பாலைவனக்காற்று-கலகல-ஜட்டி..!!


பாலைவனக்காற்றாய்
பார்வைகள் வீசிச்செல்கிறாய்
சுடும் மணலாய்
சுடுகிறது மனசு..!!

பாலைவனமெங்கிலும்
பசுமைதான் நீ
சிரிப்பொலிகளை
சிதறிச்சென்றால்..!!

பாலைவனப்பயனியாய் நான்
பயனத்தின் தூரமெங்கும்
இளைப்பாறிச்செல்கிறேன்
உன் வார்த்தைகளோடு..!!
கவிதை பிடிக்காதவங்க உள்ளே வந்திருந்தா.. அவங்களுக்காக சில கல கல ஜோக்ஸ்..

"ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."!!!

***********
கேடி  : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.
கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.
கேடி  : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது

***********
இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"
"படத்தோட பேரு?"
"ஜிம்மி ரிடர்ன்ஸ்

இரண்டுமே பிடிக்கலையா.. இந்த "ஜட்டி" குறும்படத்த பாருங்க, பேருதான் ஒருமாதிரியிருக்கு ஆனா குறும்படம் நன்றாக நகைச்சுவையாகவே இருக்கு.. பிண்ணனியிசை சேர்ப்பதற்கு பதிலாய் பிண்ணனியில் சில பிரபலமான பாடல்களை ஒலிக்கவிட்டிருப்பது அழகு.. ஒரு ஜட்டிக்காக வேண்டி என்னெல்லாம் பண்றாருன்னு நீங்களே பாருங்க.. சிரிங்க!!!


11 comments:

ஆத்மா said...

க.க.க........போ...வித்தியாசமான பதிவிடல்...:)

ஆத்மா said...

நண்பா ஜட்டி மேட்டர் சூப்பர்......

aalunga said...

கவிதை நல்லா இருந்தது.. இன்னும் எழுதுங்க.

ஜட்டி செம படம்!! எங்கிருந்து தான் இப்படியெல்லாம் புடிக்கிறீங்க?

Anonymous said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

Seeni said...

kavithai!
arumai!
jatti-
kalakkal!

அம்பலத்தார் said...

ரியாஸ் நல்லதொரு கதம்ப பதிவு போட்டிருக்கிறிங்க.

முத்தரசு said...

எல்லாமே பிடிச்சிருக்கு

கவிதை சொன்ன விதம் ம் ம்

ஹாலிவுட்ரசிகன் said...

நமக்கு கவிதையெல்லாம் புரியுற அளவுக்கு மனது பக்குவப்படல. ஆனால் அந்த ஜட்டி குறும்படம் நல்லாயிருந்துச்சு.

திண்டுக்கல் தனபாலன் said...

"கவிதை அருமை ! அந்த கண்ணொளி சூப்பர் !"

செய்தாலி said...

நல்ல பதிவு
கவிதை அருமை சகோ

Prem S said...

//சுடும் மனலாய்
சுடுகிறது மனசு..!!//அருமையான உவமை

எழுத்துப்பிழையை கவனிக்க "மணல்"

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...