தொலைத்ததை தேடும் பயனம்..!



தூக்கம்
கொள்ளையடிக்கப்பட்ட
இரவொன்றில்.
எனக்குப்பிடித்த
இருளோடும்
தனிமையோடும்
உறவாடிக்கொண்டிருந்தேன்...

எங்கெங்கோ சுற்றி
எதையோயெல்லாம்
எட்டிப்பிடித்த மனசு
திசைமாறிய காற்றாய்
திடீரென
பின்னோக்கி நகர்ந்தது
சில ஆண்டுகள்....

இதயப்பறவை
சிறகு முளைத்து
பறக்க தொடங்கிய காலமது
எல்லாமிருந்தும்
ஏதோவொரு வெறுமை
என்னுலகத்தில்...

ஏதோவொன்றை தொலைத்ததாய்
ஏக்கங்களும்
என்னுணர்வுகளும்..
அதிகம்
சிரித்ததில்லை நான்
சில காரணங்களுக்காய்...
வருந்தியிருக்கிறேன்
மனதோடு
பல காரணங்களுக்காய்...

காயங்கள் இல்லை
கனவு கண்டதுமில்லை
வெற்றிகளுமில்லை
தோல்விகளும் இல்லை
வலிகள் மட்டும்
நெஞ்சோடு...

தொடும் தூரத்திலிருந்தும்
தொடமுடியாதவொன்றுக்காய்...
தொலைந்தபின்னும்
தொலையவில்லை
ஏக்கங்கள்..

மேகங்கள் 
கலைந்துபோன பின்னும்
மழை வரும் என
நம்பும் 
விவசாயி போல....
தேடல்கள்
தொடர்கிறது
காலம் கடந்தும்
கிடைக்கலாம்
என்ற நம்பிக்கையில்....!

(கற்பனையல்ல கடந்தகால நிஜங்கள்)

12 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உலகமே அந்த நம்பிக்கையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது...

அழகிய அர்த்தமுள்ள கவிதை...

சுதா SJ said...

பாஸ் உங்களுக்கு கவிதை அருமையா வருது :) கவிதை படித்து முடித்ததும் ஏதோ ஒரு ஏக்கம் என் மனசிலும் :( நிறைவான கவிதை...

Kumaran said...

அழகான கவிதை சகோ..சிறப்பான வரிகள்.நன்றிகள்.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

Anonymous said...

உண்மை கவிதை நல்லாயிருந்தது...

காட்டான் said...

வணக்கம் ரியாஸ்!
கவிதை இனம்புரியாத சோகத்தை என்னுள் விதைத்து செல்கிறது..

தூக்கம்
கொள்ளையடிக்கப்பட்ட
இரவொன்றில்.
எனக்குப்பிடித்த
இருளோடும்
தனிமையோடும்
உறவாடிக்கொண்டிருந்தேன்...

இந்த நவீன காலத்திலும் தனிமையா? இல்லை அப்போது மட்டும்தானா? எனக்கும் இங்கு வந்த அந்த ஆரம்ப காலங்களில் உங்கள் வலிகளை போல உணர்ந்திருக்கிறேன்!!!

நல்லதோர் கவிதை பகிர்வுக்கு நன்றி!!

Riyas said...

@காட்டான்
//வணக்கம் ரியாஸ்!
கவிதை இனம்புரியாத சோகத்தை என்னுள் விதைத்து செல்கிறது..//

வணக்கம் காட்டான் அண்ணே!

@துஷ்யந்தன்
//பாஸ் உங்களுக்கு கவிதை அருமையா வருது :) கவிதை படித்து முடித்ததும் ஏதோ ஒரு ஏக்கம் என் மனசிலும் :( நிறைவான கவிதை.//

வணக்க்ம துஷ்யந்தன்

மிக்க நன்றி உங்களைப்போன்ற ஒரு சிலரின் தொடர்ச்சியான பாராட்டுதல்கள் வருகைதான் என்னை தொடர்ந்து இந்த வலைப்பக்கத்தில் எழுத செய்கிறது.. என்னால் முடிந்த அளவுக்கு.

உண்மையில் இது இரண்டு வருடம் முன்பு எழுதிய கவிதை.

Riyas said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

நன்றிங்க.

@Kumaran

நன்றி குமரன்.

@ரெவெரி

நன்றி ரெவெரி

Philosophy Prabhakaran said...

நல்ல படைப்பு...

தனிமரம் said...

வாழ்க்கையே ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது. கிடைக்கலாம் என்ற ஆதங்கம் புரிகின்ற வலிகள் மிக்க வார்த்தை அழகான கவிதை ரியாஸ் தொடருங்கள் நல்ல படைப்புக்களை வலையில்.

சசிகலா said...

கிடைக்கலாம்
என்ற நம்பிக்கையில்....
நம்பிக்கை தானே வாழ்க்கை . அருமையான வரிகள்

திண்டுக்கல் தனபாலன் said...

Superb sir !

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...