ALARM -சும்மா அதிருதில்ல-அனிமேஷன் குறும்படம்..

கடிகார முற்களோடு போட்டிபோட வேண்டிய இயந்திர வாழ்க்கையாகிப்போன இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வேலையையும் அந்தந்த நேரத்தில் செய்வதுதான் வெற்றிக்கான வழியும் கூட.. இதையே நேர முகாமைத்துவம் என்பார்கள்.. ஏனைய காரியங்கள் சரியாக நடப்பதற்கு இந்த நேர முகாமைதான் முதற்படி! இது பிழைத்துவிட்டால் சங்கிலித்தொடராக மற்ற காரியங்களும் தோல்வியிலேயே முடிவடையும்..

ஒவ்வொரு வேலையே தொடங்குமுன் அதற்கான நேரத்தை வகுத்துக்கொள்வதன் மூலம் அதற்கான இலக்கை சீக்கிரம் அடைய வழி வகை செய்யும்..அது நடக்கிற நேரத்தில் நடக்கட்டும் என விட்டிருந்தால் நமக்கான வெற்றியும் அது வருகிற நேரத்தில்தான் வரும் தேவையான நேரத்தில் வராது..

எந்தவித வேலைகளையும் சரியான நேரத்திற்கு செயவது, சமூகமளிப்பது அல்லது உரிய நேரத்திற்கு கொஞ்சம் முன்னதாகவே தயாராகிக்கொள்வதே தனி மனித ஒழுக்கமாகவும் கருதப்படுகிறது.. இன்றைய நம் சமூகத்தில் வெற்றியடைந்தவர்கள் அல்லது சமூகத்தில் அந்தஸ்துடையவர்கள் என பலரை எடுத்துநோக்கினால் அவர்களுடைய வெற்றிக்கு கடுமையான உழைப்போடு சேர்ந்து நேரம் தவறாமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.. சிம்பிளாக சொல்லப்போனால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இவரின் நேரம் தவறாமை பற்றி பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம்.. இன்று அவர் இருக்கும் உயரமும் நமக்கு தெரியாததல்ல!!

நேர முகாமைத்துவம் தொடங்குவது அதிகாலை கண்விழித்து எழுவதிலிருந்துதான்.. இதற்கு நமக்கு பெரிதும் பயன்படுவது இந்த அலாரம், இன்று பலர் அலாரத்திற்கு பயன்படுத்துவது நம் கைப்பேசிகளைத்தான்.. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது இந்த அலாரத்தின் ஒலி பலருக்கு எரிச்சல் தருவதுதான்.. பலர் அலாரத்தை நிறுத்திவிட்டோ அல்லது ரிப்பீட் அலாரம் வைத்துவிட்டோ இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி எழலாம என தூங்குபவர்களும் அதிகம்தான்..நானெல்லாம் அந்த வகையறாதான்..இந்த அனிமேஷன் குறும்படத்தை பாருங்கள்.. நம்மைப்போன்ற சோம்பேரி ஒருவரின் காலைப்பொழுதில் இந்த அலாரம் எவ்வளவு டார்ச்சர் கொடுக்கிறதென்று பாருங்கள்! எத்தனை அலாரம் அடிக்கிறதென்றும் எண்ணிப்பாருங்கள்.. மிக அழகான அனிமேஷன் படைப்பு!! நீங்கள் முன்பு பார்த்திருக்கவும் கூடும்!

4 comments:

Athisaya said...

வணக்கம் சொந்தமே..!அழகான பகிர்வு..!நான் தான் முதல் கருத்து....அவ்வ்வ்வ்வ்வ்வ

Riyas said...

வணக்கம் அதிசயா.. பதிவு போட்டவுடன் முதல் ஆளா வந்துட்டிங்க..நன்றி..

கோவி said...

படம் காட்டுறீங்க..

Athisaya said...

எனக்கு வரும் முதல் கருத்திடல்களின் மகிழ்வு தான் என் சொந்நங்களுக்கும் அம் மகிழ்வை கொடுக்க என்னை தூண்டியது.நீங்கள் மகிழ்ந்திருந்தர் அது என் திருப்தி.சந்திப்போம் சொந்தமே

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2