வாழ்க்கை பாடம் - ஆர்தர் ஆசே

 Arthur Ashe 1960 - 1970 களில் உலகப்புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர். இவர் 1943 யில் அமெரிக்காவில் பிறந்தார். இவர் டென்னிஸ் போட்டிகளில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதலாவது ஆபிரிக்க அமெரிக்க இனத்தவர் இவரே.. இவருடைய வாழ்நாளில் இவர் ஒர் சிறந்ததொரு விளையாட்டு வீரராக மாத்திரமின்றி நல்லதொரு மனிதராகவுகம் விளங்கினார்..

உலகப்புகழ்பெற்ற இவரின் வாழ்க்கையின் இறுதிக்காலம் துயரமானதாக ஆனது காரணம் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திரசிகிச்சையின் போது இரத்தம் தேவைப்படவே. தவறுதலாக எயிட்ஸ் நோயாளி ஒருவரின் இரத்தம் ஏற்றப்பட்டது அதன் காரணமாக அந்த கொடிய எயிட்ஸ் இவருக்கும் தொற்றிக்கொண்டது. 10 வருடங்கள் இதனால் அவதிப்பட்டு தனது 50 வது வயதில் 1993 யில் உயிர்நீத்தார்..

இவருடைய இறுதிக்கால கட்டத்தில் உலகெங்கிலுமுள்ள இவருடைய ரசிகர்கள் இவருக்கு அனுதாப கடிதங்களை அனுப்பிவைத்தனர்.. அதில் ஒரு கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.. கடவுள் ஏன் உங்களை  தெரிவு செய்தான் இவ்வாறானதொரு துன்பத்துக்கு. அதற்கு அவர் இவ்வாறு பதில் எழுதியிருந்தாராம்..

உலகெங்கிலும் 50 மில்லியன் சிறுவர்கள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள்.
அவர்களில் 50 மில்லியன் பேர் டென்னிஸ் விளையாட கற்றுக்கொள்கிறார்கள்.
அவர்களில் 5 இலட்சம் பேர் டென்னிசை professional ஆக கற்றுக்கொள்கிறார்கள்
அவர்களில் 50,000 பேர் விளையாட்டில் தேர்வு பெறுகிறார்கள்
அவர்களில் 5000 பேர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்குபெறும் தகுதியை பெறுகிறார்கள்.
அவர்களில் 50 பேர் விம்பிள்டன் போட்டிகளில் பங்குபெறுகிறார்கள்.
அவர்களில் 4 பேர் அரையிறுதிப்போட்டிக்கும் 2 பேர் இறுதிப்போட்டிக்கும் தெரிவுசெய்யப்பட்டு இறுதியில் நான் சம்பியன் ஆகிறேன்

அப்போது நான் ஒரு போதும் கடவுளிடம் கேட்பதில்லை ஏன் என்னை தெரிவு செய்தாய் என்று இன்று ஒரு துன்பத்தால் பாதிக்கப்படும் போது மட்டும் என்னால் எப்படி கேட்க முடியும் என்னை ஏன் இதற்கு தெரிவு செய்தாய் என்று.. இப்படி பதில் எழுதியிருந்தாராம்..

                                             ஜனாதிபதி ரேகனை சந்தித்த போது

சந்தோஷங்கள் உங்களை மகிழ்ச்சியாக்கலாம்
தோல்விகள் உங்களை மனிதனாக்கலாம்..

ரியாஸ்,

12 comments:

Chitra said...

He was a legend.

வின்சென்ட். said...

"சந்தோஷங்கள் உங்களை மகிழ்ச்சியாக்கலாம்
தோல்விகள் உங்களை மனிதனாக்கலாம்."

நல்ல பதிவு.

தமிழ் உதயம் said...

பெருமைப்படத்தக்க மனிதருக்கான போற்றதலுக்குரிய பதிவு. இப்போது தான் இவரை பற்றி தெரிந்து கொண்டேன்.

எஸ்.கே said...

அருமையான பதிவு!

ஆமினா said...

அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி சகோ

ஹேமா said...

பதிவின் முத்தாய்ப்பு வரிகள் அருமை !

செல்வா said...

//சந்தோஷங்கள் உங்களை மகிழ்ச்சியாக்கலாம்
தோல்விகள் உங்களை மனிதனாக்கலாம்..//

கலக்கலான பதிவு ..!!

வினோ said...

/ சந்தோஷங்கள் உங்களை மகிழ்ச்சியாக்கலாம்
தோல்விகள் உங்களை மனிதனாக்கலாம்.. /

உண்மைதான்...

ஹுஸைனம்மா said...

//அப்போது நான் ஒரு போதும் கடவுளிடம் கேட்பதில்லை ஏன் என்னை தெரிவு செய்தாய் என்று இன்று ஒரு துன்பத்தால் பாதிக்கப்படும் போது மட்டும் என்னால் எப்படி கேட்க முடியும் என்னை ஏன் இதற்கு தெரிவு செய்தாய் என்று..//

அழகான பதில். அருமையான பதிவு.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் ரியாஸ்,

-------
அப்போது நான் ஒரு போதும் கடவுளிடம் கேட்பதில்லை ஏன் என்னை தெரிவு செய்தாய் என்று இன்று ஒரு துன்பத்தால் பாதிக்கப்படும் போது மட்டும் என்னால் எப்படி கேட்க முடியும் என்னை ஏன் இதற்கு தெரிவு செய்தாய் என்று.. இப்படி பதில் எழுதியிருந்தாராம்..
-------

அல்ஹம்துலில்லாஹ்...நல்லதொரு பதிவு...

//அவர்களில் 5 மில்லியன் பேர் டென்னிஸ் விளையாட கற்றுக்கொள்கிறார்கள்// ----- இப்படி இருந்திருக்கலாமோ?. ஒருமுறை சரி பாருங்கள்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத்

Anonymous said...

//அப்போது நான் ஒரு போதும் கடவுளிடம் கேட்பதில்லை ஏன் என்னை தெரிவு செய்தாய் என்று இன்று ஒரு துன்பத்தால் பாதிக்கப்படும் போது மட்டும் என்னால் எப்படி கேட்க முடியும் என்னை ஏன் இதற்கு தெரிவு செய்தாய் என்று//
Amazing response!

ஆஷின் மனைவின் பெயர் Jeanne Moutoussamy-Ashe . முதன் முறையாக இதைப் பார்த்த போது இவர் இந்தியா வம்சாவளியினரோ என்ற
சந்தேகம் வந்தது. இணையம் இதை உறுதிப்படுத்தியது. சில தலைமுறைகளுக்கு முன் ஐரோப்பியர்களால்
மத்திய அமெரிக்க நாடு ஒன்றிற்கு குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களில் ஒன்று இவருடையது.
பார்க்கத் தென் இந்தியரைப் போல இருப்பார். ஆஷிர்க்கு இவரைக் கண்டதும் காதலாம். முதன் முறையாக
ஆஷ் இவரைப் பார்த்த போது வலுவில் போய் ஏதேதோ பேசியிருக்கிறார். இவர் நல்ல நிழல் பட வல்லுனரும் கூட.

ஆர்தர் மரணப் படுக்கையில் மருத்துவமனையில் இருந்த போது தினமும் மகள் பள்ளிக்குப் போகும் போது காலை 7 மணிக்கு தொலைபேசியில் பேசுவாராம். அவரின் மறைவிற்குப் பிறகு காலையில் அந்நேரத்தில் தொலைபேசி மணி அடித்தால் அவர் நினவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்

நிலவு said...

ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...