இப்பயெல்லாம் எனக்கு ஒரு பிளாக் இருப்பதையே மறந்து போய் விடுகிறேன்.. முன்பெல்லாம் எதுவும் எழுத கிடைக்காட்டியும் கவிதை என்ற பெயரில் எதையாவது கிறுக்கி உங்களெல்லாம் கடுப்பேத்திக்கிட்டிருந்தேன்.. இப்போ முன்பு போல் கற்பனையெல்லாம் தாறுமாறா வரமாட்டேங்குது..கற்பனையெல்லாம் வேறு பக்கம் திசைதிரும்பிடிச்சு போல!!! கக்கூஸ்ல உக்காந்து யோசிச்சாக்கூட ம்ஹும்..
அண்மையில் இலகையின் இளம் ஊடகவியலாளர்,கவிஞர்,சிறுகதை எழுத்தாளர் என பலராலும் அறியப்பட்ட ஒருவருடன் ஜீமெயில் சாட்டிங்கில் அறிமுகமானேன்.. அவர் எழுதிய ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது, அதை அவரிடம் சொல்லி நானும் ஒரு பிளாக்கில் எழுதுவதாக கூறி என் பிளாக் லிங்கை அனுப்பினேன்.. பிறகு ஒரு முப்பது நிமிடத்துக்கு பிறகு நான் எழுதிய சில உலக சினிமா பதிவுகளை சுட்டிக்காட்டி நல்லாயிருப்பதாக கூறி ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து தமிழிலேயே எழுதும் படி ஆலோசனையும், நிறைய எழுதும் படியும் ஊக்கப்படுத்தினார்..
எனக்கு ரொம்பவே சந்தோஷம்.. ஒரு எழுத்தாளரிடமிருந்து பாராட்டும் ஊக்கமும் பெற்றது.. இருந்தாலும் இன்னுமொரு விடயம் மனதுக்குள் ஓடியது.. நம்ம தளத்தில் அதிகமாக கவிதைகள்தானே எழுதியிருக்கிறோம்.. அவர் ஒரு கவிஞராக இருந்தும் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லலியே ஒரு வேளை அதெல்லாம் அவர் பார்க்கலியோ..என நினைத்து "நான் எழுதியிருக்கும் கவிதைகளை பற்றி என்ன நினைக்கிறிங்க" என தட்டிவிட்டேன்.. அதன்பிறகு அவர் சாட்டிங்கிற்கு வரவேயில்லை... நான் எழுதின கவிதைகள் அவ்வளவு மொக்கையாவா இருக்கு!!!
இருந்தாலும் நான் எதற்கும் கவலைப்படப்போவதில்லை!! நான் எழுதுவதை எழுதிக்கொண்டேதானிருப்பேன்.. என் எழுத்தை படிக்கும் ஒருவராவது இருக்கும் வரையில்..(யாராலயும் உங்கள காப்பாற்ற முடியாது ஹே ஹே)
i'am a nobody.
Nobody is perfect.
Therefore,
i'am perfect!
இப்போதெல்லாம் ஆபிசில் கூகுல் ரீடரில் மட்டும் பதிவுகளை படித்துவிடுவதால்.. கமெண்ட் ஓட்டு போட கிடைப்பதில்லை.. சில முக்கிய பதிவுகளுக்கு மட்டும் கமெண்டும் ஓட்டும் போடுகிறேன்.. நான் இப்போதெல்லாம் ஓட்டுக்காகவோ ஹிட்சுக்காகவோ பதிவுகள் எழுதுவதில்லை.. யாருக்கும் மொய் வைக்கும் நோக்கில் கமெண்ட் போட செல்வதுமில்லை.. முன்னொரு காலத்தில் செய்தது போல் நிறைய பதிவுகளுக்குச்சென்று அது மொக்கையாகயிருந்தாலும் "அருமை,சூப்பர்" என கமெண்ட்யிடுவதுமில்லை..
இன்று வந்த மேகங்கள்
கலைந்து சென்றாலும்
நாளையும் வரலாம்
நற்செய்தி தரலாம்.!!
ஜஸ்ட் சும்மா டைம்பாஸ் பொழுது போக்கு.. அப்பிடின்னு மொக்கையா தலைப்பு வெச்சும் உள்ள வந்துட்டிங்க.. சரி வந்ததுதான் வந்திட்டிங்க இந்த ஜோக்ஸோடு கொஞ்சம் ரிலாக்ஸாகிட்டு போங்க.. இன்றைய காலத்துல காசு பணத்தவிட மனநிம்மது தேடுவதுதான் கடினமான வேலை..
ரசித்த சில ஜோக்ஸ்..
ஆபிசர்: பியுஸ் போயி ஒரு மாசம் ஆகுது இப்ப வந்து கம்ளைண்ட் குடுக்கறீங்க?
தமிழ்நாடு குடிமகன்: சாரி சார். பவர் கட்டுன்னு நெனச்சுட்டேன்..
நோயாளி என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க டாக்டர்!
டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!
நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!"
"வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?
திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன்.
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன,
ஆனா உன் ரூம் லைட்டே எரியல?....: ... ....-
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!!!
"வீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..
திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...
அண்மையில் ரசித்த குறும்படமொன்று.. மிகச்சிறிய நேரத்துக்குள் தந்தை-மகன் உறவை "நச்" என சொல்கிறது இந்த குறும்படம்.. தாயை அதிகமாக நேசிக்கும் நாம், தந்தையின் மன உணர்வுகளை அதிகமாக நாம் புரிந்துகொள்வதேயில்லை!!! குறிப்பாக ஆண் பிள்ளைகள்!!!
11 comments:
ஜோக்ஸ் கல..கல பாஸ்..நீங்க கவிதை எழுதுங்க..நான் கட்டாயம் வருகிறேன்..அழகாக பொழுது போக்கிய பகிர்வை வழங்கிய தங்களுக்கு நன்றிங்க.
நாங்க இருக்கோம் தயங்காம எழுதுங்க .
NANPAA!
ITHU MOKKAI ILAAI NALLAA IRUKKU!
JOKES ARUMAI!
THODARNTHU EZHUTHUNGA!
வணக்கம் ரியாஸ்!
நீங்கள் தொடர்ந்தும் எழுதனும்..
நீங்க சும்மா பொழுதுபோக்கிற்கு என பதிவு போட்டாலும், மனதைக் கலங்க வச்சுட்டீங்க!!
அந்த காணொளியைச் சொல்றேன்..
ரொம்ப அருமை!
இந்த காணொளியை என் தளத்தில் பகிர தங்களிடம் அனுமதி வேண்டுகிறேன்!
@Arun
//இந்த காணொளியை என் தளத்தில் பகிர தங்களிடம் அனுமதி வேண்டுகிறேன்!//
Ok no problem..
"ஜோக்ஸ் சிரிக்க வைத்தாலும், முடிவில் காணொளி மனதை நெகிழ வைத்தது !"
நண்பா குறும்படம் சும்மா நச் என்னு இருக்கு..சூப்பர்..
நன்றி!
வணக்கம். இது தங்கம்பழனி.. தங்களின் தளத்தில் இடம்பெற்ற இந்த குறும்படத்தை நண்பர் அருண் பழனியப்பன் கூகிள் ப்ளசில் பகிர்ந்திருந்தார். அதன்விளைவாக எனது தளத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறேன்.. நேரமிருக்கும்போது வாசிக்க அழைக்கிறேன். தங்களால் ஒரு அருமையான பாசமிகு வீடியோவை காண நேர்ந்தது.. நன்றி தங்களுக்கும், தங்களின் பதிவை அறிமுகப்படுத்திய நண்பர் அருண் அவர்களுக்கும்.. !!
எனது தளத்தில் இடம்பெற்ற பதிவு வயதான பெற்றோர்கள் பாரமா...? பாவமா..?
Post a Comment