ஓர் நாள் இரவு
ஓர் பயணம்
ஓராயிரம் மைல்கள்
ஓடியிருக்கலாம்...!
அது ஐரோப்பா என
அடையாளம்
கண்டு கொண்டேன்
நாலாபுறமுமிருந்து வந்த
நாகரீக
வாசனையினால்...!
பல தேசங்கள்
கடந்து
பவனிவரும் போது
மரன ஓலங்கள்
காதில் விழவே
கால் வைத்தேன்
பாரினில்...!
அது ஜேர்மனிய தேசம்
அறிந்து கொண்டேன்
அந்த மரன ஒலங்கள்
யூதர்களின்
ஆனபடியால்...!
மொத்தமாகவும்
சில்லறையாகவும்
வாங்கப்பட்டன
அங்கே
அவர்கள் உயிர்கள்...!
உயிர் கொடுத்தவன்
எங்கோயிருக்க.
இங்கே
உயிர் எடுப்பவன்
எவன்
எனக்கேட்டேன்...!
'நான் தான்'
தூரத்திலிருந்து
ஓர் குரல்.
அது ஹிட்லர்தான்,
அறியத்தந்தது எனக்கு
அவ்வார்த்தையில் வந்த
ஆணவமும்
அகங்காரமும்....!
உயிரெடுக்க
உனக்கென்ன
உரிமையிருக்கு
உரத்துக்கேட்டேன்....!
ஹிட்லரின்
பதிலுக்கு முன்னே
அம்மாவின் குரல்
"ஏழு மணியாச்சு
எழுந்திரு"
ஹிட்லரின் பதில்
இன்னும் ஓர் இரவில்
4 comments:
கடைசி வரியில் ஹிட்லர் என்று வர வேண்டும், ஹிடலர் என்றுள்ளது. கவனிக்க.
மிக அருமையான ஒருக் கவிதை ... தொடருங்கள் சகோ.
கவிதை அருமை. அன்று ஹிட்லர். இன்று மஹிந்தன்.
நன்றி சகோ இக்பால் செல்வன்!
நல்ல வரிகள்... (கனவிலும்...?!)
Post a Comment