கலக்கல் ! பகிர்வுக்கு நன்றி !

சசிகலா said...

ரசித்து சிரிக்கும் படியான பதிவு அருமை .

ஆத்மா said...

செம செம............

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2