தேடலே வாழ்க்கையாக..!


கொஞ்சம் பசி
கொஞ்சம் ருசி
உணவைத்தேட...
கொஞ்சம் ஆசை
கொஞ்சம் கனவு
உழைப்பைத்தேட...
கொஞ்சம் வலி
கொஞ்சம் சோர்வு
ஓய்வைத்தேட...
கொஞ்சம் காதல்
கொஞ்சம் காமம்
துனையைத்தேட...
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் கவலை
நிம்மதி தேட...
கொஞ்சம் முதுமை
கொஞ்சம் இயலாமை
மரணம் தேட...
தேடலில் தொடங்கி
தேடலிலே
முடிகிறது வாழ்க்கை..!

12 comments:

Admin said...

தேடலில் தொடங்கி
தேடலிலே
முடிகிறது வாழ்க்கை..!

அருமை..

த.ம-2
அன்போடு அழைக்கிறேன்..

மௌனம் விளக்கிச் சொல்லும்

Riyas said...

@ மதுமதி

மிக்க நன்றி வருககைக்கும் வாழ்த்துக்கும்.

Riyas said...

@ நண்டு @நொரண்டு -ஈரோடு

மிக்க நன்றி.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
எளிய சொற்களில் வீரியம் மிக்க கவிதை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

Riyas said...

@Ramani

மிக்க நன்றிங்க..

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! வாழ்த்துக்கள்!
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Mohamed Faaique said...

நல்லா இருக்கு ரியாஸ்..

ஹேமா said...

கொஞ்சம் கொஞ்சமான தேடல்தான் வாழ்வை நிறைக்கும் ரியாஸ்.வாழ்த்துகள்.பிறக்கும் புது வருடத்தில் இன்னும் ஆசைகளும் தேடல்களும் அதிகரிக்கட்டும் !

சுதா SJ said...

தேடல் உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்.... எங்கையோ கேட்ட சினிமா வரிகள்தான் நினைவுக்கு வருது.
தேடல் வாழ்வுக்கு ரெம்ப அவசியம் பாஸ் ;))

சுதா SJ said...

சிம்பிளான வரிகள் கொண்ட அழகான கவிதை பாஸ் ;))

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி என் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களிற்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உரித்தாகட்டும் சகோ .

சேகர் said...

தேடுவதை நிறுத்திவிட்டால், தேடியது கிடைத்ததாக அர்த்தம் நண்பரே..

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...