வந்தாச்சு வந்தாச்சு...!

ஊருக்குப்போய் வந்தபிறகு இப்பதான் பதிவுலகம் பக்கம் வர முடிந்தது.. எல்லோரும் நலம்தானே நலமாகத்தான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. ஒரு மாதம் வராமாவிட்டா ரொம்ப பேரு மறந்துட்டாங்க போல நானொன்றும் புதுசு இல்லிங்கோ.. "யாரது அந்த மொக்கையா கவிதைங்கிற பேர்ல் இம்ஸை பண்ணுவியே நீயா" அப்பிடின்னு யாரோ சொல்றது கேட்குதுங்கோ.. ஆமாங்கோ நானேதான்.

ஊர் நிலைமை.

என்னத்த சொல்றது ஊருக்குப்போய் நான்கைந்து நாட்கள்தான் வெயிலையே பார்த்தேன் மழையோ மழை. அப்படியொரு மழை. எங்கள் பகுதிக்கு வெள்ளம் அபாயம் இல்லை என்பது ஆறுதலாக இருந்தாலும்.இம்மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டது கிழக்கிலங்கைதான். வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்ததால் வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் ஆயிரக்கணக்கில் முகாம்களில் தஞ்சமடைந்தமை பரிதாபமே. இன்னும் மழை விடாமல் பெய்வதாகவும் அறிய கிடைக்கிறது.

பாடசாலை காலத்தில் கிறுக்கிய சில வரிகள் இப்போது பொருந்தும் என நினைக்கிறேன்..

தூரல் போடும் வானமே
உன் மழைச்சிரிப்பு
உதவட்டும்
சிரிப்பதற்கு மட்டும்.
உன் சிரிப்பு
உலகில்
அளவு கடக்கும் போது
மனிதர்கள் அழுவது
புரிகிறதா..
நாங்கள் சிரிப்பதற்கு
மட்டுமே
வேண்டுகிறோம்
உன் சிரிப்பை
அழுவதற்கல்ல...!


நாட்டு நிலைமை..

நாட்டைப்பற்றி சொல்லப்போனால் முதலில் சொல்லவேண்டும் இலங்கை நெடுஞ்சாலைகள் பற்றித்தான். அவ்வளவு மோசமாக இருக்கிறது இலங்கையின் பாதைகள். பயணம் போனால் பாதையிலேயே அதிக நேரத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இலங்கையை இப்போது ஏழைநாடு என்று சொல்லமுடியாதளவிற்கு பாதைகள் வாகனங்கள் அதிகரித்திருக்கிறது.. வாகன்ங்களின் அதிகரிப்பிற்கேற்ப பாதைகள் விஸ்தரிக்கப்படுவதோ புதிய பாதைகள் உருவாக்கப்படாமை போன்றவை பெரும் குறையே.



இலங்கையின் நகர்புறங்களை காட்டிலும் கிராம புறங்களின் வளர்ச்சி அதிகமாக கானப்படுகிறது. விவசாயத்துறை அதிக வளர்ச்சி கண்டு வருவதே இதற்கு காரணமாகலாம்.. இயற்கை அழிவுகள் மட்டும் பாதிக்காவிடின் இம்முறை கிராமபுறங்களில் அதிகளவு நெல் மற்றும் தாணிய விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் சிறு வெங்காய பயிர் செய்கை நல்ல முறையில் நடைபெற்று மக்கள் அதன் மூலம் நண்மையடைவதை கானக்கூடியதாகயிருந்தது. அதுமட்டுமில்லாமல் இலங்கையின் எல்லா பகுதிகளிலிருந்தும் யாழ்ப்பாணத்துக்கு பஸ் போக்குவரத்து நடைபெறுகின்றமை மகிழ்ச்சியான விடயமாகயிருந்தது..


அப்புறமா...

யாருக்கெல்லாம் கிரிக்கெட் பிடிக்கும் கையத்தூக்குங்க பார்க்கலாம்.. நம்மளுக்கு அதுலதான் பைத்தியமாச்சே.. உலககிண்ணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.. அது சம்பந்தமான பதிவுகளை பின்னாட்களில் போடலாம் என உத்தேசித்திருக்கிறேன்.. இம்முறை நம் ஆசிய மைதாணங்களில் போட்டிகள் நடைபெறுவதால் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என நினைக்கிறேன்..

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

8 comments:

தூயவனின் அடிமை said...

கவிதை அருமை, ஊர் வலம் பற்றி எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

கவிதை

ம.தி.சுதா said...

நம்ம ஊரும் வந்திங்களா..???

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

ஆமினா said...

ஊரை பற்றிய நினைவலைகள் அருமை

Asiya Omar said...

ரியாஸ் பத்திரமாய் வந்து சேர்ந்தமைக்கு மகிழ்ச்சி.ஊர் செய்தி பகிர்வுக்கு நன்றி.மழை கவிதை அருமை.ஆனால் வெள்ளச்செய்தி கொடுமை.

ஸாதிகா said...

கூடவே ஊரை நாண்கு படம் எடுத்து போட்டு இருக்கலாம்.பகிர்வு அருமை.

அந்நியன் 2 said...

நான் புது வரவு.

உங்கள் தளத்தில் கருத்துரைகளை இனி காணலாம்.

ஹேமா said...

வந்தாச்சா ரியாஸ்.சுகம்தானே.ஏன்தான் இயற்கைக்கூட இப்பிடிச் செய்யுதோ.மனசில இருக்கிறதெல்லாம் எழுத்தில தாங்க !

Jaleela Kamal said...

வாங்க வாங்க வந்தாச்சா

ஸாதிகா அக்கா சொன்னது போல் ஊர் படஙக்ள் எல்லாம் போட்டு இருக்கலாம்.

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2