தேநீர் வேளை கிறுக்கல்கள்!!!


நான் பூக்களின் ரசிகன்
என் வீட்டு ஜன்னல் சொல்கிறது
அதற்கு தெரியாது
பூக்கள் பறிப்பவள் ரசிகனானது!!

தெருவோர கடைகளிலெல்லாம்
உன் பெயர் சொல்கிறார்
இளையராஜா
எனக்குப்பிடித்த பாடல்களாக!!

மழைத்துளிகளுக்கு
மரண தண்டனை வழங்க வேண்டும்
உன் அனுமதியில்லாமல்
உன்னைத்தொட்டு விளையாடுகிறது!!

சற்றென்று பொறுக்கிச்செல்லுங்கள்
நீங்கள் தொலைத்த புன்னகைகளை
இங்கே இலவசமாய்
வீசிச்செல்கிறாள் இவள்!!

உனக்கான பேரூந்தில் நீயும்
எனக்கான பேரூந்தில் நானும்
ஏறிச்சென்று விட்டபின்பும்
காத்திருக்கிறது நம் பார்வைகள் மட்டும்
இன்னுமொரு பேரூந்துக்காய்!!



நடுப்பகல் வேளை
நடைபயணங்களையும்
பரவசமாக்கி விடுகிறது
உன் ஒற்றைப்பார்வை!
வெயில் நேர
சாலையோரக்கடை
துரித குளிர்பானங்கள் போல!

அதிகாலை சூரியன்
பௌர்னமி நிலவு
கொடுக்காத வெளிச்சங்களை
அள்ளி வீசுகிறது
உன் ஒற்றை
வெட்க புன்னகை!

சினுங்கிக்கொண்டே
அழைப்பைச் சொல்லும்
அலைபேசி
சிரித்துக்கொண்டே
அழைப்பைச் சொல்கிறது
உன் ஒற்றை வார்த்தை
கேட்டதும்!

14 comments:

test said...

செமையா இருக்கு பாஸ்!
லவ்ஸ்ல இருக்கீங்களா என்னமா வருது வார்த்தைகள்! எதைக்குறிப்பிட்டுச் சொல்வதென்று தெரியவில்லை.. தனித்துப் பார்த்தாலும் எல்லாமே குட்டிக்குட்டி கவிதையா...
கலக்குறீங்க பாஸ்!

maruthamooran said...

////உனக்கான பேரூந்தில் நீயும்
எனக்கான பேரூந்தில் நானும்
ஏறிச்சென்று விட்டபின்பும்
காத்திருக்கிறது நம் பார்வைகள் மட்டும்
இன்னுமொரு பேரூந்துக்காய்!!///

சிம்ளி சூப்பர். வாழ்த்துக்கள்!

சசிகலா said...

ஒவ்வொரு வரிகளுமே ரசிக்கும் படியாக அருமை .

ஆத்மா said...

அருமையான கவிதை நண்பா...:)

ஆத்மா said...

சற்றென்று பொறுக்கிச்செல்லுங்கள்
நீங்கள் தொலைத்த புன்னகைகளை
இங்கே இலவசமாய்
வீசிச்செல்கிறாள் இவள்!!//

சூப்பர்...

செய்தாலி said...

அழகான கவிதைகள் சகோ
அருமை பாராட்டுக்கள்

Thava said...

@@ மழைத்துளிகளுக்கு
மரண தண்டனை வழங்க வேண்டும்
உன் அனுமதியில்லாமல்
உன்னைத்தொட்டு விளையாடுகிறது!! @@

இந்த ஒன்றில் விழுந்துவிட்டேன்.. மயக்கத்துடனே இதை எழுதுகிறேன், தங்களது இக்கவிதைகள் என் மனதோடு என்றும் மௌனமாக குடிக்கொள்ளும் என்றே நம்புகிறேன்.பகிர்வு அருமை..நன்றி நண்பா.

Seeni said...

kavithai arumai!

Riyas said...

@ஜீ...

நன்றி ஜீ

//செமையா இருக்கு பாஸ்!
லவ்ஸ்ல இருக்கீங்களா என்னமா வருது வார்த்தைகள்! //

போங்க பாஸ்!! அப்படியெல்லாம் ஒன்னுமில்ல |)) சும்மா வாரதுதான்!


@மருதமூரான்.

மிக்க நன்றி மருதமூரான்..

Riyas said...

@Sasi Kala

நன்றிங்க.. உங்கள் தொடர் ஊக்குவிப்பிற்கு!!


@சிட்டுக்குருவி

நன்றி இம்ரான்..

Riyas said...

@செய்தாலி

மிக்க நன்றி செய்தாலி..


@Kumaran

உணர்வு பூர்வமான கருத்திற்கு ரொம்ப நன்றி குமரன்.

Athisaya said...

சற்றென்று பொறுக்கிச்செல்லுங்கள்
நீங்கள் தொலைத்த புன்னகைகளை
இங்கே இலவசமாய்
வீசிச்செல்கிறாள் இவள்!!
மிகவும் ரசித்த வரிகள்.பாராட்டுக்கள் சொந்தமே..!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் !

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...