மனைவியின் ஞாபகார்த்தமாக மரங்களால் இதயம் செய்த விவசாயி Winston Howes.!

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே..
                                                                                                          (கவிஞர் வாலி)


தன் மனைவி மும்தாஜ மஹாலின் ஞாபகமாக இன்று வரை காதல் சின்னமாக பலரால் போற்றப்படும் தாஜ்மஹால் எனும் பிரம்மாண்டமான ஒரு மாளிகையை பளிங்கினாலே கட்டி முடித்தான் ஷாஜஹான் என்ற மன்னன்.. இது இந்தியாவின் ஆக்ரா பிரதேசத்தில் உள்ளது.. ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகவும் கானப்படுகிறது! இது 1600 களில் நடந்த சம்பவம்.. தற்பொழுது மிக அண்மையில் இறந்து போன தன் அன்பு மனைவியின் ஞாபகார்த்தமாக இங்கிலாந்து விவசாயி ஒருவரின் வித்தியாசமானதும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான முயற்சி இணையமெங்கும் கானக்கிடைக்கிறது!

இங்கிலாந்தின் South Gloucestershire பகுதியில் வசித்து வரும் விவசாயி Winston Howes. இவருக்கு வயது 70, இவர் 1962 யில் Janet என்ற பெண்னை தன் மனவாழ்க்கை துனைவியாக ஆக்கிக்கொண்டுள்ளார்.. தொடர்ந்து, அன்பாக அழகாக தம் வாழ்க்கையை தொடர்ந்துகொண்டிருக்கும் போது 1995 யில்  தீடிரெண்டு ஏற்பட்ட மாரடைப்பினால் Janet தன் 33 வருடகால ம்னவாழ்க்கையை நிறைவு செய்துகொண்டு Winston Howes யிடமிருந்தும் இவ்வுலகிலிருந்தும் விடைபெற்றிருக்கிறார்..

33 வருடகாலம் ஒன்றாக தன்னுடன் வாழ்ந்த அன்பு மனைவியின் பிரிவு தாங்காமால் அவரின் ஞாபகார்த்தமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்திருக்கிறது. இதன் விளையாகவே தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில், தன் மனைவி சிறுவயதில் வாழ்ந்த வீட்டுடன் சேர்த்து(படத்தில் கானலாம்) இதயம் வடிவிலான இடத்தை வெற்றிடமாக வைத்து சுற்றி வளைத்து oak மரங்கள் நட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அவர் நட்ட மரங்கள் கிட்டத்தட்ட 6000.. ஆச்சரியமல்லவா!!

இதை இவர் மனைவி இறந்தது முதல்17 வருடகாலம் மரங்களை வளர்த்தும் பராமரித்தும் வந்திருக்கிறார்.. ஆனால் இதைப்பற்றி வெளியுலகத்திற்கு அவர் தெரியப்படுத்தவில்லை! வெளியுலகத்தினரும் அதைப்பற்றி தெரிந்திருக்கவில்லை.. சில தினங்களுக்கு முன் அவ்வழியால் பரசூட்டில் சென்ற ஒருவரின் கண்ணில் இந்த இதய வடிவிலான இயற்கை காட்சி கண்ணில் படவே மிக ஆச்சர்ய்மடைந்த அவர் அவற்றை புகைப்படம் எடுத்து வெளியுலகத்தினருக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.. அதன் பிறகே Winston Howes பற்றிய செய்திகள் வெளிவந்து சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது,,
இது பற்றி அவர் கூறியிருப்பது..

"Once it was completed we put seat in the field, overlooking the hill near where she used to live. I sometimes go down there, just to sit and think about things. It is a lovely and lasting tribute to her which will be here for years."

அதன் புகைப்படங்கள்..





இனிவரும் காலங்களில் இதுவுமொரு இயற்கை காதல் சின்னமாக பேசப்படலாம்..  
இதைப்பார்த்ததும் உடனே நம் முண்டாசு கவிஞரும் ஞாபகத்திற்கு வந்தார்..

தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ்
சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம்
மிக உழன்று பிறர் வாட பல செயல்கள்
செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இறையென பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!!!

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவும் படமும் அழகு... பகிர்வுக்கு நன்றி !

Anonymous said...

தாஜ்மெஹல் காதல் சின்னமா ! அதன் வரலாறு தெரியும் வரை நானும் அதைத் தான் நினைத்திருந்தேன் .. இப்போ இல்லை .. !!! இந்த மனிதரின் செயல் உண்மையான காதல் சின்னமே .. இப்படி மரம் வளர்த்து காதல் வளர்த்தால் . காதலும் வாழும் இயற்கையும் வாழும் ... !!!

ஆத்மா said...

அழகான படங்கள் ஆழமான காதல்....பகிர்வுக்கு நன்றி நண்பா...
நோன்பு எல்லாம் ஆரம்பமாகிட்டே இன்று நோன்புடந்தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன்

Seeni said...

azhakaana thokuppu!

அம்பாளடியாள் said...

வியப்பான தகவல் மகிழ்ச்சியை மட்டும் அல்ல ஓர் உண்மைக் காதலின் உயர்வான காதல் சின்னத்தையும் கண்டத்தில் பேரானந்தமும் உண்டானது சகோ அருமையான இத்தகவலை தேடிப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் .

”தளிர் சுரேஷ்” said...

புதிய தகவல்! அதுவும் காதல்மனைவிக்கு கட்டிய இதயத் தகவல்! அருமை! நன்றி!

கோவி said...

அருமை அருமை நண்பரே..

'பரிவை' சே.குமார் said...

அருமையான தகவல்... காதல் சின்ன அருமை.

Doha Talkies said...

விவசாயி விவசாயத்தின் மூலமாகவே காதலை வெளிபடுத்திவிட்டார் .

unknown said...

வணக்கம்
புதிய ஆனால் இனிய தகவல்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

unknown said...

வணக்கம்
உலக சினிமா பற்றிய தெளிவான பார்வை
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...