காலம் கடந்த கனவுகள்!


எல்லோரிடமும்
எல்லாமும்
இருக்கிறது
நல்ல மனசைத்தவிர!

ஓரே வழியாகவே
போய் வருகிறது
இயந்திர வாழ்க்கை
கடிகாரத்தை போலவே!

கணனிகளுக்குள்ளும்
கைத்தொலைபேசிகளுக்குள்ளும்
சுருங்கிவிட்டது
விருந்தோம்பல்களும்
நல விசாரிப்புகளும்.!

நினைப்பவை
கிடைப்பதுமில்லை
கிடைப்பவை
நினைப்பவையாக
இருப்பதுமில்லை
இதுதான் வாழ்கை
விளையாட்டு!


வானம் போல்
வாழ்ந்திட நினைத்தேன்
இன்னும் கீழேதான்
கிடக்கிறேன்
பூமியாய்.!

தேடிக்கொண்டிருக்கிறேன்
இன்னும்
வாத்தியாரிடம் சொன்ன
எதிர்கால
இலட்சியங்களை.!



4 comments:

Unknown said...



ஒவ்வொரு வரியும் அருமை! உன்னத சிந்தனை! உண்மை!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... நினைக்கும் இலட்சியங்கள் விரைவில் பெற வாழ்த்துக்கள்...

நன்றி...
tm3

ஆத்மா said...

மிக அருமை
வாத்தியிடம் நான் சொன்ன இலட்சியங்களை மீண்டும் நினைவு படுத்திப் பார்க்க வைத்துவிட்டீர்கள் நண்பா

பாலா said...

நாம் வாழ்க்கை சுயநல வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விட்டது என்பதை அருமையாக கூறிவிட்டீர்கள். நன்றி

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...