கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!



கிரிஸ்டோபர் கொலம்பஸ் இங்கே வந்து தற்செயலாக நம்மூர் பெண்னை
மணந்திருந்தால். அவர் நாடு கான் பயணம் தொடங்குமுன் அவரின் மனைவி எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருப்பார் என ஒரு மொக்கை கற்பனை.

வாங்க கொலம்பஸ் ஐயாவின் நம்மூர் மனைவி எப்படியெல்லாம் வறுத்தெடுக்கிறாண்டு பார்ப்போம்.. பாவம் கொலம்பஸ் சிக்கிட்டாரு சிறுக்கிகிட்ட..

தொடங்கிடுச்சி விசாரனை!
 

# எங்க போக கிளம்பிட்டிங்க?

# யாருக்கூட போக போறீங்க?

# எதுக்கு போறீங்க?

# எப்படி போறீங்க?

# எத தேடிக்கிட்டு போக போறீங்க?

# அதுக்கு நீங்களேதான் போகனுமா வேற யாரும் இல்லயா.?

# உங்ககூட பொண்னுங்க யாராவது வாறாங்களா.?

# நீங்க போனா நான் தனியே இங்க என்ன பன்றது?

# நானும் உங்ககூட வந்திடவா.?

# திரும்பி எப்ப வருவீங்க.?

# இரவுச்சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வந்து போகேலாதா.?

# திரும்பி வரும் போது எனக்கு என்ன கொண்டு வருவீங்க.?

# எனக்கெண்டா விளங்கள்ள என்னத்த கண்டுபுடிச்சி என்னத்த் கிழிக்க போறீங்கண்டு..
# எங்கிட்டயிருந்து விலகியிருக்கிறதுக்கு நீங்க போடுற ப்லேன்தானே இது.?

# நான் என்ன பாவம் பண்ணிநேன் உங்களுக்கு?

# இன்னும் எத்தன நாடு பாக்கியிருக்கு கண்டுபிடிக்க.?

# ஒரு கிழமையில திரும்பி வரல்லன்னா நான் எங்க அப்பா வீட்டிக்கு போயிடுவேன்.!

# எங்க போனாலும் எனக்கு செய்தி அனுப்புவிங்களா.?

# இதேமாதிரிதான் முன்னமும் ஒரு தடவ போய் மாசத்துக்கு பிறகுதான் வீடு திரும்பினீங்க..

# வீட்டோட இருக்குற மாதிரி ஒரு வேலய தேடிக்கேலாதா?

# நேரத்துக்கு சாப்பாடு கிடைக்குமா எனணெய் தேச்சி குளிக்க முடியுமா?

# போறத்தோட அப்பிடியே நல்ல பட்டு புடவையிருந்தா வாங்கிட்டு வாங்க.

அப்பாடா... இவ்வளவுத்துக்கும் பதில் சொல்லி கிளம்புறதுக்குள்ள... பத்து நாடு கண்டுபுடிச்சிடலாம்... புதிய நாடும் வானாம் மண்னாங்கட்டியும் வானாம்ன்னு
வீட்டோடயே இருந்திடலாம்னு நினைத்திருப்பாரு கொலம்பஸ் சார்..




4 comments:

Anonymous said...

கடைசி வரை அமெரிக்கா என்ன அமஞ்சிக்கரையை கூட அவர் தாண்டி இருக்க மாட்டாருங்க .. நம்ம ஊரு பெண்கள் சும்மாவா...

Seeni said...

athu sari.....

haa haaa...

திண்டுக்கல் தனபாலன் said...

இது வெறும் சாம்பிள் என்று நினைக்கிறேன்...

ஹுஸைனம்மா said...

இது கற்பனையாக இல்லாமல் நிஜமாக இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. அமெரிக்கா கண்டுபிடிக்கபப்டாமல் போயிருந்திருக்குமே! :-))

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2