வாங்க தேடுவோம் மனிதனை...?

நாற்பது ஆண்டுகளில்,ஐம்பது ஆண்டுகளில் எண்னை வளம் இல்லாமல் போகலாம்,குடி நீர் இல்லாமல் போகலாம்,உணவு பற்றாக்குறை ஏற்படலாம்,காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிக்கலாம் என சிந்திப்போர் கவலைப்படுவோர் எத்தனையோ பேர் உண்டு இப்பூமியில். என்னையும் சேர்த்துத்தான்.
ஆனாலும் இவை எல்லாவற்றையும் விட மேலாக உலகிலேயே மிக அரிதாக கிடைக்ககூடியதொன்று அதுவும் இன்னும் கொஞ்ச காலத்தில் அவவாரானதொரு வசனம் இருந்ததைக்கூட மக்கள் மறந்திடலாம் அதுதான் "மனிதநேயம்"இதைப்பற்றி நாம் கவலைப்படுகிறோமா... இதை எங்கே பெற்றுக்கொள்ளலாம்.. அதன் விலை என்ன...?

மனிதம் பற்றி பேசவோ.. மனித நேயம் பற்றி எழுதவோ.. அறிவோ அனுபவமோ வயதோ எனக்கில்லை என நினைக்கிறேன். இருந்தாலும் என் மனதில் தோன்றுபவைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

அவரவர் மதங்களும் கலாச்சாரங்களும் அவரவர்களுக்கு முக்கியம்தான்.எந்த மதமானாலும் எந்த கலாச்சாரமானாலும் எந்த இனமானாலும் எந்த நாடானாலும் எந்த நிறமானாலும் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற ஒரு புள்ளியில் இனைகிறோம் அல்லவா... அது வெறும் இனைப்பாகயில்லாமல் மனிதநேயம் என்ற பொதுக்கோட்பாட்டுடன் இனைந்தால் மனிதனுடன் மனிதநேயமும் உயிர் வாழும் அல்லவா...

கொடுமைகள்,கொடூரங்கள்,உயிர்ப்பலிகள்,வன்முறைகள்,இரத்தங்கள்,அவலங்கள்,
அகதிகள் எதற்காக... இதற்கெல்லாம் காரனம் எதுவோ... எல்லாவற்றிக்கும் மூலக்காரனம் மனித நேயம் தொலைந்து போனமையே.இது தொடர்ந்தால் மனித உயிர்களும் மலிவாய் போய்விடலாம் இவ்வுலகில்.

மற்றவர்களுக்குக்கு உதவவும் வேண்டாம்.. உணவளிக்கவும் வேண்டாம்.. உயிரோடு வாழவிடுங்கள். அவர்கள் தொடர்வார்கள் அவர்களின் வாழ்க்கையை. பரந்து விரிந்த இந்த பூமியில் எங்கும் கிடைக்கலாம் அவர்களுக்கான உணவோ.. உடையோ.. உறையுலோ...

இதைச்சொல்லும் போது யாழ்ப்பானத்தைச் சேர்ந்த "தமிழினி" எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது இதோ...

ஓசோன் துளைகளை
விட்டு விடுங்கள்
துப்பாக்கி முனைகளின்
துளைகளை
அடைக்கப்பாருங்கள்
பூமி தொடர்ந்தும் சுவாசிக்கும்....

இரத்தமோடும் இப்பூமியிலேதான் பூக்களும் புன்னைகளும் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கிறது வாங்க நிரப்பலாம் இப்பூமியை பூக்களாலும் புன்னகைகளாலும்.வழி செய்வோம் மனிதநேயம் வளர.

நான் சொன்னது சரியா.. பிழையா.. மறக்காமல் சொல்லிட்டு போங்க மகா ஜனங்களே....  இது எனது பதிவுலக ஆரம்ப பதிவுகளில் ஒன்று அப்போது யாரிடமும் சென்று சேரவில்லை அதனால் மீள்பதிவாக இங்கே...

20 comments:

Chitra said...

தமிழினியின் கவிதை - சிந்திக்க வைக்கிறது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓசோன் துளைகளை
விட்டு விடுங்கள்
துப்பாக்கி முனைகளின்
துளைகளை
அடைக்கப்பாருங்கள்
பூமி தொடர்ந்தும் சுவாசிக்கும்....

நச் வரிகள்! இந்த தமிழினியை எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்! தமிழினி பத்மனாதனா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நான் சொன்னது சரியா.. பிழையா.. மறக்காமல் சொல்லிட்டு போங்க மகா ஜனங்களே.... இது எனது பதிவுலக ஆரம்ப பதிவுகளில் ஒன்று அப்போது யாரிடமும் சென்று சேரவில்லை அதனால் மீள்பதிவாக இங்கே...


நீங்க சொல்வது சரிதான்! இதை எல்லோரும் உணர்ந்தால் நன்று!

Philosophy Prabhakaran said...

நீங்க சொல்றது சரிதான் மக்கா...

நிறைய பேருக்கு இப்படிதான் ஆரம்ப கால பதிவுகள் பிரபலமாகாமல் இருக்கும்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ "மனிதநேயம்"இதைப்பற்றி நாம் கவலைப்படுகிறோமா... இதை எங்கே பெற்றுக்கொள்ளலாம்.. அதன் விலை என்ன...?ஃஃஃஃஃ

வாங்குவதற்கோ பலர் உண்டு விற்பதற்குத் தான் யாருமே இல்லை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை நல்லாருக்கு.. மீள் பதிவு ஐடியா கரெக்ட்

Jaleela Kamal said...

நீங்கள் சொல்வது மிகச்சரியே, கவிதையும் அருமை

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.ரியாஸ்...

இது போன்ற பதிவுகள் எல்லாம் மனதுக்கு ரீசார்ஜ் போன்று... எனவே, மூன்று மாதத்துக்கு ஒருமுறை மீள்பதிவு செய்யுங்கள்.

பிறருக்கு நன்மை செய்வது மனிதநேயம் என்பது... மாறிப்போய்... பிறர்க்கு தீமை செய்யாதிருப்பதே மனித நேயம் என்றாகிவிட்டது.

காலப்போக்கில் பிறர்க்கு 'அளவோடு தீமை செய்வதே' மனிதநேயம் எனப்படலாம்..!

இறைவன்தான் எல்லாரையும் காப்பாற்ற வேண்டும்.

ஜெய்லானி said...

யோசிக்க வைத்த பதிவு ரியாஸ்..!! :-))

செல்வா said...

//மனிதம் பற்றி பேசவோ.. மனித நேயம் பற்றி எழுதவோ.. அறிவோ அனுபவமோ வயதோ எனக்கில்லை என நினைக்கிறேன்/

அதுக்கு அனுபவமோ , அறிவோ தேவை இல்லைன்னு நினைக்கிறேங்க .. மனித நேயத்துக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ?

செல்வா said...

//மற்றவர்களுக்குக்கு உதவவும் வேண்டாம்.. உணவளிக்கவும் வேண்டாம்.. உயிரோடு வாழவிடுங்கள்//

எனது கொள்கையும் இதுதாங்க .. நாம உதவனும்கறது இல்லை ,, அடுத்தவங்கள பத்தி அதிகமா பேசாம அதாவது தவற பேசாம அவுங்களோட வளர்சில பொறமை படாம இருந்தாலே போதும் .. ரொம்ப நல்லா இருக்கும் ..

நிரூபன் said...

ஓசோன் துளைகளை
விட்டு விடுங்கள்
துப்பாக்கி முனைகளின்
துளைகளை
அடைக்கப்பாருங்கள்
பூமி தொடர்ந்தும் சுவாசிக்கும்....//

பதிவின் மொத்தக் கருத்துக்களையும் நெஞ்சில் நிறுத்த இந்தச் சிறிய வரிகளே போதும். நீ வாழா விட்டாலும், பிறரை வாழவிடு எனும் கொள்கையை எத்தனை பேர் கடைப் பிடிக்கிறார்கள். சக மனிதர்களைத் துன்புறுத்துவதிலல்லவா இன்று மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சி காண்கிறார்கள்.

Jana said...

நல்லாயிருக்கு. மேலதிகமான கொஞ்சம் பேசணும் மெயில் பண்ணுறன்.

Riyas said...

@ chitra

@ பிலாசபி பிராபரன்

@ ம.தி.சுதா

@ சி.பி.செந்தில்குமார்

@ ஜலீலா கமால்

@ முஹம்மத் ஆசிக்

@ கோமாளி செல்வா

@ ஜெய்லானி

@ நிரூபன்

தங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Riyas said...

@ ஓட்டவட நாராயணன்,


//நச் வரிகள்! இந்த தமிழினியை எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்! தமிழினி பத்மனாதனா?//

தமிழினி பத்மனாதனா என்பது சரியாக தெரியவில்லை.. சுமார் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சூரியன் எப் எம் மில் இவரின் கவிதைகளை வைத்தே ஒரு நிகழ்ச்சி செய்தார்கள் அப்போது கேட்டது.. மிக அருமையான கவிதைகளை எழுதக்கூடியவர்..

Riyas said...

@ ஜனா

//நல்லாயிருக்கு. மேலதிகமான கொஞ்சம் பேசணும் மெயில் பண்ணுறன்//

சரி பன்னுங்க் ஜனா அண்ணா.. எதிர் பார்க்கிறேன்,,

modirizi@gmail.com

ஹேமா said...

ம் ...ரியாஸ் மனதைத் தொடும் பதிவு.உண்மையும் கூட.மனிதநேயம் இணைந்தால் மட்டுமே இந்தப் பதிவு பொருந்தும்.அடிமைப்படுத்தினால்...அடித்து அழித்தால்...எதிர்க்க வரும்தானே !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மீள்பதிவா இருந்தா என்ன தலைவரே... அருமையான விஷயத்தைத்தான் சொல்லி இருக்கீங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் உங்க ப்ரொஃபைல் படத்தை மாத்திட்டீங்க...? முன்னாடி நல்லா இருந்துச்சே?

'பரிவை' சே.குமார் said...

இதை எல்லோரும் உணர்ந்தால் நன்று!

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...