தொல்லை தரும் பகல்கள்!


இரவுகளை விழுங்கி
பகல்கள் நீண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது
இருளின் குளிர்மையை குடித்து
அனலாய்
கக்கிக்கொண்டிருக்கிறது
இரவெங்கும் ஒளிரும் விளக்குகள்
எங்கும் சூரியனின் சர்வாதிகாரம்
தப்பே செய்யாமல்
தண்டனையாய்
தீயாய் கொழுத்தும் வெயில்
நிலவின் பசுமைக்காய்
ஏங்கித்தவிக்கிறது மனசு!

அழகான இரவுகள்
அவசரமாய் முடிந்துவிடுகிறது
தொல்லை தரும் பகல்கள்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// இருளின் குளிர்மையை குடித்து அனலாய் கக்கிக்கொண்டிருக்கிறது... ///

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

அழகான இரவுகள்
அவசரமாய் முடிந்துவிடுகிறது
தொல்லை தரும் பகல்கள்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!

----

ரசித்தேன்....

தனிமரம் said...

அருமை வரிகள் ரியாஸ்§ பகல்பொழுது கொடுமைதான் வேலை அதிகம் தானே!ஹீ

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அழகான வலி

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2