நான்..நீ...!


மழை தேடும் பூமி நான்..
மேகம் சுமக்கும் வானம் நீ..
இரவோடு வரும் இருள் நான்..
என்னைத்தழுவ வரும் நிலவு நீ..
அயர்ந்து தூங்கும் அதிகாலை நான்..
அடித்து எழுப்பும் விடியல் நீ...
எழும்ப மறுக்கும் சோம்பல் நான்..
உற்சாகம் தரும் தேனீர் நீ..
காட்சிகள் தொலைத்த கனவு நான்..
காட்சிகள் தரும் கண்கள் நீ..
எழுத நினைக்கும் கவிதை நான்..
வர மறுக்கும் வார்த்தை நீ...
அடம்பிடிக்கும் குழந்தை நான்..
ஆசைகாட்டும் திருவிழா நீ..
தினம் வரும் பகல் நான்..
எனக்குள் வர முடியா இரவு நீ..
வாசிகசாலை புத்தகங்கள் நான்..
வாசித்துமட்டும் செல்லும் வாசகி நீ..
எதுவரை நான்....
அதுவரை நீ...!

12 comments:

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ரியாஸ்..

Chitra said...

எழுத நினைக்கும் கவிதை நான்..
வர மறுக்கும் வார்த்தை நீ...

....very nice... :-)

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

ஜெயந்த் கிருஷ்ணா said...

nallaayiruku nanpaa..

elamthenral said...

//எழுத நினைக்கும் கவிதை நான்..
வர மறுக்கும் வார்த்தை நீ...//
excellent word riyas...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வித்தியாசமாய் இருக்கீங்க ரியாஸ் நீங்க(ளும் அவளும்).



//வாசிகசாலை புத்தகங்கள் நான்..//

'வாசிகசாலை'-யை 'வாசகசாலை' என்று மாற்றினால் மிக அருமையாயிருக்குமே!

வினோ said...

/ எதுவரை நான்....
அதுவரை நீ...! /

அருமை நண்பரே....

ஸாதிகா said...

வித்தியாசமான வார்த்தைக்கோவை.பாராட்டுகளை பிடியுங்கள் ரியாஸ்,

erodethangadurai said...

கவிதை வரிகள் அருமை

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

அன்புடன் மலிக்கா said...

எழுத நினைக்கும் கவிதை நான்..
வர மறுக்கும் வார்த்தை நீ//

அருமை ரியாஸ் வித்தியாச ரசனை..

செல்வா said...

அட அட .., என்னமா பீல் பண்ணி எழுதிருக்கீங்க ..
நல்லா இருக்கு ..

அரபுத்தமிழன் said...

நீங்கள் எழுதிய கவிதைகளில் இதுதான் பிடித்தது

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...