தொடர்பதிவு.. அண்மைக்காலமாக அவர் அழைத்தார் இவர் அழைத்தார் என சொல்லி ஒவ்வொருவரும் "எனக்கு பிடித்த பத்து படங்கள்" என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நம்மல யாருங்க தொடர் பதிவுக்கெல்லாம் அழைக்கப்போறாங்க அதுதான் நாங்களாகவே தொடர்பதிவுன்னு பில்டப் கொடுத்து வந்துட்டமில்லே....
விருந்துக்கு கூப்பிடாட்டியும் பந்திக்கு முந்திருவமில்லே..
அம்மா காலம் தொடக்கம் அக்கா காலம் வரை (அதுதாங்க ஜெயலலிதா காலம் முதல் திரிஷா காலம் வரை கொஞ்சம் வித்தியாசத்திற்காக இப்படி சொன்னேனுங்க... எவ்வளவு நாளைக்குதான் எம்.ஜி.ஆர் காலம் முதல் சிம்பு காலம் என்று பறைசாற்றுவது நம்மலெல்லாம் குஷிப்படுத்திய ஹீரோயின்களையும் மறக்க கூடாதில்லே நம்ம வல்லுவர் தாத்தாவே சொன்னாப்லே..
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதை அன்றே மறப்பது நன்று"
இந்தக்காலத்துல ஹீரோயின் இல்லாம படம் எடுத்தா எந்த பயலாவது தியேட்டர் பக்கம் கூட தலை வெச்சு படுப்பானா... நீங்களே சொல்லுங்க) வெளிவந்த எத்தனையோ அருமையான தமிழ் திரைப்படங்களில் பத்தை தெரிவு செய்வதென்பது மிகவும் கடினமே....
"எல்லாம் சரி புடிச்ச பத்து படத்த இன்னும் சொல்லலியே அதை முதல்ல சொல்லு....." யாரோ சொல்றது கேட்குது இதோ வந்துட்டேனுங்க... சொல்ல வந்ததே மறந்து போச்சே... ஆஹா என்ன பன்றது.... சரி சமாளிக்க வேண்டியதுதான்... "வட போச்சே"
அரங்கேற்ற் வேளை....
பிரபு, ரேவதி, v.k.ராமசாமி போன்றோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை இயக்குனர் பாசில் இயக்கியிருந்தார். படத்தின் நாயகன் பிரபு என்றாலும் என்னைப்பொருத்தவரை படத்தின் நாயகர்கள் v.k. ராமசாமியும் இயக்குனர் பாசிலும்தான் v.k.r படம் முழுக்க வருகிறார் தன் நகைச்சுவை பேச்சோடும் இயல்பான நடிப்போடும் இவரை மையமாக வைத்தே கதை பின்னபற்றிருக்கிறது. இது போன்ற நடிகர்கள் இனிமேலும் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பார்களா...? சந்தேகமே அவவளவு அற்புதமான நடிப்பு அவரிடம். அவர் "ஐய்யய்யோ" எனும் வசனத்தை உச்சரிக்கும் விதமே தனிச்சிறப்பு.
மற்றொருவர் இயக்குனர் பாசில் மலையாள இயக்குனர் என்ற போதிலும் பல அருமையான திரைப்படங்களை தமிழ் திரைக்கு கொடுத்தவர். இப்படம் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை நகைச்சுவை மழையாய் பொழிந்திருப்பார். ஆரம்பத்தில் ரேவதி-பிரபு மோதல்கள்,பூட்டில்லாத கழிவரை காட்சிகள், ராமசாமிக்கு தேங்காயினால் அடிபடும் காட்சியாகட்டும், தவறுதலான தொலைபேசி அழைப்புகளாட்டும், இறுதினேர ஆள்மாறாட்ட க்ளைமாக்ஸ் காட்சிகளாட்டும் அத்தனையும் கண்மூடாமல் பார்க்க வைக்கும் அழகான காட்சிகள். இப்படத்தில் வரும் வில்லன், அவ்வப்போது வந்து இறுதியில் சண்டை போட ஆள்கூட்டி வரும் ஜனகராஜ் உட்பட எல்லோரும் மிக அருமையாக நடித்திருந்தனர்.
இப்போதெல்லாம் இவவாரான முழுநீள நகைச்சுவை கலந்த படங்களின் வருகை குறைந்திருப்பது வருந்தக்கூடியதே. நண்பர் சக பதிவர் ஹாய் அரும்பாவூர் கூட தனது "சிரிக்க மறந்த திரை உலகம்" என்ற பதிவுகளில் இதைப்பற்றி ஆதங்கப்பட்டிருந்தார் அவரின் கருத்திற்கு நானும் உடன்படுகிறேன்.
"அரங்கேற்றவேளை விழிகளின் விருந்து..."
இம்சை அரசன் 23ம் புலிகேசி.

சிம்புதேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு இரட்டை வேடத்தில். நாட்டை கெடுக்கும் மன்னனாகவும், நாட்டை காப்பாற்ற புறப்படும் புரட்சி வீரனாகவும் ஒரு கலக்கு கலக்கியிருந்தார். ஆங்கிலேயர் காலத்தை மையமாககொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அச்சு அசலாக அக்காலத்தையே பிரதிபலித்தது காட்சியமைப்பு, கலை இயக்கம், ஒளிப்பதிவினூடாக... புலிகேசி மன்னனாக தனது வழமையான நகைச்சுவை பானியினாலும்.. புரட்சி வீரனாக ஒரு நாயக அந்தஸ்துடனும் கம்பீரத்துடனும் இதற்கு முன்னர் பாத்திராத பாத்திரத்திலும் இருவேருபட்ட நடிப்பாலும் தனனால் நகைச்சுவை மற்றுமல்லாது வேண்டிய கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்பதையும் நிருபித்திருந்தார் வடிவேலு. இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் மிக மிக அருமை அவ்வளவு அழகாக செதுக்கிய்ருக்கிறார் இயக்குனர்.
மனோரமா,நாசர்,இளவரசு,மோனிகா,தேஜாஸ்ரீ ம்ற்றும் அனைத்து துனை நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர் அந்த வெள்ளைக்கார நடிகர்கள் உட்பட. மொத்தத்தில் இது ஒரு நகைச்சுவைத்திருவிழா...
"இம்சை அரசன் சிரிக்க வைப்பவன்"
காதலுக்கு மரியாதை.....

விஜய்யின் தற்கால மசாலா திரைபபடங்களோடு உடன்பாடில்லை என்றாலும் அவரின் ஆரம்ப கால திரைப்படங்களில் சில குறைசொல்ல முடியாதவை. அவ்வாறு வெளிவந்தவற்றில் ஒன்றுதான் இயக்குனர் பாசிலின் இயக்கத்தில் உருவான "காதலுக்கு மரியாதை" ஷாலினிக்கு இது முதற்படம் கதாநாயகியாக மிக அருமையாகவும் இயல்பாகவும் நடித்திருப்பார்... விஜய்யின் நடிப்பும் இயல்பாகவே இருக்கும் இப்போதைய வெட்டி பந்தா போலில்லாமல்.
இத்திரைபபடத்தின் வெற்றிக்கு பின்னால் உழைத்தவர்களில் இயக்குனர் பாசில் முதன்மையானவர் அவவளவு அருமையான இயக்கம்.. உயிருக்குயிராய் காதலித்த காதலர்கள் தனது பெற்றோர் தங்களால் மனவேதனை படக்கூடாதென்பதற்காகவும், பெற்றோர் மீது கொண்ட மரியாதைக்காகவும் காதல் மீதுள்ள மரியாதைக்காகவும். காதலர்கள் பிரிந்து செல்வதாய் இந்தக்கதையை அழகாய் சொல்லியிருப்பார். மற்றவர் இசையமைப்பாளர் இளையராஜா அனைத்து பாடல்களுமே ஒன்றைவிட ஒன்று மிஞ்சுமளவிற்கு சூப்பர் ஹிட். பாடலாசிரியர் பழ்னிபாரதியும் மறக்கமுடியாதவர் எல்லா பாடலிலுமே அருமையான பாடல் வரிகள். பழனிபாரதி இப்போ எங்கே போனார்....?
இப்படத்தின் இறுதிக்காட்சியில் ஷாலினியின் மாலையை கொடுப்பதற்காக விஜய்யும் அவரது பெற்றோரும் ஷாலினி வீட்டுக்கு செல்லும் காட்சியில். அங்கே ஷாலினியின் அம்மா ஷாலினிக்கு திருமனம் நிச்சயித்திருக்கிரோம் அவளை வாழ்த்திற்று போங்க என்று சொல்வதும் விஜய்யின் அம்மா ஷாலினியை எங்க வீட்டுக்கு அனுப்பிவைங்க நாங்க நல்லா பாத்துக்கிறோம் என்று சொல்வதும் அதற்கு ஷாலினியின் அம்மா யார் வேனாம்னா...அவளை உங்க்ளோடு கூட்டிட்டு போங்க என்று சொல்வதும்.. ஓர் அழகிய கவிதை..... அவ்வளவு அருமையான் காட்சி அது.. யாரும் எதிர்பார்த்திராதது. இப்போதை காதல் என்ற பெயரில் காமத்தை காட்டும் படங்களோடு ஒப்பிடுகையில் இப்படம் எந்தவித விரசமோ ஆபாசமோ இல்லாத பார்க்ககூடிய படம்.
"காதலுக்கு மரியாதை காதல் பரிசு"
அன்பே சிவம்....
கமல்ஹாசனின் எத்தனையோ படங்கள் பார்த்திருந்தாலும் மனதோடு ஒட்டிக்கொண்ட படம் என்றால் அது அன்பே சிவம்தான். அதன் திரைக்கதை நகர்ந்து செல்லும் விதமும் படம் முழுவதும் தூவப்பட்டிருக்கும் நகைச்சுவையும் ரசிக்க வைக்கிறது.கமலின் வயது முதிர்ந்த தோற்றமும்,அனுபவ முதிர்ச்சியும்,நகைச்சுவைத்தன்மையும்,லேசான புன்னையும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். மாதவனும் மிகச்சிறப்பாகவே நடித்திருப்பார். கமல் மாதவனுக்கிடையிலான உரையாடல்கள் நகைச்சுவை கலந்த இனிப்புகள். மழை வெள்ளத்தின் போதான காட்சிக்ள், ஹோட்டல் அறையில் இருவரும் தங்கும் காட்சிகள், பஸ் பயனக்காட்சிகள், வீதி நாடக காட்சிகள் என மனதை விட்டு நீங்காத காட்சிகள் எனலாம். கமலின் கதைக்கு திரைப்படத்தை இயக்கியவர் தற்போதைய மசாலா படங்களின் நாயகன் சுந்தர் சி என்பது கொஞ்சம் ஆச்சரியமான உன்மை.
"அன்பே சிவம் அன்பு கொண்ட இதயம்"
வெற்றி கொடி கட்டு...

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளிவரும் ஆபாசமில்லாத, ஹீரோயிசமில்லாத, மெஜிக் இல்லாத இயல்பான திரைப்படங்களில் இயக்குனர் சேரனின் திரைப்படங்களும் குறிப்பிடத்தக்கவை. வெளிநாட்டு உழைப்பை நம்பி ஏமாந்து பணத்தையும் காலதையும் வீனாக்காமல், உள்நாட்டிலேயே முயற்சியோடும்,உறுதியோடும் உழைத்தால் முன்னேற முடியும் என்ற கதையமைப்பில் உருவான படமே இந்த "வெற்றி கொடி கட்டு"
முரளி,பார்த்திபன்,மீனா,மாளவிகா,வடிவேலு போன்றவர்கள் இதில் நடித்திருந்தனர். சேரன் இயக்கிய ஏனைய பட்ங்களான பாரதிகண்னம்மா, பொற்காலம்,தேசிய கீதம், பாண்டவர் பூமி,ஒட்டோ கிராப்,தவமாய் தவமிருந்து,மாயக்கண்னாடி ஆகியவையும் பார்க்க கூடிய திரைப்படங்களே.
"வெற்றி கொடி கட்டு முன்னேறு"
அன்னியன்....

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான இப்படம். வழக்கமான மசாலா ஹீரோயிச படமாக வகைப்படுத்தப்பட்டாலும். இதில் வரும் "அம்பி (விக்ரம்)" என்ற பாத்திரம் எதிர்கொள்ளும் அதன் மூலம் சுட்டிக்காட்டப்படும் விடயங்களான சட்டங்களை கடைபிடிக்காமை, தனி மனித ஒழுக்கமின்மை, அரசாங்க அதிகாரிகளின் கடமை மீறல், உயிர்களை மதிக்காமை, மனிதாபிமானமின்மை, பொது மக்களிடமிருந்து சுரண்டல்கள், அரசவரி செலுத்தாமை, மன உளைச்சல்கள் இவைகள் யாவும் நாம் அன்றாட வாழ்வில் சந்திப்பவை கடந்து செல்பவையே...
இது ஒவ்வோர் தனி மனிதனையும் சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கிறது.. அவவாறு தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒருவரின் உள் மனக்கிடக்கைகள், ஆதங்கங்கள் வெறியாகி multiple personality எனும் வேறொருவராக மாறி சம்பந்தபட்டவர்க்ளை பலிவாங்கும் கதையை பிரம்மாண்டம்,கிராபிக்ஸ் கலந்து கொடுத்திருக்கிறார் ஷங்கர். விக்ரம் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோர் மனதையும் கவர்ந்திருந்தார். இதன் வசனகர்த்தா அமரர் சுஜாதா அவர்களின் வசனங்களும் மறக்கமுடியாதவை.
"அன்னியன் தன்டனை"
ரத்தக்கண்ணீர்
ஒரு சில படங்கள் தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்களின் மனதில் இருந்து நீங்குவதில்லை. எப்போதும் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் “ரத்தக்கண்ணீர்” என்ற காலத்தால் அழியாத காவியம்.
ஒரு சில படங்களை நாம் மிகத்தாமதாக பார்ப்போம் பார்த்து விட்டு அட! இத்தனை நாள் இவ்வளவு அருமையான படத்தை பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று நம்மை நாமே நொந்து கொள்வோம். எனக்கு அது போல பல படங்கள் ஆகியுள்ளது அவற்றைப்போல படங்களில் ஒன்று தான் MR.ராதா அவர்களின் அற்புதமான நடிப்பில் வெளிவந்த “ரத்தக்கண்ணீர்”. இந்தப்படத்தின் வசனங்களும் காட்சியமைப்புமே இந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணங்களாகும்.
இப்ப எல்லாம் படங்களில் அரசியலை மூட நம்பிக்கையை கிண்டலடிக்கும் காட்சிகள் நிறைய வருகிறது ஆனால் இவற்றிக்கெல்லாம் தாய் என்றால் நான் கண்டிப்பாக இந்தப்படத்தின் வசனங்களையும் அதை லாவகமாக கையாண்ட MR.ராதா அவர்களையும் தான் கூறுவேன். அடேங்கப்பா! என்னமா பேசி கலக்கி இருக்கிறார். ஒவ்வொரு வசனத்தையும் கேட்கும் போது கொஞ்சம் கூட பழைய படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. அந்த அளவிற்கு வசனங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறார். எப்படி இதெல்லாம் யோசிக்க முடிந்தது! எப்படி 50 வருடம் கழித்துப் படம் பார்த்தாலும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி வசனங்களை அமைக்க முடிந்தது! என்று யோசித்தால் எனக்கு தலை சுற்றுகிறது. இதை கொஞ்சம் கூட மிகைப்படுத்திக் கூறவில்லை.
நன்றி http://www.giriblog.com/
சர்வர் சுந்தரம்...
நடிகர் நாகேஷ் அவர்களுக்காகவே இத்திரைப்படம் என்னைக்கவர்ந்தது ஒரு நாயகனாகவே நடித்திருப்பார் இதில் அவர். நகைச்சுவை காட்சிகளாகட்டும் ஏனைய காட்சிகளாட்டும் மிகச்சிறப்பாக செய்திருப்பார். அம்மாவை பார்த்து நான் அழகாகவா இருக்குறேன் என கேட்கும் காட்சி என்னை மிகவும் பாதித்த்து... என் கண்களையும் கலங்க செய்தது... அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் காட்சியில் நடனம் கூட அருமை...
சர்வர் சுந்தரம் வாங்க சாப்பிடலாம்...
(சர்வர் சுந்தரம் பிடித்த படம் என நான் சொல்லும் போத... நான் வயசானவன் என
நினைக்காதீங்கோ... நான் இன்னும் சின்னப்பையன் தானுங்கோ... ரசிக்கத்தெரிந்தவனுக்கு புதிய படமென்ன பழைய படமென்ன..)
அங்காடித்தெரு....

யதார்த்தமில்லாத வன்முறை,ஆபாச காட்சிக்ளை காட்டி அடிமட்ட ரசிகர்க்ளை உசுப்பேத்தி வியாபார லாபம் தேடும் சின்னத்தனமான இயக்குனர்களுக்கு மத்தியில் நாம் அன்றாடம் சந்திக்கும் கடந்து செல்லும் மனிதர்களைப்பற்றி அவர்களின் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் பற்றி பேசியது. வாழ்கையில் ஜெயித்த ஒரு தனி மனிதனைப்பற்றி வந்த படங்களைப்பார்த்து பார்த்து சலித்துப்போன நிலையில் வாழ்க்கையோடு போராடும் மக்களை மையமாக வைத்து எடுத்த படம் என்பதால் என்னை மிகவும் கவர்ந்தது... இத்திரைப்படம் பற்றி அதிகமான கருத்துக்கள் வந்து கொண்டிருப்பதால் பெரிதாக சொல்லவிலலை
"அங்காடித்தெரு வாழ்க்கை"
பசங்க.....

இத்திரைப்படத்தை பற்றி பெரிசாக நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை...
"அம்மா குஞ்சுமனி வெளியே வந்துட்டும்மா...
என் செல்லம் உள்ள் எடுத்து போட்டுக்கடா
போட்டுட்டேன்மா...."
"பசங்க பொல்லாதவங்க"
என் ரசனையை சொல்லிபுட்டேன்... இப்ப உங்க ரசனையை வெளிக்காட்ட ஏதாவது திட்டிட்டு போங்க.. ஒரு ஓட்டு குத்திட்டு... ஓட்டு கேட்டு கேட்டே அரசியல்வாதி ஆயிடுவேன் போல தெரியுதே... கடவுளே காப்பாத்து..